ஒழுங்கற்ற மாதவிடாய்

 🇨🇭#ஒரு_மாதத்தில்_இருமுறை #மாதவிடாய்……………


🇨🇭#வரக்காரணம்_என்ன❓


👉எனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது... இது சரிதானா❓


👉"எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ❓


"ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... எனக்குக் கண்டபடி மாறுதே...’’  


- இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன.


🈵 இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `#அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை  அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.


ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், `மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.


பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதம் மாதம் ஒரு சுழற்சி முறையில் வரும். மாதத்திற்கு ஒரு முறை என மாதவிடாய் இரத்த போக்கு 3 அல்லது 5 நாட்கள் வரை நீடிக்கும். இந்த கால அளவு இயற்கையாகவே நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு மாதவிடாய் போக்கை சந்திக்கும் பெண்களும் இருக்கிறார்கள். 30 அல்லது 28 நாட்களுக்கு பிறகு வர வேண்டிய இரத்த போக்கு அடுத்த 10 நாட்களிலேயே திரும்பவும் வந்தால் எப்படி இருக்கும். ஏன் இப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை இரத்த போக்கு ஏற்படுகிறது என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை.


தற்போது பல காரணிகளால் பெண்கள் ஒரு மாதத்தில் இரண்டு முறை இரத்த போக்கை பெறுகின்றனர். இந்த விஷயம் சாதாரணமானது என்றால் கூட பல மாதங்களாக தொடர்ந்து வந்தால் இது ஒரு பெரிய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.


இப்படி இரண்டு மாதவிடாய் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும் பெண்களின் வயது என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஹார்மோன்களின் சமநிலையின்மையும் ஒரு காரணம்


🚺 முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் பூப்பெய்தும் காலம் 13 வயதிலிருந்து 14 வயது வரை இருக்கலாம்.


👉இயல்பான மாதவிடாய் சுழற்சி ஏற்பட சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். 


👉உடல்பருமன் ஏற்படாமல் இருக்க ஓடியாடி விளையாட வேண்டும். 


👉அன்றாட உடற்பயிற்சி மிக அவசியம். 


👉சிலருக்கு உடல் பருமனால் முதல் மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடும். சிலருக்குக் கால தாமதம் ஆகும் நிலையும் உண்டு.


ஒல்லிக்குச்சியாக, அதாவது `ஜீரோ சைஸ்` இருக்க விருப்பமுள்ளவர்கள் உணவை அறவே தவிர்ப்பார்கள். இது தவறானது. உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றை உட்கொண்டு ஒல்லியான உடல்வாகு என்றால் பிரச்சினை இல்லை. இவை அனைத்தும் இருந்தால், பூப்பெய்த 17 வயதுவரை கூடக்காத்திருக்கலாம். 

அதிகமான ஊட்டச்சத்து முன்கூட்டி பூப்பெய்த செய்துவிடும்.


அதேபோல ஊட்டச்சத்து குறைந்தால் கால தாமதமாகும். இதைத் தவிர்க்க சத்தான உணவில்…………


💊 புரதச் சத்து, இரும்புச் சத்து மற்றும் கால்சியம் ஆகியவை இருக்க வேண்டும். புரதச் சத்து என்றால் முளைவிட்ட பயிறு, மாமிசத்தில் ஈரல், மீன், முட்டை, உலர் கொட்டைகள் முக்கியமாக வேர்க்கடலை.


💊 இரும்பு சத்து என்றால் முருங்கை கீரை, வெல்லம், பேரீச்சம் பழம், ஈரல், முட்டையின் கரு, பிஸ்தா, காய்ந்த திராட்சை. கால்சியத்திற்கு பால், சீதாப்பழம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மாதவிடாய் ஏற்பட்டு வந்தால் பின்னாளில் கருத்தரித்தல் பிரச்சினை வராது.


🚺 பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 


21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.’


* 13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”


⭕  #ஒழுங்கற்றமாதவிடாய்_எதன் #அறிகுறியாக_இருக்கும்❓………


👉அவை என்னென்னப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்❓


🚺 ​#நீங்கள்_கர்ப்பமாக_இருக்கலாம்🔰


சில சமயங்களில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது இந்த மாதிரி இரத்த போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பத்தில் இடைப்பட்ட இரத்த போக்கு ஏற்படுவதுண்டு. இது குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை. இது சாதாரணமான விஷயம் தான் என்கிறார் மகளிர் நல மருத்துவர்.


🚺 “#பாலிசிஸ்டிக்_ஓவரியன்_

#சிண்ட்ரோம் 

(Polycystic Ovarian Syndrome - PCOS)🔰


சில பெண்கள் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள். அவர்களும் மாதவிடாய் காலத்தை இரண்டு முறை பெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகிறது. இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் ஆல் எடை அதிகரிக்கும், அண்ட விடுப்பின் சுழற்சி பாதிக்கப்படும் இதனால் கூட இரண்டு தடவை இரத்த போக்கு நேரிடலாம் என்கிறார் அவர்.


🚺 #கட்டிகள்🔰


உங்களிடம் பாலிப்ஸ் அல்லது கருப்பை நார்த்திசு கட்டிகள் இருக்கலாம். சில பெண்களின் கருப்பையின் புறணி பகுதியில் பாலிப்ஸ் அல்லது கருப்பை நார்த்திசுக் கட்டிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த கட்டிகளாலும் உங்க மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும்.


🚺 #வாய்வழி_கருத்தடை 

#மாத்திரைகள்🔰


வாய்வழி அல்லது பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வரும் போது அதன் டோஸை தவிர விடும் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உண்டாகும். இதனாலும் உங்க மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்பட்டு இரண்டு முறை இரத்த போக்கு ஏற்பட வழி வகுக்கும்.


🚺 #பெண்ணுறுப்பில்_ஏற்படும் 

#தொற்று🔰


சிலருக்கு பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்று கூட இரத்த போக்குக்கு வழி வகுக்கும். எனவே உங்க கருப்பை வாய் பகுதி ஆரோக்கியமற்றதாக இருந்தால் இந்த பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


🚺 #_மாதவிடாய்_நிற்கும்_காலம்🔰


40 வயதிற்கு மேல் பெண்களின் மாதவிடாய் நிற்கக் போகும் கால கட்டமாகும். இந்த கால கட்டத்தில் மாதவிடாய் அடிக்கடி ஏற்படும் இது சாதாரணமான ஒன்று தான் என்கிறார் மகளிர் நல மருத்துவர்.


🚺 #மன_அழுத்தம்🔰


இன்றைய நவீன கால பெண்கள் ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையை நடத்தி வருகிறார்கள். இதனால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதுவும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கும். எனவே ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் இரண்டு முறை இரத்த போக்கை அனுபவிப்பீர்கள். இந்த பிரச்சினை உங்களுக்கு தொடர்ந்து நடந்தால் உடனே மகளிர் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.


🚺 #அதிகமான_உடற்பயிற்சி🔰


நம் உடலுக்கு என்று தாங்கும் திறன் என்று ஒன்று உள்ளது. அதற்கு அப்பால் உடலை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தும் போது அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். தீவிரமான உடற்பயிற்சி செய்யும் முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை போன்றவை உங்க இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். எனவே உடற்பயிற்சியை படிப்படியாக சீராக இருக்குமாறு செய்து வாருங்கள்.


🚺#_அதிகமான_பயணம் #மேற்கொள்ளுதல்🔰


இந்த விஷயத்தில் வானிலை மாற்றம், உணவுப் பழக்கம், தூக்க முறை, மன அழுத்த அளவுகள் போன்ற பல காரணிகள் உள்ளன. இவை அனைத்தும் உங்க ஹார்மோனை சமநிலையற்றதாக ஆக்குகின்றன. இதனாலும் நீங்கள் ஒரு மாதத்தில் இரண்டு முறை இரத்த போக்கை அனுபவிக்க கூடும். எனவே அதிக பயணம் மேற்கொள்ளுவதை


🚺 #தைராய்டு_பிரச்னைகள்🔰

 (Thyroid Problems)


தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும். இதில், ஹைப்போதைராய்டிஸ்ம் (Hypothyroidism) முக்கியமான ஒரு பிரச்னை. வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hypercholesterolemia) ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்னைகளையும் இது ஏற்படுத்தும்.


🚺 #ஹார்மோன்_இம்பேலன்ஸ்🔰 (Hormone imbalance) 


புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் 

ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் அதை வெளிக்காட்டும்.


🚺 #பெரிமெனோபாஸ் 🔰

(Perimenopause)


பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.''


⭕ #எதனால்_ஏற்படுகிறது❓


“ * அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்னையை ஏற்படுத்தும்.


*அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். அலுவல்ரீதியான அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்னை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.


* புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை ஏற்படும். இவர்கள், சரியான உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது.


* திடீரென்று உடல் எடை குறைப்பது, உடல் எடை அதிகரிப்பது, உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, மாதவிடாய்ப் பிரச்னையை ஏற்படுத்தும்.''

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி