நித்ய கல்யாணி பூ

 #நித்தியகல்யாணி_செடி கார்பன்-டை-ஆக்ஸைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது.

ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.


நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். உடலில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.


மன ரீதியான நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் நோய்கள் பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.


நித்ய கல்யாணி நமது நாடி நடையை சமன் செய்ய உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது, இதன் மருத்துவ குணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.


நித்ய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.


அதிக தாகம் தீர்க்கும். அதிக சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்தும். நித்ய கல்யாணி உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. பசியின்மைக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது நித்ய கல்யாணி.


நித்ய கல்யாணியின் ஐந்து அல்லது ஆறு பூவை எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நன்கு காய்ச்சவும், நீர் பாதியாக வரும் வரை காய்ச்சவும். பின் இந்த நீரை ஒரு நாளைக்கு நான்கு முறை அருந்தி வரலாம்.


நித்ய கல்யாணி வேர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து நாளைக்கு மூன்று முறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி