அறுவகை சூரணம்

 அறுவகை சூரணம்

ஒரு சுவாரசிய அனுபவம்

பிரம்மமுனி 400 அறுவகை சூரணம் ஏற்கனவே எழுதி இருந்தேன். ஆனால் தேடினேன் கிடைக்கவில்லை.

சுருக்கமாக மருந்து சரக்குகள்.


சீரகம்

அதிமதுரம்

லவங்கப்பட்டை

கருஞ்சீரகம்

மதனகாமப்பூ

சதகுப்பை

இது ஆறும் ஒரு பங்கு

கொத்தமல்லி 6 பங்கு

சூரணம் அரைக்க வேண்டும்

சமம் தூள் சீனி  icing sugar backeryக்காக அரைத்து வரும் . கலந்து வைத்துக் கொள்ளலாம்.


சுமார் 20 வருடம் முன்பு கீதாரி ஒருவர் தனது மகளுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அதற்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டார். பெண் கர்பமாய் இருப்பதாகவும் சொன்னார்


கீதாரி என்பவர்கள் ராம்நாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். செம்மறி ஆடுகளை தஞ்சை பகுதிக்கு கோடைக்காலத்தில் கொண்டுவந்து மேய்பார்கள்.


அவர் பெண் வரவில்லை அவர் மட்டும் வந்தார் உள்ளூரில் டீக்கடையில் யாரோ என்னை பார்க்கச் சொன்னதால் வந்ததாகச் சொன்னார்


அந்த பெண்‌ சில மாதங்களுக்கு முன்தான் திருமணம் ஆகி இருந்தது

அதற்க்கு வலிப்பு நோய் உண்டு அதற்காக தினம் 1 மாத்திரை சாப்பிடும்.

கணவன் வீட்டில் போய் மாத்திரை சாப்பிட்டது. கணவன் வீட்டில் நீ எதற்காக மாத்திரை சாப்பிடுகிறார் என்று கேட்டார்கள். நான் வலிப்பு வராமல் இருக்க சாப்பிடுகிறேன் என்று பதில் சொன்னார். நீ உன்வீட்டில் போய் நோயை குணப்படுத்திக் கொண்டுவா

என தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

இதை வருத்தப்பட்டு அவர் சொன்னார்.

நான் அறுவகை சூரணம் கொடுத்தேன்

Cardinal போன்ற ஆங்கில மருந்துகள் அதிக பக்க விளைவுகள் உள்ளவை நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் கெடுதல்

நல்லகாலம் அவர் நம்மிடம் வந்தார்

அவர் தந்தை மாதாமாதம் என்னிடம் மருந்து வாங்கினார். பத்தாம் மாதமும் வந்துவிட்டது எந்த வலிப்பும் வரவில்லை

பிரசவம் பார்க்கும் மருத்துவருக்கு

இவரது நோய்பற்றி ஒரு கடிதமும் கொடுத்து விட்டேன்

கணவர் வீட்டிலிருந்து யாருமே வரவில்லை எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என வருத்த்தப்படுவார்

குழந்தையும் பிறந்தது அதன்பிறகு கணவன் வீட்டார் வந்து பார்த்தார்கள்

ஓரிரு மாதங்கள் சென்று  பெண் கணவன் வீடு போய்சேர்ந்தார்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி