கோபம் - பின்விளைவு
🇨🇭 #கோபம்…❗❗❓❓❓
❌ #நம்முடைய_கல்லீரலை
#பாதிக்கும்…❗❗❓❓
🔰 நீங்கள்_மிகவும் (அ) அடிக்கடி_
கோபப்படுபவரா❓
⭐ கோபம் ஏற்படுவதற்கு வயது வரம்பில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை கோபம் ஏற்படுகிறது.
⭕ கோபம் ஏன் ஏற்படுகிறது❓
ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது!
📶 #ஆம்_நமக்கு_பிடிக்காதவற்றை
#மற்றவர்……………❗❗❗
▶சொல்லும்போது/
▶எழுதும்போது/
▶கேட்கும்போது/
▶படிக்கும்போது/
▶செய்யும்போது.....
இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்.
♦சரி❗நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்❓
👉 வெறுப்பு
👉 பழிவாங்குதல்
👉அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல்
👉தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல்
👉அடித்தல்/வன்முறை
👉முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல். (பாடிலாங்குவேஜ்)
இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம்.
♈ #கோபப்படும்_போது……
⏩இதய துடிப்பு அதிகரிக்கிறது.
⏩இரத்த அழுத்தம் அதிகமாகிறது
⏩சில நாளமில்லா சுரப்பிகள் வேகமாக சுரக்கின்றன.
⏩தசைகள் வேகமாக இயங்குகின்றன.
⏩மூச்சு விடுதல் வேகமாகிறது.
⏩மூளையில் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது.
⏩உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
⏩மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
⏩மூளையில் உள்ள இயக்க கட்டுப்பாட்டு மையங்கள் வேகம் அடைவதால், உடல் உறுப்புகள் வேகமாக இயங்குவதோடு உடலில் உள்ள சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பு நீர்களை சுரக்கும்.
⏩வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு உடல் முழுவதும் வியர்க்கிறது.
⏩தசைகள் விரைக்கும்.
⏩முகம் இறுகும்.
⏩தசைகளில் எரிதல் நடப்பதால் கல்லீரலிலிருந்து அதிகப்படியான சர்க்கரை செலவாகும்.
⏩உடலின் சூடு இயல்பு நிலை விட அதிக சூடாகும்.
⏩உடலில் இரத்த நாளங்கள் சூடாவதால்,நரம்பு மண்டலத்தின் வேகம் அதிகமாகிறது.இதனால் மூளையில் உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்பட்டு கோபம் அதிகமாகும்.பேச்சு சப்தம் கூடிக்கொண்டே போய் உச்சஸ்தாயில் முடிவடையும். இப்படியே தொடரும் கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.
⏩பேச்சு பாதித்து வாய் குளறும்.
⏩தொண்டை வறட்சி உண்டாகும்.
⏩அதிகப்பட்ச கோபத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும்.
⏩மனம் செயலாற்றும் தன்மையை இழக்கும்.
⏩மறதி உண்டாகும்.
⏩அதிகப்படியான சோர்வு,
⏩அசதி,
⏩பலவீனம்,
⏩தூக்கமின்மை,
⏩பசியின்மை,
⏩அஜீரணம்,
⏩மலசிக்கல்,
⏩தலைவலி,
⏩மயக்கம்
உண்டாகும்.
⏩இதய நோய்,
⏩சிறுமூளை,
பெருமூளை பாதிப்பு,
⏩பக்கவாதம்.
⏩பித்தம் தொடர்பான நோய்கள் உண்டாகும்.
⏩முகத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக இரத்தம் பாய்வதால் கண்களும், முகமும் சிவந்து விடும்.
⏩தொடர் கோபத்தால் முகம் விகாரமாய் தோன்றுவதோடு,
இளவயதிலேயே முதுமை தோற்றமும் உண்டாகும்.
⏩சர்க்கரை வியாதி,
💢 #கோபப்படுவதால்_ஏற்படும் #பிரச்சினைகள்❓
நீங்கள் கோபமாக இருக்கும்போது எப்போதாவது உங்கள் இதயத்தை தொட்டு பார்த்திருக்கிறீர்களா❓
இல்லையென்றால் இனிமேல் அதை செய்யுங்கள்... (இதனால் கோபம் சிறிது குறைய வாய்ப்புள்ளது).
❌ இவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல..…❓❓❗❗
👉கோபம் வேலை சூழலை/வியாபாரத்தை பாதிக்கிறது.
👉கோபம் திருமண வாழ்வை/குடும்ப அமைதியை பாதிக்கிறது.
👉கோபம் சமூக/குடும்ப உறவுகளை பாதிக்கிறது
👉கோபம் உடல்நலத்தை பாதிக்கிறது.
👉கோபம் உங்கள் மன நலத்தை பாதிக்கிறது.
என மிகப் பெரிய பரிசை நமக்கு இலவசமாக வாரி வழங்கும் வள்ளல் தான் இந்த கோபம். கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
⭐ அமைதியாக இருந்தால் கோபம் நம்மை அசைக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட.
⭐அமைதி உள்ளுணர்வுக்கு வலிமை அளிக்கிறது.
⭐வலிமை பெற்ற உள்ளுணர்வால் கோபத்திலிருந்து விலக, விலக்க முடியும்.
⭐வெறுப்பை கைவிட்டு, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.
⭐நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை ஆராய்ந்தால் போதுமானதே❗
Comments
Post a Comment