தண்ணீர்விட்டான் கிழங்கு

 🇨🇭#நூறு_நோயை_நீக்கும்_ஒரு_ஒப்பற்ற #மருந்து……❗❗


🇨🇭#சதாவேரி_தண்ணீர்_விட்டான்

#கிழங்கு……❗❗❓❓


👉1 வேறுபெயர்கள்❓ 


தண்ணீர் விட்டான் கிழங்கு, 

நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, 

ஆஸ்வாலி, சக்ராகுல்.


⏩2 தாவரப்பெயர்❓ 


ஆஸ்பராகஸ் ரசிமோசஸ்.


➡ 3) தாவரக்குடும்பம்❓ 


LILLIACEAE.


▶ 4) வகைகள்❓


ஆ.ரெசிமோசஸ், ஆ.அட்செடன்ஸ்,

ஆ. அப்பினாலிஸ், 

கோனோசினாமல், ஆ.ஆல்பராகஸ்.


🉐 5) வளரும் தன்மை❓


இது  மலைப் பிரதேசங்களிலும், 

நல்ல வடிகால் வசதி உள்ள 

இடங்களிலும், செம்மண் நிலம், 

வளம்மிக்க மண்களிலும் 

வளரக்கூடிய செடி. தட்பவெப்ப நிலை 15 டிகிரி முதல் 35 டிகிரி இருந்தால் 

இது நன்கு வளரும். இது ஒரு 

கிழங்கு கொடி 6 அடி உயரம் வரை 

வரை வளரக்கூடியது. 


🈯 6) பயன்தரும் பாகங்கள்❓


கிழங்குகள், வேர்கள்.


🈶 7) பயன்கள்❓


▶ ஒரு பழம் பாடல்……


"""நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா


முரைவிடுத் தோட வுறுகுங்காண் 

நாரியரே


வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்


தண்ணீர் விட்டான் கிழங்குதான்'""


சதாவரி கிழங்கு என்ற தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. 


▶உடலைப் பலமாக்கும்


▶உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்


▶தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 


▶இசிவை அகற்றும்


▶ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.


▶வெகு மூத்திரம், 


▶பழைய சுரம், 


▶சோமரோகம், 


▶வெள்ளை, 


▶உட்சூடு, 


போன்ற நோய்களுக்கு மருந்தாக 

பயன்படுகிறது. 


🔯 தாய்மார்களுக்கு 

பால் சுரப்பை அதிகரிக்கவும், 


➡உடல் மெலிந்தவர்களுக்கு  உடல் எடை கூடவும் ,


➡சர்க்கரை நோய், 


➡சுவாச வியாதி, 


➡வயிற்றுப்போக்கு 


போன்ற நோய்களை 

குணப்படுத்துகிறது.


🆔 தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கும். தண்டில் முட்கள் வளர்ந்திருக்கும். இதன் கிழங்கு கொத்தாக காணப்படும். அதிக தசை பகுதியை கொண்டது. நீர்த்தன்மையும் நிறைந்திருக்கும். இந்த கிழங்கில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிர சாதம். பருவம் அடைந்த காலத்தில் இருந்து, மாதவிடாய் முழுமையாக நிற்கும் மனோபாஸ் காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. இதற்கு சாதாவேரி, சதாமூலம் ஆகிய இருவேறு பெயர்களும் உண்டு.


தண்ணீர்விட்டான் கிழங்கு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உடலை சீர்செய்யும். விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காசநோய் போன்றவைகளையும் குணப்படுத்தும். அதிக சூட்டினால் உண்டாகும் வெள்ளைப்படுதல், வெட்டை நோய் போன்றவைகளுக்கும் இது சிறந்த மருந்தாகின்றது.


இதற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் வறட்சியை நீக்கும். அதிகரிக்கும் பித்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.


இன்று பெரும்பாலான இளம்பெண்கள் சினைப்பை நீர் கட்டியால் பாதிக்கப்படு கிறார்கள். அதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருக்கும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக் கிறது.


பருவமடைந்த பெண்களில் சிலர் உடல்மெலிந்து ரத்தசோகையுடன் காணப்படு கிறார்கள். அதனால் வெள்ளைப்படுதல் தோன்றும். உடலின் உள்பகுதி சூடாகத்தோன்றும். தலைமுடி உதிரும். மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் தோன்றுவார்கள். இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும். அதனால் மார்பக வளர்ச்சியும் மேம்படும். பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இது உதவும்.


கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாகவும், உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியதாகவும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கக்கூடியது, தண்ணீர்விட்டான் கிழங்கு.


‘தண்ணீர்விட்டான் கிழங்கு நெய்யை’ தினமும் இரவு, ஒரு தேக் கரண்டி வீதம் கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டுவந்தால், பிரசவம் எளிதாகும். கர்ப்பகால இறுதியில் பனிகுடத்தில் உள்ள நீர் குறையாமல் சுக பிரசவம் ஏற்பட இது உதவுகிறது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலை உருவாகும். உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை தோன்றும். மனச் சோர்வு, பிறப்பு உறுப்பில் வறட்சி, கை- கால் எரிச்சல் போன்றவை உருவாகும். மருத்துவர் ஆலோசனைபடி தண்ணீர்விட்டான் கிழங்கு உணவுகளை சாப்பிட்டால், அந்த அவஸ்தைகளில் இருந்து பெண்கள் விடுபடலாம்.


உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்டு முதல் வாரத்தை ‘உலக தாய்ப்பால் வாரமாக’ அறிவித்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் பெருக்கத்திற்கு சிறந்தது, தண்ணீர்விட்டான் கிழங்கு.


இந்த தாவரத்தை பணப் பயிராக இந்தியா முழுவதும் பயிரிடுகிறார்கள். இதை அலங்கார செடியாக தொட்டிகளிலும் வீடுகளில் வளர்க்கலாம். ஒரு வருடத்தில் கிழங்குகள் கிடைக்கும்.


💊 தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.


💊 தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.


💊 தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.


💊 தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


💊 உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.


💊 ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.


💊 மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.


💊 கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.


⭕தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்❓


பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.


💊கிழங்கிலிருந்து 50 மி.லி. சாறு பிழிந்து, 50 மி.லி. வெண்ணெய் சேர்த்து, அரை லிட்டர் பால் கூட்டி நெய்யாக உருக்கி, அதனுடன் பனை வெல்லம், தேன், திப்பிலி கலந்து செய்யப்படும் மருந்து, உடலுக்கு வலுவைக் கொடுக்கும் ஊட்டச்சத்து டானிக்.


💊குளிர்ச்சித்தன்மையைக் கொண்டுள்ளதால், வேனிற் காலங்களில் இதன் கிழங்கைப் பொடி செய்து, பாயச வகைகளில் சேர்த்துப் பருகலாம். உடலை வளர்க்கும் இனிப்புச் சுவையுடைய தண்ணீர்விட்டான் கிழங்கு, வெப்பக் காலங்களில் உடல் இழந்த நீர்ச்சத்தை மீட்டுக் கொடுக்கும்.


💊கிழங்கை உலர வைத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து பருக, சந்தையில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பானங்கள் கொடுக்காத பலன்களையும் பெறலாம். ‘நீரிழிவைப் போக்கும்… வெண்ணீர்பெய் சோம நோய்…’ எனும் தண்ணீர்விட்டான் சார்ந்த சித்தர் அகத்தியரின் பாடல், நீரிழிவு நோய்க்கு இதன் கிழங்கு நல்ல மருந்து என்பதைப் பதிவு செய்கிறது.


💊விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கருப்பை சார்ந்த நோய்களுக்கும் மருந்தாகவும் தண்ணீர்விட்டான் கிழங்கு பயன்படுகிறது. நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கும் உணவாகவும் இது பயன்படுகிறது. அதிகமாகச் சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் தண்ணீர்விட்டான் உதவும்.


💊கிருமிகள் இரைப்பையைத் தாக்கும்போது, அதன் மென்படலத்தின் செயல்திறனை இந்தக் கிழங்கின் சத்துக்கள் அதிகரித்து, வயிற்றுப் புண்களைத் தடுக்கும் விதம் பற்றி ஆய்வு நடைபெற்று வருகிறது. நரை, திரை, மூப்பைத் தள்ளிப்போடக்கூடிய  மருந்தாகப் போற்றப்படும் இதன் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்தும் நிறைய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.


💊‘எண்டமீபா ஹிஸ்டோலைடிகா’ 

(Entamoeba histolytica) எனும் ஒட்டுண்ணி வளர்ச்சியை இதன் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் சாரங்கள் தடுக்கின்றன. புற்றுநோய் சார்ந்து எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், புற்று செல்களின் வளர்ச்சியை இதன் கிழங்கு கட்டுப்படுத்துவது தெரிய வருகிறது. மறதியைக் குறைக்கவும் மனச்சோர்வைப் போக்கவும் தண்ணீர்விட்டான் பயன்படும்.


💊இதன் சாற்றோடு தேன் சேர்த்துக் கொடுக்க, செரிமானப் பாதையில் உண்டாகும் பிரச்சினைகள் நிவர்த்தியாகும். 


💊குழந்தை ஈன்ற தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்க, சதாவரி லேகியம் அற்புதமான மருந்து. 


💊வெள்ளைப்படுதல் அதிகமிருக்கும்போது, உணவிலேயே தண்ணீர்விட்டான் கிழங்கைச் சேர்த்து வரலாம். 


💊தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, அமுக்கரா கிழங்கு சமஅளவு சேர்ந்த கூட்டு மருந்து, உடலுக்கு வலுவூட்டப் பயன்படும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி