மூலம் தீர வரகு வாழைப்பூ அடை

 🥀 வரகு வாழைப்பூ அடை 🥀


தேவையானவை:


ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – 1 கப்


வரகு அரிசி – 1 கப்


உளுந்து – ¼ கப்


கடலைப்பருப்பு (அ) சோளம் – ¼ கப்


வெங்காயம் – 3


கடுகு – ¼ ஸ்பூன்


கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு


பச்சை மிளகாய் – 3


உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:


வரகு அரிசி, உளுந்து, சோளம் அல்லது கடலைப்பருப்பைத் தனித்தனியே ஊற வைத்து கழுவி அரைத்து (மாவாக) ஒன்றகக் கலந்து கொள்ளவும்.


பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், வாழைப்பூ, உப்பு கருவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, பின் அரைத்த மாவில் கொட்டி அடைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.


தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருப்புறமும் லேசாக எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

Comments