Ulcer

 🇨🇭#புற்றுநோய்யாக_மாறும்_அல்சர்…❗

#அலட்சியம்_வேண்டாம்❗


🇨🇭#நேரத்திற்குச்_சாப்பிட்டால்_தான் #அல்சர்_வரும்❗❗


🔴நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. 


⭕ அல்சர் பெரும்பாலும் நேராநேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.❗❗❓❓❓❓❓


ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).

இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.


பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை. 


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே❗பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.


நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.


ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.

அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.


அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


உணவு செரிப்பதற்காக வயிற்றில் அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட படிமங்களும் (Layers) இருக்கும். இது இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும். குடல், இரைப்பை, சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டு, இந்த படிமங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.


.

🔴 #அல்சரும்_புற்றுநோய்யும்❗


உலகில் தற்போது அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய்களில் அல்சரும் ஒன்றாகும். மேலும் அவர்கள் அல்சர் உருவாதற்கு முக்கிய காரணம் இரைப்பையில் பாக்டீரியாவான #ஹெலிகோபேக்டர்_பைலோரி (helicobacter pylori) தாக்குவதால் வருகிறது. அல்சரை உருவாக்கும் இந்த #பாக்டீரியா_கார்சினோமாவுடன் தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாக்டீரியா எளிதில் உடலை தாக்கி அல்சரை உண்டாக்கும் தன்மையையும் உடையது. அதுமட்டுமல்லாமல் டி.என்.ஏ-வில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் இருக்கும் பாதுகாப்பு உறையையும் பாதிப்பை எற்படுத்திவிடும். இதனை எளிதில் சரிசெய்துவிட முடியாது. 


வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது #லிப்போமா (#lymphoma) என்ற #புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம். 


நீண்ட நாட்கள் வயிற்றில் புண்கள் இருந்தால், அவை வயிற்று புற்றுநோயை உண்டாக்கிவிடும். ஏனெனில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வயிற்று திசுக்கள் நீண்ட நாட்கள் இருப்பதால், இயற்கையாக அவை ஃபைபரஸ் திசுக்களாக மாற்றப்படுகின்றது. இதனால் நாளடைவில் வயிற்று புற்றுநோயானது ஏற்பட்டுவிடும்.


ஆகவே அல்சர் இருப்பவர்கள் ஆஸ்பிரின் அல்லது மற்ற அழற்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வயிற்றில் உற்பத்தியாகும் பாதுகாப்பான கோழையானது குறைந்துவிடும். மேலும் அந்த மருந்துகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரித்து. வயிற்றுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைத்து, உடலின் திறனை பலவீனப்படுத்தும் செல்களை சரி செய்யாமல் இருக்கும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 


நீண்ட காலம் அல்சர் இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும் இருக்கும். இது குடலில் ஓட்டை விழும் அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து, பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்.


.

🔴#அறிகுறிகள்…❓❓❗❗


அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம் அறிகுறிகளே தெரியாது……❗


▶அடிக்கடி பசி, 


▶சாப்பிட்ட பிறகும் பசி, 


▶வயிற்று வலி, 


▶முதுகு வலி, 


▶வயிற்று எரிச்சல், 


▶நெஞ்சு எரிச்சல், 


▶சாப்பிட்டதும் வாந்தி 


▶உணவு உண்ட பிறகு, எதுகளித்தல், 


▶வயிறு உப்பிசம், 


▶மலசிக்கல் 


போன்ற பிரச்னைகள் இருக்கும். 

அதற்க்கான தீர்வை உடனடியாக தேடுவதே சிறப்பு.


◀பால், 


◀தண்ணீர், 


◀பிஸ்கட் 


போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால், அது முதல் கட்ட அல்சர். சிறிது உணவைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால், அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


.

🈵 #அல்சர்வரக்_காரணங்கள்❓


➡ சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது, 


➡அதிக மசாலா, 


➡எண்ணெய் உணவுகள், 


➡உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல், 


➡ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற கிருமித் தொற்று, 


➡மனப் பிரச்னையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள், 


➡வீரியமுள்ள வலி மாத்திரைகள், 


➡ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது, 


➡மது மற்றும் புகைப்பழக்கமும் 


அல்சரை ஏற்படுத்தும். 70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது.


.

🔯 உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்❗❓


நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம். 


ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதல் இடம் தரலாம். 


எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். 


தேன், ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது. 


.

❌ அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை...❓


கோலா பானங்கள், சோடா,ஊறுகாய், 

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் வகை ஆயத்த பழச்சாறுகள், 

டீ, காபி தவிர்க்கலாம். மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுதல் போன்றவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அல்சரிலிருந்து, வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மேலும் அவை வயிற்றில் அதிகமான அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். 


👉#ஆகவே…… 


வயிற்று வலி, 


குமட்டல் மற்றும் வாந்தி 


போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். 


அல்சரானது சரிசெய்யக் கூடிய ஒன்றே. அதிலும் வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தால் கூட சரிசெய்துவிட முடியும். ஆனால் எதற்கு அந்த அளவு வரை நாம் இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே மருத்துவரை ஆலோசித்து சரியான மருந்துகளை உட்கொண்டு, அல்சரை தடுக்கலாம்.


⭕ ஆரம்ப நிலை அல்சரை

எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.❗


.


💊💊💊#வீட்டு_வைத்தியங்கள்…❓💊💊


⭐தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.


⭐ முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.


⭐காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.


⭐தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.


⭐நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.


⭐தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.


⭐பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.


⭐வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.


⭐அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.


⭐ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.


⭐கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். 


⭐வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.


⭐பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.


⭐மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். 


⭐பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.


⭐சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.


⭐வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும்.

 

⭐அல்சர் முற்றிலும் குணமாக – பச்சை வாழைப்பழம்:


⭐பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை (ulcer) சரி செய்ய உதவுகிறது.


⭐தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.

 

⭐வீட்டில் இருந்து தயார் செய்த ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆப்பிள் ஜூஸை கடைகளில் வாங்கி அருந்த கூடாது, வீட்டில் தயார் செய்து மட்டும் அருந்தவும்.


⭐பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது.


⭐தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.


⭐தண்டு கீரையில் இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளதால், இவற்றை தினமும் உணவில் சேர்த்து வர உடலானது குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் சரியாகிறது.


⭐தினமும் முட்டை கோஸ் சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.


⭐அகத்திக்கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.எனவே தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம்.


⭐தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.


⭐துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும்.


⭐அல்சரை சரி செய்வதற்கு மற்றொரு சிறந்த மருந்து, நெல்லிக்காய்.

எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர அல்சர் பிரச்சனையை சரி செய்திட இயலும்.


⭐அத்திமரம் பட்டை சாறுடன் சம அளவு பசும் பால் மற்றும் சிறிதளவு கல்கண்டு சேர்த்து 100 மில்லி அளவு தினமும் அருந்தி வந்தால் அல்சர் பிரச்சனையை சரி செய்திட முடியும்.


⭐அத்தியிலை சாறுடன், சம அளவு வேப்பிலை சாறு சேர்த்து தண்ணீர் கலந்து காய்ச்சி தினமும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.


⭐சீரகம், அதிமதுரம், தென்னம்பாளை பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பசும்பால் சேர்த்து அரைத்து சிறிய எலுமிச்சை அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.பின்பு இவற்றை பாலில் கலந்து தினமும் அருந்தி வர அல்சர் பிரச்சனை குணமாகும்.


⭐குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும். 


⭐உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகாவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும். 


⭐2-3 வாழைப்பழங்களை பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது. 


⭐நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடித்தால் பலனளிக்கும்.


⭐வில்வ இலைகள்/பழங்களை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும். 


⭐பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது. 


⭐உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து, கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம். 


⭐மாதுளம் பழச்சாறு அல்சருக்கு நல்லது. 


⭐திரிபாலா சூரணம் (1 தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.


⭐கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில், இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். 


⭐ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும். 


🈯 #சேர்க்கவேண்டியவை❓


கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.


❌ #தவிர்க்கவேண்டியவை❓


அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா ஆகியவற்றை தவிர்க்கவும். உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.


அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணெய், காரம் செறிந்த உணவுகளை தவிர்க்கவும்.


.

💚 #கடைப்பிடிக்க_வேண்டியவை❓


➡காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. 


➡உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.  


➡பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். 


➡தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 


➡சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்..


➡ தியானம் கண்டிப்பாய் ஸ்டிரெஸ் நீக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டிரெஸ் அல்சருக்கு ஒரு முக்கிய காரணம்.


➡ மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அரைமணி நேர உடற்பயிற்சியும், நன்கு நீர் குடிப்பதும் இப்பிரச்சனையைத் தவிர்க்கும்.


➡ மிக வேக வேகமாக உண்ணாதீர்கள். கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வீர்கள். இப்படி உணவை அடைத்து நோய் வரவழைத்துக் கொள் வதினை விட உண்ணாமல் இருப்பது கூட குறைவான தீங்கினைச் செய்யும்.


➡ அதிகமாக தொண்டை வரை உண்ணாதீர்கள். தீவிர அஜீரணம் அசிடிடி, அல்சர் என கொண்டு வந்து விடும். எப்பொழுதும் அளவாக உண்ணுங்கள்.


❌ நெஞ்செரிச்சல், தொண்டை வரை ஆசிட் எகிறுதல் போன்றவற்றிற்குக் காரணம் அதிக மசாலா உணவு. இத்துடன் தூங்கச் செல்லும் முன் அதிக கார உணவு, அதிக உணவு, வேகமாக உண்ணும் உணவு, சிகரெட் ஆகியவை ஆகும். இவற்றினை உடனடியாக நிறுத்துங்கள்.


➡ வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.


❌ சதா சர்வ காலமும் நொறுக்கு தீனி உண்பதை நிறுத்தி விடுங்கள்.


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


 💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


     ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி