ஹீமோகுளோபின்

 #ஹீமோகுளோபின்_அளவு #குறைவாக_இருக்கிறது #என_வெளிப்படுத்தும் #_அறிகுறிகள்!


ஆரோக்கியமற்ற உணவுமுறை தான் ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கான முதல் காரணி ஆகும். 


உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உடலில் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. 


அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை. சில நேரங்களில் இரத்த சோகையானது, ஒரு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். அதிலும் இரத்த சோகையானது அடிக்கடி காணப்பட்டால், அது மஞ்சள் காமாலை, புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கும். 


எனவே உடலில் இரத்த குறைவாக உள்ளதா, இல்லையா என்பதை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இத்தகைய இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சரி, இப்போது உடலில் இரத்த குறைவாக இருந்தால், என்ன அறிகுறிகள் இருக்கும் என்று பார்ப்போமா!!! 


♦ஆண்களுக்கு 13.5-17.5 மி.கி./டெ.லி. அளவும், 


♦பெண்களுக்கு 12-15.5 மி.கி/டெ.லி அளவும் 


இருக்க வேண்டும். இதில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.


1, பொதுவான

அறிகுறிகள், 


2, அரிதான அறிகுறிகள், 


3, குழந்தைகளுக்கான அறிகுறிகள் 


என மூன்று வகைகளாக ஒருவரது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கண்டறியலாம்....


♦பொதுவான அறிகுறிகள்


காரணமின்றி அல்லது பெரிதாக எந்த வேலைகளும் செய்யாத போது தலை சுற்றுதல், 


உடல் சோர்வு, 


தலை வலி, 


மயக்கம் 


போன்றவை ஏற்படுவது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை வெளிகாட்டும் பொதுவான அறிகுறிகளாகும்.


♦அரிதான அறிகுறிகள்


அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, 


வாந்தி வருவது, 


நெஞ்செரிச்சல், 


கை, கால்களில் வீக்கம் ஏற்படுவது 


போன்றவை ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அரிதான அறிகுறிகள் ஆகும்.


♦குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறி


குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறிகள் சற்று கடுமையானதாக இருக்கும். 


அளவுக்கதிகமான இதயத்துடிப்பு, 


வெளிர்நிறத்தில் தோற்றமளிப்பது, 


ஓர் செயலில் கவனம் செலுத்த முடியாமல் போவது,


நரம்பு மண்டல வலிமை இழப்பு, 


நடத்தையில் மாற்றம் 


போன்றவை குழந்தைகளிடம் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாக இருக்கின்றன.


#பெண்கள்_மத்தியில்


பெண்கள் மத்தியில் பிரசவ காலத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவது இயல்பு. சில பெண்களுக்கு அவர்களது வேலை காரணமாக கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படலாம்.


#நோய்_எதிர்ப்பு_சக்தி #குறைவு 


இரத்தமானது குறைவாக இருப்பதால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து, அடிக்கடி உடல் நிலையானது சரியில்லாமல் போகும். எனவே இதை வைத்தும் அனீமியா என்று தெரிந்து கொள்ள முடியும்.


#கூந்தல்_உதிர்தல் 


இரத்தம் குறைவாக இருந்தால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டமானது குறைவாக இருப்பதால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.


#வெளிரிய_தோல்


உங்கள் தோல் வெளுத்து போய், சற்று வீக்கத்துடன் காணப்பட்டால், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.


#மார்பு_வலி


உங்கள் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால், இதயத்தில் மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால், இதயம் சற்று கடினமாகவும் அதிகமாகவும் வேலை செய்ய வேண்டியிருந்து, அதனாலும் நெஞ்சு வலியை உணரக்கூடும்.


#மூச்சு_திணறல் 


இரத்த சோகை இருந்தால், சரியாக சுவாசிக்க முடியாது. ஏனெனில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தமானது குறைவாக இருப்பதால், சிறிது தூரம் நடந்தாலும், அதிகமாக மூச்சு வாங்கும்.


#நிறமற்ற_கண்கள் 


உடலில் இரத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது, அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல், நிறமற்று காணப்பட்டால், இரத்த சோகை என்று தெரிந்து கொள்ளலாம். 


#சோர்வு_உடலில் 


சோர்வானது தொடர்ந்து ஒரு மாதமாக இருந்தால், உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளது என்று அர்த்தம். குமட்டல் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும். 


#தலைவலி 


அனீமியா இருப்பவர்கள் அடிக்கடி சொல்வது தலை வலிக்கிறது என்று தான். ஏனெனில் உடலில் இரத்தமானது குறைவாக இருப்பதால், மூளைக்கு தேவையான இரத்தம் செல்லாமல், தலை வலியை உண்டாக்குகிறது.   


#வெள்ளையான_விரல்கள் 


ஒருவர் ஆரோக்கியமாக உள்ளாரா என்பதை விரல்களை அழுத்தும் போது தெரிந்துகொள்ளலாம். எப்படியெனில் அவ்வாறு அழுத்தும் போது, இரத்தமானது விரல் முனைகளுக்கு வரும். ஆனால் இரத்த சோகை உள்ளவர்களின் விரல்களை அழுத்தினால், எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், வெள்ளையாகவே இருக்கும். எனவே இதனை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.


#குமட்டல் 


ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும்


#வயிற்று_அல்சர்


வயிற்று அல்சரால் அவஸ்தைப்பட்டு வந்தால், அப்போது உடலினுள் அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.


#படபடப்பு


நீங்கள் அடிக்கடி படபடப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இரத்தம் குறைவாக இருப்பதால், இதயத்திற்கு போதிய இரத்தம் கிடைக்காமல் அழுத்தத்திற்குட்பட்டு, அடிக்கடி படபடப்பை உண்டாக்குகிறது.


#நகம்_உடைதல்


நகம் உடைதல் என்பது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். அதில் இரத்த சோகைக்கும் ஒன்று. எனவே உங்கள் நகம் அடிக்கடி எளிதில் உடைந்து கொண்டே இருந்தால், இரத்த சோகை உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


#நோய்கள்


சிவப்பு இரத்த அணுக்கள் குறைபாடு கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய காரணியாக இருக்கிறது. இரத்த சோகை, புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவை கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய காரணிகளாக இருக்கின்றன.


#இரும்புச்சத்து_குறைபாடு


ஹீமோகுளோபின் உருவாக இரும்புச்சத்து மிகவும் அவசியம். உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது எனில், ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தான் அர்த்தம்.


#_ஹீமோகுளோபின்

#அளவுகுறைவு


இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறைவாக இருந்தால், உங்கள் உடலில் இரத்தம் மிகவும் குறைவாக உள்ளது என்றும், உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம்.


#வைட்டமின்__சி


வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தாலும் ஹீமோகுளாபின் அளவு குறையும். அதன் அளவை அதிகரிக்க சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டியது அவசியம். இறைச்சி, இறால், கீரைகள், பாதாம், பேரீச்சம் பழம், பயறு, கடல் சிப்பிகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்பாளி, திராட்சை, தக்காளி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மாதுளம்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தலாம். ஆப்பிள் பழத்தை ஜூஸாகவும் பருகலாம்.


#_வைட்டமின்_குறைபாடு


வைட்டமின் பி 12, ஃபோலைட் போன்றவை உங்கள் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் புதியதாக உண்டாக உதவுகின்றன. எனவே, இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும் கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


#போலிக்_அமிலம்


போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். முளைகட்டிய பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, கடலை, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். தினமும் உடற்பயிற்சி செய்து வருவதும் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய துணை புரியும்.


#பழங்கள்_காய்கறிகள்


ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய முட்டைக்கோஸ், பட்டாணி, பீன்ஸ், கீரை, ப்ராக்கோலி மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளும், திராட்சைப்பழம், ஆரஞ்சு, வாழைப்பழங்கள், ராஸ்பெர்ரி, கிவி மற்றும் மாம்பழம் போன்ற பழங்களும் மிகவும் சிறந்தது.


#மற்ற__உணவுகள்


நட்ஸ், மீன் மற்றும் மெலிந்த இறைச்சிகள், கோழி, முட்டை, உறுப்பு இறைச்சிகள் போன்ற அதிக வலிமையளிக்கும் டயட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.


#மூலிகைகள்


ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் உணவில் சிறிதளவு வெந்தையம் மற்றும் துளசி போன்றவற்றி சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்.


#நோயற்ற_வாழ்விற்கு

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி