SLE

 🇨🇭#லூபஸ்_என்ற_SLE……


🇨🇭#சிஸ்டமிக்_லூபஸ்_எரித்மாடோசஸ்


🇨🇭#நோய்பற்றி_உங்களுக்கு  

#தெரியுமா❓❗


.

🔯 சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ்

என்றால் என்ன❓


              லூபஸ் என்பது நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த திசுக்களைத் தாக்கும் போது ஏற்படும் ஒரு அழற்சி நோய். இந்த நிலையில் உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள் அதே உடலில் இருக்கும் நல்ல சுகாதார செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை தாக்குகின்றன.


         🉐சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் அல்லது பொதுவாக SLE என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

👉#இது_ஒரு_ஆட்டோ_இம்யூன்_நோய்👈


உலகில் லூபஸின் பொதுவான வகைகளில் ஒன்றாகும். மூட்டுகள், தோல், நுரையீரல், இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் மற்றும் இரத்த அணுக்கள் போன்ற உடலின் கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளிலும் SLE வீக்கத்தை பாதிப்பை ஏற்படுத்துகிறது.


சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் ( SLE ) ஒரு தன்னுடல் தாக்க [ஆட்டோ இம்மூன்] நோய். இந்த நோயில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான திசுக்களை தவறாக தாக்குகிறது.  


இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போன்று இருப்பதால் இந்நோயைக் கண்டறிவது சிரமம். பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும் அறிகுறி வணத்துப்பூச்சி சிறகடிப்பது போல இரு கன்னங்களிலும் காணப்படுவதாகும்.


சிலர் பிறக்கும்போதே இந்நோய் வருவதற்கான அறிகுறியுடன் காணப்படுவர். 


.

⭕👉#இந்த_நோய்_வரகாரணம்……❓


லூபஸின் சரியான காரணம் மிகவும் தெளிவாக இல்லை. ஆனால் இது ஒருவித தூண்டுதலின் விளைவாக நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் வெவ்வேறு பாகங்களைத் தாக்க காரணமாகிறது. இது ஒரு ஆட்டோ இம்யூன் நோய்……


மரபணு,சுற்றுச்சூழல்,ஹார்மோன் பிரசனைகள்,சில மருந்துகளின் பக்கவிளைவு,பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் SLE இன் ஆபத்தை அதிகரிக்கும்.


பெரும்பாலும் சூரிய ஒளியால் பாதிக்கப்படுபவர்களோ, வைரஸ்களால் மாசுபடுத்தப்பட்ட சூழல்களிலோ அல்லது பெரும்பாலும் மன அழுத்தத்திலோ வாழும் நபர்கள் இந்த நோய்யால் பாதிக்கப்படுகிற வாய்ப்புகள் அதிகம். 


ஆண்களை விட பெண்களே SLE மிகவும்  

பாதிக்கிறார்கள். இது எந்த வயதிலும் ஏற்படலாம்.  இருப்பினும், இது பெரும்பாலும் 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள் மற்றும் ஆண்களிடம் தோன்றுகிறது. என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.


கர்ப்ப காலத்திலும் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பாலியல் ஹார்மோன்கள் உள்ளிட்ட ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாலியல் ஹார்மோன்கள் இந்த நோய்க்கு பெரிய பங்கு வகிக்கக்கூடும்.


.

🔯 #அறிகுறிகள்❓


 

👉அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன…❗


பாதிக்கப்பட்ட இடங்களைப் பொறுத்து, இந்நோயின் அறிகுறிகள் மாறுபடும். 


⏩ காய்ச்சல், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கம், கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் நிறமாற்றம்.


▶ சூரியஒளி படும்போது தோல் சிவந்து, கறுத்துப் போதல். தோல் சொறி - SLE உடன் பாதி பேருக்கு ஒரு "பட்டாம்பூச்சி" சொறி உருவாகிறது.  மூக்கு மற்றும் கன்னங்களில்  சிவப்பு நிறத்தில்  சொறி போல் பெரும்பாலும் காணப்படுகிறது.  இது பரவலாக இருக்கலாம்.  இது சூரிய ஒளியில் மோசமாகிறது.


▶ விரல்கள், பாதங்கள் வெளிறிப் போதல் அல்லது நீல நிறமாகி விடுதல் (குளிர் படும் போது அல்லது மன அழுத்தம் அதிகமாகும் போது)


▶ மூச்சுவிடச் சிரமம் ஆதல்,


▶ நெஞ்சுவலி


▶ கண்களில் வறட்சி


▶ தலைவலி, குழப்பம், ஞாபக மறதி ஆகியன தென்படும்.


🔴➡ இந்நோய் தீவிரமாகும் போது உடலின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.


சிறுநீரகம் பாதிப்பு மற்றும் கால்களில் வீக்கம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்


➡ மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மூளை பாதிக்கப்பட்டால் தலைவலி, மயக்கம், பார்வைக் குறைபாடுகள், தலைசுற்றல், பக்க வாதம், நடைமுறையில் மாற்றங்கள், குழப்பங்கள் நேரலாம்.


➡ ஞாபக மறதி, எண்ணங்களை வெளிப் படுத்துவதில் குறைபாடு நேரலாம்.


➡ ரத்தம், ரத்தக் குழாய் சம்பந்தமான நோய்கள், அதாவது ரத்தசோகை, ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு, ரத்தக் குழாய்கள் வீக்கம் (உப்புதல்) ஆகியன.


➡ நுரையீரல் நோய்கள், நுரையீரல் உறைகளில் வீக்கம் நேர்ந்து, மூச்சுவிடச் சிரமம் ஆகும். நிமோனியா வரலாம். நுரையீரலில் ரத்தக் கசிவு நேரலாம்.


➡ இதயத்தின் தசைகளில், ரத்தக் குழாய் களில் இதயத்தைச் சுற்றியுள்ள உறையான பெரிகார்டியத்தில் வீக்கம் வரலாம், இதய அடைப்பு வரலாம்.


💢◀ இவ்வியாதி காரணமாக நோய்த்தொற்று அதிகம் ஏற்படலாம்.


◀ புற்றுநோய் வர, குறைந்த வாய்ப்புள்ளது.


◀ எலும்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும், அதனால் எலும்புகள் உடையும் அபாயம் நேரலாம்.


◀ பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு அதிகம். அதனால் கர்ப்பச்சிதைவு ஏற்படவும், குழந்தை உரிய நேரத்துக்கு முன்பே பிறக்கவும் வாய்ப்பு அதிகம். ஆகவே இந்நோய் குணமாகும் வரை கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது.


▶ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது மார்பு வலி.


▶சோர்வு.


▶வேறு எந்த காரணமும் இல்லாத அடிக்கடி காய்ச்சல்.


▶பொதுவான  உடல்நலக்குறைவு


▶முடி கொட்டுதல்.


▶எடை இழப்பு.


▶வாய் புண்கள்.


▶மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு


▶சுறுசுறுப்பான, மந்தமான, உடல் நிலை இருக்கும்


▶கடுமையான சோர்வு


▶தலைவலி


▶முடி கொட்டுதல்


▶இரத்த சோகை


▶இரத்த உறைவு பிரச்சினைகள்


▶செரிமானம் பிரச்சனைகள், 


▶தைராய்டு பிரச்சனைகள்


▶தலைவலி, 


▶பலவீனம், 


▶உணர்வின்மை, 


▶கூச்ச உணர்வு, 


▶வலிப்புத்தாக்கங்கள், 


▶பார்வை பிரச்சினைகள், 


▶நினைவகம் மற்றும் ஆளுமை மாற்றங்கள்.


▶செரிமான பாதை பிரச்சனைகள்


▶வயிற்று வலி, 


▶குமட்டல் மற்றும் வாந்தி


▶இருமல் 


▶தொடர் இருமல்


▶வாயில் புண்கள்


▶சுழற்சி - நரம்புகள் அல்லது தமனிகளில் கட்டிகள், இரத்த நாளங்களின் வீக்கம், குளிர்ச்சியின் பிரதிபலிப்பாக இரத்த நாளங்களின் சுருக்கம்.


▶குறைந்த வெள்ளை இரத்த அணு அல்லது பிளேட்லெட் எண்ணிக்கை உள்ளிட்ட குறைவும்.


▶சிலருக்கு தோல் அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.  இது டிஸ்கோயிட் லூபஸ் என்று அழைக்கப்படுகிறது.


▶இரத்த உறைவு மற்றும் இரத்த நாளங்கள் அல்லது வாஸ்குலிடிஸ் அழற்சி


▶மாரடைப்பு


▶பக்கவாதம்


▶நினைவாற்றல் மாற்றங்கள்


▶நடத்தை மாற்றங்கள்


▶வலிப்பு நோய் தாக்கங்கள்


போன்ற நோய்கள் தாக்கும். உடலின் பகுதியைப் பொறுத்தது நோய் நிலைகள் மாறுபடும். காலப்போக்கில், SLE உங்கள் உடல் முழுவதும் சேதத்தை ஏற்படுத்தும் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தும்.


.

🇨🇭 #லூபஸ்நோய்_இருப்பதை 

#கண்டறிவது_எப்படி❓


❗லூபஸ் நோயை ஒரே பரிசோதனையில் கண்டறிய முடியாது❗


இதனைக் கண்டறிவதற்கு ஒரு மாதம் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். மருத்துவர்கள் பரம்பரையில் உள்ளோருக்கு இருந்த பிரச்சனைகள் முழுவதையும் கேட்டுத் தெரிந்து, பின் சில உடல் சோதனைகளான இரத்த சோதனைகளை எல்லாம் எடுத்து, பின்பு தான் லூபஸ் நோயை உறுதிப்படுத்துவார்கள். 


சில சமயங்களில் மருத்துவர்கள் சருமத்தையும், சிறுநீரகங்களில் உள் திசுக்களையும் எடுத்து பரிசோதித்து, பின் லூபஸ் நோய் இருப்பதை உறுதி செய்வார்கள்.


.

🉐#நடைமுறையில்_உள்ள_முறையான  #சோதனைகள்_என்ன❓


1, CBC

     ESR


2, igE


3, eGFR

[ Estimation of Glomerular filtration rate ]


4,  Creatinine   

     Urea

     Uric Acid


5,  Urine for Microalbumin


6, Liver function test


7,Ra Factor


8, Crp


9, Anti streptolysin O (ASO)


10, Anti CCP antibody


11, antinuclear antibody (ANA)


12,CBK MP


🔴 #குறிப்பு……


மேலே குறிப்பிட்டுள்ள SLE இன் அறிகுறிகள் மற்ற சதாரண நோய்களின் அறிகுறிகளைப் போலவே தோன்றலாம். 


எனவே, ஒரு குறிப்பிட்ட அறிகுறியைப் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். துல்லியமான நோயறிதலை உறுதிப்படுத்த தொடர்ச்சியான சோதனைகளை நடத்த உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்தலாம்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி