கருப்பை அறிவீர்

 🇨🇭 #ஒரு_தாயின்_இரண்டாவது…❗


🇨🇭#இதயம்…❓❓❓❗❗❗


🇨🇭#கர்ப்பப்பை_மற்றும்_சினைப்பை

#தான்……❗❗❗


.

✴ ‘‘பெண் உடலின் ஆதாரமே கர்ப்பப்பைதான். ஒரு பெண்ணின் வாழ்வில் சகலத்தையும் தீர்மானிப்பதில் அதன் பங்கு மகத்தானது. கர்ப்பப்பையில் ஏற்படுகிற பிரச்னைகள் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிவதும் உண்டு. 


இது மற்றொரு உறுப்பை உருவாக்கும் திறன் கொண்ட ஒரே உறுப்பு . ஆம் நஞ்சுக் கொடியை இது அந்த நேரத்தில் உருவாக்கும்.

 

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பான கர்ப்பப் பையின் அளவில் ஏற்படுகிற மாறுதல்கள்கூட அவளது ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கலாம்’’ 


எல்லா பெண்களும் இந்த  அற்புதமான உறுப்புடன் தான் பிறந்தவர்கள், உங்களில் பலர் இதை உண்மையில் இதுவரைப் பார்த்ததில்லை. இதன் இயல்பான அளவு சுமார்………


🚩 7 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கொண்டது.  இந்த கருப்பை ஒரு கருவை வளர்ப்பதற்கு 100 க்கும் மேற்பட்ட முறை விரிவடைகிறது.

 

ஒவ்வொரு மாதமும், இது தன்னைச் சுயமாக புதுப்பிக்கிறது.  கான்ட்ராக்சன்ஸ் காரணமாக  மாதவிடாயை நீக்குகிறது, எனவே  மாதவிடாய் வலி கருப்பை வலி, என மாதா மாதம் எல்லா வலிகளையும் தாங்கிப் புதுப்பிக்கிறது.

 

இது அதன் சொந்த எடையை 150 மடங்கு வரை ஆதரிக்க முடியும். ஆம் ஒரு குழந்தை முதல் 10 குழந்தை வரை பாதுகாத்துத் தாங்குகிறது.


இன்று நாசமாய் போன நகர வாழ்க்கையில் கலப்பட உணவு முறையால் பல பெண்களின் கருப்பை நீர்க்கட்டியால் துன்பப்படுகிறது..


ஒரு சாதாரண பெண்ணை பெண்மையாக தாயாக மாற்றுவது இந்தக் கருப்பை  தான். அதை சில பெண்கள் சரியாககவனிப்பதில்லை என்பது தான் கவலை.இது மற்றொரு உறுப்பை உருவாக்கும் திறன் கொண்ட ஒரே உறுப்பு . ஆம் நஞ்சுக் கொடியை இது அந்த நேரத்தில் உருவாக்கும்.

 

பெண்கள் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், அதுவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது , நீங்கள் ஓய்வெடுத்தால், அது ஓய்வெடுக்கிறது.

 

இதே உறுப்பில் தான் உங்கள் வாழ்க்கைப் பகிரப்படுகிறது, ஏனென்றால் இந்த உறுப்புடன், 15 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த பெண்களும் உள்ளனர், தற்போது, ​​அவர்கள் வசதிக்காக 2 அல்லது 3 குழந்தைகளை மட்டுமே தருகிறார்கள், 


ஆனால் 20 க்கும் மேற்பட்ட உயிர்களைச் சுமக்க இந்த கருப்பை மூலம் தகுதிப் பெற்றவர்கள் பெண்கள்...


இது ஒரு தாயின் இரண்டாவது  இதயமாகும், ஏனென்றால் அங்கே அவள் தன் குழந்தைகளின் இதயத்தை உருவாக்குகிறாள் பெண்.


ஒரு துளியில் நீ உருவாகிய இடம் தான் இந்தக் கருப்பை மனிதா.... 


இதன் மகத்துவம் தெரிந்தே  அன்று 

7 நாட்கள் பெண்களை ஓய்வெடுக்க வைத்தனர்.. 


அதைத் தீட்டு என இன்று மாற்றிப் பெண்களை ஓய்வில்லாமல் மாற்றி கருப்பையை நீக்கும் அளவிற்கு கொண்டு வந்தது தான் நவீனத் தீட்டு...


.

⭕ #கர்ப்பப்பை_அளவு_எப்படியெல்லாம் #பிரச்னைகளைக்_கொடுக்கும்❗ 


“பொதுவாக 18 முதல் 25 வயது வரைக்குமான பெண்களின்………


👉கர்ப்பப்பை 7 முதல் 7.5 செ.மீ அளவிலும்……


👉சினைப்பை இரண்டும்  3.5 Cm அளவிலும் இருக்கும்.


மாதவிலக்கின் போது புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சுரந்து கர்ப்பப்பையை வளரச் செய்யும். 


மாதவிலக்கு சுழற்சியில் சில கோளாறுகள் ஏற்படும்போது, கர்ப்பப் பையின் வளர்ச்சியும் தடைப்பட்டு, கர்ப்பப்பை சுருங்கும். 


.

⭕#எண்டோமெட்ரியல்_தடிமன்_அளவு❓


⭐கருப்பையின் உள் அடுக்கின் சிறிய அளவு……👇


👉எண்டோமெட்ரியத்தின் தடிமன் குறைந்தது……  


▶ 0.6 செ.மீ கூட   0.7 செ.மீ ஆக இருக்க வேண்டும். 


⏩ 0.5 செ.மீ தடிமன் கொண்ட 0.5 செ.மீ கீழ் இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியாது.


கருவுற்ற முட்டையை பொருத்துவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதே எண்டோமெட்ரியத்தின் முக்கிய செயல்பாடு. 


கருத்தரிப்பதற்கு, கருப்பையின் எண்டோமெட்ரியத்தின் குறைந்தபட்ச தடிமன் குறைந்தது 7,மி.மீ இருக்க வேண்டும். 


கர்ப்பத்தின் தொடக்கத்துடன், உள் அடுக்கின் அமைப்பு கணிசமாக மாறுகிறது.


இயற்கையாகவே சில பெண்களுக்கு கர்ப்பப்பையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். 


சினைப்பையில் பிரச்னை இருந்து மாதவிலக்கு சுழற்சி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகவும் கர்ப்பப்பை வளர்ச்சி பாதிக்கப்படும். 


சினைப்பை பிரச்னைகளுக்கு  மருந்துகள் கொடுத்தால், மாதவிலக்கு சுழற்சியும் முறைப்படும். கர்ப்பப்பையும் சாதாரண அளவுக்கு வரும்.


மெனோபாஸ் காலத்திலும் கர்ப்பப்பையானது தன்னுடைய அளவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக ஆரம்பிக்கும். அதாவது மெனோபாஸுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கர்ப்பப்பை, அவள் பூப்பெய்துவதற்கு முன்பு இருந்த மாதிரி சின்ன அளவுக்குத் திரும்பும்.


⭕ கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதது எப்படி பிரச்னைக்குரிய விஷயமோ, அதே மாதிரிதான் கர்ப்பப்பை வீக்கமும் பிரச்னைக்குரியது.❗


➡கர்ப்பப் பை வளர்ச்சி சீராக உள்ள பெண்ணுக்கு மாதத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு மாதவிலக்கு இருக்கும். 


🉐 மாதவிலக்கின் போது வெளியேறும் ரத்தத்தின் அளவு 50 முதல் 100 மி.லி அளவு இருக்கும். 100 மி.லியை தாண்டினாலே பிரச்னைதான். அதன் தொடர்ச்சியாக…… 


🉐ரத்தசோகை வரும். ரத்தசோகை பிரச்னை சாதாரணமானதாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடியதில்லை.

அதனால்…… 


👉இதயம், 


👉சிறுநீரகம், 


👉நுரையீரல் 


என்று உடலின் ஒட்டு மொத்த உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். தவிர, மாதவிலக்கின் போது அதீதமான ரத்தப்போக்கு ஏற்பட்டு, கூடவே………


👉வயிற்றுவலி, 


👉களைப்பு, 


👉வேலையே செய்ய முடியாத நிலை 


என்று மற்ற அறிகுறிகளும் இருந்தால், அவர்களுடைய கர்ப்பப்பை வீக்கமாக இருக்கலாம் என்று சந்தேகப்படலாம். இந்தப் பிரச்னைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.


👉மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களும்……


👉கர்ப்பம் தரிக்காத பெண்களும்……


👉அதிக ரத்தப்போக்கை சந்திக்கிற பெண்களும்……


ஸ்கேன் மூலமாக கர்ப்பப்பை அளவைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கேற்ற சிகிச்சைகளையும் காலத்துக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.’’

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி