காது பிரச்னை தீர
🇨🇭#காது_பிரச்சனைகளும்
#அதற்க்கான………
🇨🇭#வீட்டு_வைத்தியமும்❓❗
👂காது இந்த இரண்டு எழுத்து உறுப்பு ஒலியைக் கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும்கூட மிக அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தைக்கு காது கேட்கத் தொடங்கினால்தான், அது பேசத் தொடங்கும். இல்லையென்றால் அதற்குப் பேச்சும் வராது. மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு, மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல காரணங்களால் இப்போது காது பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.
👂ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களைப் பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது.
👂ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது.
👂சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தைக் கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.
👂அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தைக் குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களைப் பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
👉குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
👉குழந்தைக்குப் பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.
👂தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.
⭕ காதுவலிக்குக் காரணம்❓
👂காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும். மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது. தொண்டையில் சளி பிடித்து புண் உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்.
⭕ காதில் சீழ் வடிந்தால்❗❓
👂காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இப்போதாவது இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கின்ற `ஈஸ்டாக்கியன் குழல்’ (Eustachian tube) வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும். பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு வெளிக்காது வழியாக சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்பநிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
👉 காலம் கடத்தினால், ‘டிம்பனாஸ்டமி’ (Tympanostomy) எனும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
🔴 #காதில்_குரும்பி_சேர்ந்தால்
#அகற்றும்_முறைகள்❓❓
👂பலர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவதுவைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ஏற்படவும் காரணமாகிறது.
👂காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு, காற்றில் இருக்கும் தூசி, கிருமிகள் எதுவும் உட்காதுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இந்த மெழுகு அதிகமாகச் சுரக்கும்போது, அது உட்காதிலிருந்து வெளிக்காதுக்குத் தள்ளப்படும்.
👂இதைச் சுத்தப்படுத்துவதாக நினைத்து நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ், காதில் உள்ள தசைகளைப் பாதிக்கும். இதனால், காதில் எரிச்சல், அரிப்பு ஏற்படலாம். மேலும், சில சமயங்களில் வெளியே வர இருக்கும் மெழுகை நாமே உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல், காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில், சூடான எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை எல்லாம் உள்ளே வார்ப்பார்கள். இது, கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இவை காது ஜவ்வில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் காது கேளாமைகூட ஏற்படலாம்.
👂காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி (Ear wax). காதுக்குள் `செருமோனியஸ்’ சுரப்பிகள் (Ceremonious glands) உள்ளன. இவைதான் காதுக்குள் ஒருவித திரவத்தைச் சுரந்து, குரும்பியாக மாறி, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்துவிடாதபடி தடுப்பது, இந்தக் குரும்பி தான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.
👂குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், மூன்று வழிகளில் அதை அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குக் காதின் உள்புறமாக குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட்களுக்கு விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்து விடும் என்றாலும், நாள்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்சு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.
👂காதில் இருந்து தானாகவே வெளிவரும் மெழுகை, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
👂தினமும் வெளிக்காதையும் சுத்தமான, ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.
👂குளிக்கும்போது, காதுக்குப் பின்புறம் சோப்பைத் தடவி, மிதமாகத் தேய்த்துவிட வேண்டும்.
👂குளித்து முடித்த பின்னர், துண்டால் விரலைச் சுற்றி காது மடல்களையும் குழியின் மேற்புறத்தையும், சுத்தம் செய்ய வேண்டும்.
👂எந்தக் காரணத்துக்காகவும் உட்காதினுள் விரலை விடக் கூடாது. காதில் அரிப்பு ஏற்பட்டாலோ சீழ் வடிந்தாலோ, தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
⭕ காது குடைவது
👂காதுக்குள் ஏதாவது பிரச்னை என்றால், உடனே நாம் கையில் எடுக்கும் பொருள் `பட்ஸ்’தான். காதுக்குள் குரும்பி சேர்ந்தால் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம். இந்த முயற்சி, குரும்பியை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிவிடுமே தவிர, வெளியில் கொண்டுவராது. மாறாக, செவிப்பறையைத் தாக்கிப் புண்ணாக்கிவிடும். ஆகவே, கையில் தொடக்கூடாத ஒரு பொருள் உண்டென்றால் அது `பட்ஸ்’தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது. ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால், செவிப்பறை பழுதடைந்து, பின்னொரு நாளில் காது கேட்காமல் போகும்.
⭕ காதுக்குள் அந்நியப் பொருள்
👂காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையை சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம் அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி அதில் இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சூடான காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றாதீர்கள். அப்படிச்செய்தால், அது காதைப் பாதிக்கும்.
⭕ காது கேளாமை
👂அதீத சத்தம்தான் காது கேளாமைக்கு முக்கியக் காரணம். பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை. 90 டெசிபல் சத்தத்தைத் தினமும் எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கும். வெடிச் சத்தம் போன்ற 140 டெசிபல் சத்தத்தை சில விநாடிகள் கேட்டாலே காது பாதிக்கப்படுவது நிச்சயம். ஆகவே, விமான நிலையம், ஜெனரேட்டர் ஓடுகின்ற தொழிற்சாலைகள் போன்ற சத்தம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.
👂இதனைத் தடுக்க காதில் பஞ்சை வைத்துக் கொள்ளலாம் அல்லது
`இயர் பிளக்’ (Ear Plug) பொருத்திக் கொள்ளலாம். `இயர் மஃப்’ (Ear Muff) அணிந்து கொள்ளலாம். சிலருக்கு நடுக்காதிலுள்ள அங்கவடி எலும்பு பாதிக்கப்படும்போது (Otosclerosis) காது கேட்காது. இதனை குணப்படுத்த ‘ஸ்டெபிடெக்டமி’ (Stapedectomy) எனும் அறுவை சிகிச்சை உள்ளது. பழுதடைந்த எலும்பை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உலோகத்தாலான எலும்பைப் பதித்துவிடுவார்கள். இதன் பலனால் காது கேட்கும்.
⭕பிறவியிலேயே காது கேளாமை
👂பரம்பரைக் கோளாறு, நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்துகொள்வது, கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிடும் சில மாத்திரைகள், கர்ப்பிணிக்குத் தட்டமை வருவது போன்றவை குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேளாமையை ஏற்படுத்துகின்றன, கணவருக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும், மனைவிக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தமாகவும், குழந்தைக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும் இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பிறவிச் செவிடு உண்டாகலாம். அடுத்து, குழந்தைக்கு ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சல் இந்தப் பிரச்னையை உண்டுபண்ணும்.
⭐ காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது❓
* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.
* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.
மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம்
கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது.
#இதுதவிர……❓❗
காது சவ்வு பாதிப்பு,
காது எலும்புகள் பாதிப்பு,
காதில் சீழ்பிடித்தல்,
காது சவ்வில் ஓட்டை விழுதல்,
அதிக இரைச்சல்
காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.
.
🇨🇭#காது_சம்பந்தப்பட்ட_அனைத்தும் #குறைபாடும்_தீரும்❗❓❗❓
👉 காது வலி,இரைச்சல், கேளாமை,
நாள்பட்ட காது கேளாமை நோய் குணமாக…❗❗
💊#தேவையான_பொருள்கள்❓
⭐ பழுப்பு நிரத்தில் உள்ள
வில்வ இலை சாறு
⭐ வெள்ளாட்டு மூத்திரம்
⭐ நல்லெண்ணைய்
மூன்றும் சம அளவு கலந்து அடுப்பில் ஏற்றி நன்றாக காச்ச வேண்டும்.
ஆயில் பதம் வந்ததும் வடிகெட்டி கண்ணாடி பாட்டலில் வடித்து வைத்து இரவு மட்டும் இரண்டு சொட்டு காதில் விட்டு வரவும்.
💊 #மருந்து_ஒன்று 💊
தேவையான பொருட்கள்
ஏலம் - 320 கிராம்
சுக்கு - 160 கிராம்
கூகை நீர் - 80 கிராம்
தாளிசபத்திரி - 40 கிராம்
சிறுநாகப்பூ - 20 கிராம்
மிளகு - 10 கிராம்
இலவங்கம் - 5 கிராம்
சீனா கற்கண்டு - 640 கிராம்
செய்முறை
மேலே உள்ள பொருட்களை பொடித்து சலித்து பின்னர் கற்கண்டை பொடித்து கலந்து பத்திரப் படுத்தவும்.
அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை
அனுபானம் : தேன், நெய், வெந்நீர், பால் முதலியவை ...
⭐ பயன்கள்
நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கும்
தொண்டை ஏற்படும் அழர்சி,
தொண்டை கமரல் மற்றும் நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
💊 #_மருந்து_இரண்டு 💊
ஏலரிசி – 35 கிராம்
லவங்கப்பட்டை – 35 கிராம்
தாளிசப்பத்தரி – 70 கிராம்
மிளகு – 140 கிராம்
அரிசி திப்பிலி – 270 கிராம்
சுக்கு – 210 கிராம்
மூங்கில் உப்பு – 350 கிராம்
சீனா கற்கண்டு – 2240 கிராம்
கற்கண்டு தவிர பிற சரக்குகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே நன்கு வெயிலில் உலர்த்தி அனைத்தையும் ஒன்றுசேர்த்து தூள்ளாக்கி பத்திரப்படுத்தவும். இதனை காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கும் சளி இருமல் குணமாகும். நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
💊வெங்காயசாறு காது வலிக்குச் சிறந்த மருந்து. அதை எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.
💊கடுகை அரைத்து காதின் பின்புறத்தில் போட்டால் காதுவலியும், பழுப்பு வருவதும் குறையும்,
💊கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தேய்த்துவர காதுகளுக்கும் புலன்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
💊கருஞ்சீரகப் பொடியை வெற்றிலைச் சாற்றில் அரைத்துக் காதைச் சுற்றிப் போட வலி, வீக்கம் குறையும். காதில் ஏற்படும் சத்தத்தையும் குறைக்கும்.
சுக்குப்பால் கஷாயம் குடித்தாலும் காதில் ஏற்படும் சத்தம் குறையும்.
💊பூண்டைத் தோல் நீக்கித் தலைப்ப குதியை அகற்றி விட்டு காதில் வைத்தால் காது வலிகுறையும்.
💊எலுமிச்சம் பழசாறு 4 துளிகள் (அ) வெற்றிலைச்சாறு 4 துளிகள் காதினில் விட குணமாக்கும்.தொடர்ந்து வலி இருப்பின் ஒரு வெள்ளைப் பூண்டினை நல்லெண்ணையில் பொறித்து எடுத்து மூன்று சொட்டுகள் விட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
💊காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வலி குறையும்.
💊தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.
💊தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
💊மருதாணியின் வேரை நசுக்கி அதில் வரும் சாற்றினை காதில் விட்டால், காது வலி தீரும்.
💊கொஞ்சம் நல்லெண்ணையில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து, பின் அந்த எண்ணெய்யை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி குறையும்.
💊முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.
💊வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.
💊தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.
💊மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.
💊சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.
💊தேங்காய் எண்ணெயில் மிளகு, வெள்ளைப் பூண்டு போட்டுக் காய்ச்சி இளஞ்சூடாகக் காதில் ஊற்றினாலோ அல்லது உள்ளியைப் (வெங்காயம்) பிழிந்து காதில் விட்டாலோ காது வலி உடனடியாகக் குணமாகும்.
💊தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.
💊ஆலிவ் எண்ணை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.,ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம்.
💊வாழை மட்டை அடுப்பு தீயில் லேசா வைத்து வாட்டி 5 சொட்டு 5 நாள் இரவில் ஊற்றவும். காது வலி தீரும்.
💊வெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் குறையும்.
👉#காதுவலிக்கு👈
விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, வாயை மூடி, வாயில் காற்றை நிரப்புங்கள். கன்னங்கள் உப்பலாகும்.
அப்போது காற்றை காதுவழியாக மெதுவாக வெளியேற்றுங்கள் காது சமநிலைக்கு வந்து காதுவலி நின்றுவிடலாம். காது அடைப்பும் சரியாகிவிடும்.
#காதின்_நலன்_காக்க...
ஒருவர் பயன்படுத்திய ஹெட்போனை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது.
ஹெட்போனில் உள்ள ரப்பரை, குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
செல்போன் ஸ்பீக்கரில் தூசு சேராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்திய செல்போனை இன்னொருவர் பயன்படுத்தும்போது, ஒரு முறை துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது.
அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும.
பென்சில், பேனா, பட்ஸ், குச்சி என்று கண்டகண்ட பொருட்களை வைத்துக் காதைக் குடையக்கூடாது.
குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளது. அடிக்கடி மூக்கை பலமாகச் சிந்தினால் காது கேட்பது குறையும். எனவே, மூக்கை பலமாகச் சிந்தக்கூடாது.
சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.
சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தினமும் தியானம் செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
மதுவும் புகைப்பிடிப்பதும் காதின் நலனைப் பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடைகொடுங்கள்.
🔴 காதுவலிதானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால் அது காது செவிடாக வழிவகுத்துவிடும். மாற்றுமறுத்துவத்தின் படி காதுக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உள்ளது...உடனே பரிசோதனை செய்து கொள்வது நன்று.
Comments
Post a Comment