குடலிறக்கம் குணமாக
🇨🇭#குடல்_இறக்கம்_ஹெர்னியா
#எனப்படும்_பிரச்சனைக்கான
🇨🇭#இயற்கை_வைத்தியங்கள்…❓❗
💊 குடலிறக்கம் என்ற ஹெர்னியா💊
குணமாக…❓❗❗
⭕ #மருந்து_01
சித்தரத்தை-200கிராம்
கடுக்காய் -200 கிராம்
திப்பிலி-200கிராம்
வால் மிளகு-400கிராம்
சாதிக்காய் 150 கிராம்
மேற்கண்ட கடைசரக்குகளை புடைத்து தூசி நீக்கி சிறிது பசுநெய் விட்டு பொன்னிறமாக வறுத்து தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட சூரணத்தை கால் (அ) அரைதேக்கரண்டி வீதம் தேனில் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிட நாட்பட்ட
பசியின்மை நாருசியின்மை குமட்டல் வாந்தி வயிறு உப்பிசம் பொருமல் மருந்தீடு (இடுமருந்து) காமாலை ரத்த சோகை வாய்வு பிடிப்பு அண்ட வாயு (விரைவாதம்)குடல் வாய்வு (ஹெர்னியா) என சகல வாய்வுகளும் தீரும்.
சளி இருமல் பீனிசம் சுவாசகாசம் (ஆஸ்துமா) மூக்கடைப்பு தொண்டையில் சதை அடைப்பு(டான்சில்) கபத்தினாலும் வாய்வினால் வரும் மூச்சுதிணறலுக்கு குணமளிக்கும் ஒர் அரு மருந்து.
💊 #மருந்து_02💊
முருங்கைக்கீரை 20 கிராம்.
பூண்டு 10 கிராம்.
மிளகு2கிராம்.
இவைகளை எல்லாம் அரைவேக்காடு வேகவைத்து லேசாக உப்பு சேர்த்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக செய்துசாப்பிடவும்.
💊 #மருந்து03💊
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு கால் ஸ்பூன்
முள்ளங்கி துருவல் 25 கிராம்
கோதுமை மாவு 25 கிராம்
இந்து உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
மிளகு சிரகம் இந்து உப்பு இவற்றை பொடித்து முள்ளங்கி துருவல் கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து அடைபோல் தட்டி நல்லெண்ணெய் விட்டு ரொட்டி சுடுவது போல் சுட்டு சாப்பிட்டு வரவும்...
காலை 1 இரவு 1 சாப்பிட குடல் இறக்கம் ஹெர்னியா சரியாகும்..
💊 #மருந்து04💊
சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்), ஓமம், பெருங்காயம், இந்துப்பு (அல்லது கல் உப்பு)
ஆகிய 7 பொருட்களையும் சம அளவு எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கலந்த கலவைக்கு சம அளவு காய்ந்த கறிவேப்பிலைப் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அன்னப் பொடி என்று பெயர். இதனை சோறுடன் கலந்தோ அல்லது மோருடன் கலந்தோ உண்ண அதிகப்படியான காற்று கட்டுப்படும்.
💊 #மருந்து05💊
சுக்கு, மிளகு, கிராம்பு, கல் உப்பு
ஆகிய நான்கையும் சம அளவு கலந்து பொடித்துக் கொண்டு அதில் 8 சிட்டிகை அளவு (pinch) 3 வேளை உணவிற்கு முன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் வாயு கட்டுப்படும்.
💊#மருந்து_06💊
சித்தரத்தை ................ இரண்டு கிராம்
அதிமதுரம் ................ இரண்டு கிராம்
சீந்தில் கொடி ................ இரண்டு கிராம்
ஆமணக்கு வேர் சூரணம் ................ இரண்டு கிராம்
குறுந்தொட்டி சூரணம் ................ இரண்டு கிராம்
நெருஞ்சில் முள் அல்லது
நெருஞ்சில் வேர் சூரணம் ................... இரண்டு கிராம்
ஆகிய ஆறு பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவின்படி எடுத்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடி கட்டி நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்.
⭐குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு இரண்டு மூன்று முறை குடிக்க வேண்டும். இரண்டு மூன்று மாதங்களில் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும், மேலும் அதன் நோய் பாதிப்பை சரி செய்கிறது .
⭐இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
⭐ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.
ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.....
⭐ஹெர்னியா இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மிளகு,மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
⭐டீயிலேயே க்ரீன் டீ தான் ஹெர்னியாவை குணப்படுத்துவதில் சிறந்தது.ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.
⭐குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.*இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
⭕ ஹெர்னியாவுக்கு எடுத்து கொள்ளவேண்டிய பழங்கள் காய்கறிகள்❓
அவகேடோ, முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள்.
பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.
பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.
புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச்
சாறு, ஆப்பிள்.
🔴 #ஹெர்னியா_பாதிப்பினைத் #தவிர்க்க❓
* முறையான உடற்பயிற்சி மிக அவசியம். ஆனால் முரட்டுத்தனமான பயிற்சிகள் தேவையற்றது.
* உடல் எடையினை சரியான அளவில் வைத்திருங்கள்.
* முறையான அளவான உணவு நன்மை பயக்கும்.
* புகை பிடிப்பதனை விட்டு விடுங்கள்.
* நன்கு நீர் குடியுங்கள்.
* 3 நேர உணவு முக்கியம்தான். காலை, பகல், இரவு என மூன்று வேளை உணவு அவசியம்தான்.
ஆனால் இரவு உணவு பெரிதாக இருக்கக் கூடாது. மேலும் 3 வேளை உணவினை 6 வேளையாக சிறிது, சிறிதாக பிரித்தும் உண்பது நல்லது.
* எப்பொழுதுமே முழு தானியம், பழம், காய்கறி, கொழுப்பு சத்து இல்லாத பால் இவை இருக்க வேண்டும்.
* கொழுப்பில்லாத அசைவம், முட்டை, கொட்டைகள் அவசியம்.
* அதிக உப்பு, சர்க்கரை சேர்த்த உணவுகளை கண்டிப்பாய் ஒதுக்க வேண்டும்.
* அளவு என்பது மிக அவசியம். அள்ளி அள்ளி போட்டு நீங்களும் சாப்பிடாதீர்கள். பிறரையும் உபசரிப்பு என்ற பெயரில் கெடுக்காதீர்கள்.
* குழந்தைகளுக்கு சர்க்கரை மிகுந்த உணவுகளைக் கொடுக்காதீர்கள்.
* அதிக வெய்யிலில் விருந்து போன்ற நிறைய உணவுகள் வேண்டாம்.
* சைவ உணவு உங்கள் உடல் நலனுக்காகவே அறிவுறுத்தப் படுகின்றது.
* பழங்களையும், காய்கறிகளையும் நன்கு கழுவாமல் உண்பது நோயை கை நீட்டி வரவேற்பதாகும்.
* உங்கள் உடல் பருமன் உங்களுக்கு எமனாகி விடக்கூடாது.
* உழைப்பில்லாத உடம்பு இருதய நோயினையும் சில வகை புற்று நோய்களையும் கொண்டு வந்து விடும்.
உங்களுக்கு குடலிறக்கம் உள்ளது என நீங்கள் சந்தேகப்படும் போது ஏற்படும்
👉 ஜுரம்
👉 ரத்த கசிவு
👉 சிறுநீர் செல்வதில் கடினம்
👉 அதிக வியர்வை
👉 அதிக வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுங்கள்.
ஹெர்னியாவுக்கு [ முற்றிவிட்டால் ]
அறுவை சிகிச்சை அவசியம்.
அறுவை சிகிச்சை முடிந்த பின் இருமல், தும்மல் இல்லாது இருப்பது மிகவும் நல்லது.
* அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் வரை கையருகில் ஒரு தலையணை வைத்துக்கொள்ளுங்கள்.
* இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் தலையணை வைத்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் லேசாய் அழுத்திக் கொள்வது இதமாய் இருக்கும்.
* மெல்லிய பருத்தி ஆடை களை அணியுங்கள்
* மலச்சிக்கல் இல்லாதிருக்க வேண்டும். தேவைப்படின் அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
* நிமிர்ந்து நடங்கள். கூன் போடாதீர்கள்.
* கனமான பொருட்களை தூக்காதீர்கள்.
🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭
💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊
☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎
Comments
Post a Comment