வயிறு சுத்தம் செய்வது

 🇨🇭#வயிற்றிலிருந்துதான்_பல்வேறு…… 


🇨🇭#உடல்நலப்_பிரச்னைகள் #ஆரம்பிக்கின்றன❓❓❓


✳ ஆரோக்கியத்துக்கான அடிப்படை, உடலைச் சுத்தமாகவும் 

சுகாதாரமாகவும் வைத்திருப்பதே


 ஆரோக்கியத்துக்கான அடிப்படை, உடலைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே. சுத்தம் என்றால் குளித்து, சுத்தமாக இருப்பது மட்டுமல்ல... 


‘உடலின் உள்ளே கழிவுகள், நச்சுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதும் தான்’ 


பொதுவாக, வயிற்றிலிருந்துதான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.


இன்றைய சூழலில் சுகாதாரமற்ற உணவுகள், துரித உணவுகள், கலப்பட உணவுகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களைப் போட்டு விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள் எனப் பல்வேறு வழிகளில் நம் உடலில் நச்சுகள் சேர்கின்றன. இவ்வாறு உடலில் தேங்கும் கழிவுகளின் அளவு அதிகரிக்கும்போது, அவை ஒவ்வொரு செல்லிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி, உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். எனவே ‘கழிவு அகற்றுதல்’ என்பது இன்றும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.


நம் உடலில் சேரும் கழிவுகளையும் நச்சுகளையும் அகற்றும் பணியை கல்லீரலும் சிறுநீரகங்களும் செய்கின்றன. ஆனாலும் இவற்றால் முழுமையாக வெளியேற்ற முடியாது.


நம் உடலிலும் உணவு, தண்ணீர், காற்று எனப் பல வழிகளில் தேவையில்லாத விஷயங்கள் கழிவுகளாகவும் நச்சுகளாகவும் சேர்ந்து கொண்டேயிருக்கும். அப்படி வயிற்றில் சேரும் கழிவுகளே பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படைக் காரணங்களாகின்றன.


அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம், குடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களும் நச்சுகளுமே. நாள்தோறும் மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும் வயிற்றுக் கழிவுகளை அகற்றப் போதுமானவை அல்ல, கழிவுகளை முழுமையாக வெளியேற்ற பேதி மருந்து அவசியம்’ என்கிறது சித்த மருத்துவம். உடலிலுள்ள கெட்ட கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றும் பேதி எடுக்கும் முறையை ‘பேதியுறை’ என்கிறது. 


சித்த மருத்துவம். பேதி’ என்றால், ‘பேதி மருந்து கொடுத்து கெட்ட கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றுதல்’ 


👉அடர்நான்கு மதிக்கொருகாற் பேதியுறை நுகர்வோம்’ என, தேரையரின் ‘பிணியணுகா விதி’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.👈


நான்கு மாதத்துக்கு ஒரு முறை பேதி எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம்’ எனக் கூறுகிறது சித்த மருத்துவம். 


⭕👉#அதனால்………


கால்வலி, மூட்டுவலி, அஜீரணம் போன்ற வாதநோய்கள் நீங்கும், 

உற்சாகம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பேதி மருந்து, நோய்கள் வராமல் காக்கும் முறையாக மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையாகவும் சித்த மருத்துவத்தில் நடைமுறையில் உள்ளது. பேதி மருத்துவத்தைப் பின்பற்றுவதன் மூலம் இன்று அதிகம் பாதிக்கும் வாழ்வியல் நோய்களான உயர் ரத்த அழுத்தம், சினைப்பைக் கட்டிகள் போன்றவை நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.


🇨🇭#பேதி_மருந்து🇨🇭


💊#ஆமணக்கு_எண்ணெய்💊


சித்த மருத்துவத்தில் பல்வேறுவிதமான மருந்துகள் பேதிக்குப் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால், கிராமங்களில் பின்பற்றிவரும் ஓர் எளிய முறை எல்லோரும் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடியதாக இருக்கிறது. அதற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்தது. இதை, `வயிற்றைச் சுத்தமாக்கும் மருந்து’ என்றே சொல்லலாம். இது உடலிலுள்ள கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றி, பசியின்மையை நீக்கி, உடலை வலுவாக்கும். கடுமையான வாய்வுக் கோளாறையும், குன்மம் நோயையும் போக்கும். அத்துடன் வாதம், பித்தம் மற்றும் கபம் சமநிலைப்படுத்தப்பட்டு நோய்கள் கட்டுக்குள் வரும்.


💊#எப்படி_எடுத்துக்கொள்வது❓


சோறு வடித்த நீர் அல்லது முதல்நாள் சோற்றில் ஊறிய நீராகாரத்தை………

 

50 மி.லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், அத்துடன் 30 மி.லி ஆமணக்கு எண்ணெயையும் சேர்த்து அருந்த வேண்டும். 


அரை மணி நேரத்துக்குள் மலம் வெளியேறும். 


பேதிக்கு மருந்து சாப்பிட அதிகாலை நேரம் மட்டுமே சிறந்தது. 


அதுவும் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். 


❌டீ, காபி சாப்பிட்டதும் எடுக்கக் கூடாது. 


❌பேதிக்கு எடுக்கும் முன்தினம் இரவு அதிக அளவிலான, கடினமான உணவுகளைத் தவிர்த்து, 


எளிதில் செரிமானமாகும் உணவை உண்ண வேண்டும்.


💊பேதிக்கு மருந்து எடுத்த நாளில் பத்தியம் இருக்க வேண்டியது அவசியம். அந்த நாளில்………


மோர் சாதம், பால் சாதம், இட்லி, அரிசிக் கஞ்சி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். 


அதிக காரம், மசாலா, புளி சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 


❌மலம் அடிக்கடி வெளியேறுவதால் உடலிலுள்ள உப்புகளும் தாதுக்களும் வெளியேறுவதுடன்……… 


உடல் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். எனவே, அவற்றை ஈடுகட்ட………… 


💊 சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘பத்திய ரசம்’ அருந்த வேண்டும். பொதுவாக புளியைக் கரைத்து மிளகு, பூண்டு சேர்த்துக் கொதிக்கவைப்பது வழக்கம்.


ஆனால், இந்த ரசத்தில் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மற்ற பொருள்களையும் சேர்க்க வேண்டும். கடுகு, எண்ணெய் சேர்த்துத் தாளிக்கக் கூடாது. பேதி மருந்து சாப்பிட்டதும், இந்த ரசத்தை சிறுகச் சிறுக அருந்த வேண்டும்.

 

நான்கு, ஐந்து தடவை மலம் வெளியேறியதும் அன்று காலை 11 மணியளவில் மோர் அருந்த வேண்டும். இதையடுத்து வயிற்றுப்போக்கு நின்றுவிடும். 


💊மதியம் மோர் சாதம் சாப்பிட வேண்டும். 


💊இரவில் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட வேண்டும்.


பேதி மருந்து சாப்பிடுவதால் வயிறு மட்டுமல்லாமல்……… 


பித்தநீர் வரும் பாதை, கணையம் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் கழிவுகள் அகற்றப்படும். 


செரிமான நொதிகள் தூண்டப்படும். குடல் தூய்மையாகும். 


சத்துகளை உட்கிரகிக்கும் தன்மை கிடைக்கும். 


கல்லீரல் அழற்சி, கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்றவற்றைத் தடுக்கும்.


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


 💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


   ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி