சிசேரியன் பிரசவம்

 🇹🇷#முதல்_பிரசவம்_சிசேரியன்_ஆகும் #போது……❗❗❗❗


🇹🇷#இரண்டாவது_பிரசவம் #சுகபிரசவத்துக்கு_சாத்தியமா…❓❓❓


👉என்பது பலரது கேள்வியாக❓ இருக்கிறது. இது சாத்தியமா என்ன என்வென்பதை பார்க்கலாம்.

 

🔯 பெண் கருத்தரித்த பிறகு பிரசவக்காலத்தில் அவரது உடல் நிலையின் ஆரோக்கியம் பொறுத்து அது சுகப்பிரசவமாகவோ அல்லது சிசேரியனாகவோ செய்யப்படுவது வழக்கம்.


⏩ முதல் குழந்தை தவிர்க்க முடியாத சூழலில் சிசேரியனாக ஆன பிறகு இரண்டாவது முறை கருவுற்றதும் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் இந்த பிரசவம் சுகப்பிரசவமாக சாத்தியம் இருக்கிறதா என்பதுதான்.


⏩ இது சாத்தியமாகுமா என்பதை இரண்டாவது கர்ப்பத்தின் போது அப்பெண்ணின் உடல் ஆரோக்கியம், உடலில் ஏதேனும் குறைபாடு போன்றவற்றை கொண்டு தான் முடிவு செய்ய முடியும். எனினும் இதற்கான முயற்சியாக என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்.


⭕#குழந்தையின்_எடை


▶முதல் குழந்தை உடல் எடை அதிகமாக அதாவது3.7 கிலோவுக்கு மேல் அதிகமாக இருக்கும் போது பெருமளவு சுகப்பிரசவத்துக்கு சாத்தியமில்லாமல் சிசேரியன் செய்யப்பட்டிருக்கலாம்.


▶குழந்தையின் எடை 2. 7 இருந்தால் சரியான அளவு. இந்த எடையால் சுகப்பிரசவம் தடைபடாது. இப்படி வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை இரண்டாவது கர்ப்பத்திலும் அதிகமாகாமல் பார்த்துகொள்ள வேண்டும்.


▶இரண்டாவது பிரசவத்தின் போது ஸ்கேன் பரிசோதனையிலும் மருத்துவ ஆலோசனையிலும் குழந்தையின் எடை அளவாக இருக்கும் படி பார்த்துகொள்ள வேண்டும். முதல் பிரசவம் குழந்தையின் எடையால் சிசேரியனாக்கபட்டால் இரண்டாவது முறை குழந்தையின் எடை அதிகரிக்காமல் அதே நேரம் சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.


⭕#நஞ்சு_கொடி_சுற்றி_இருந்தால்


▶நஞ்சு கொடு பான் கேக் வடிவத்தில் இருக்கும். இது கர்ப்பப்பையின் மேல் இருந்து தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து தருகிறது. நச்சு கொடி கர்ப்பக்காலத்தில் குழந்தை வளர வளர நகரும் . அப்போது குழந்தையின் அருகில் அல்லது குழந்தையை சுற்றி கொண்டிருந்தால் சிசேரியன் பிரசவமாக இருக்கலாம்.


▶முதல் பிரசவத்தில் இப்பிரச்சனை உண்டாகும் போது இரண்டாவது கர்ப்பக்காலத்திலும் நஞ்சு கொடி சுற்றுவதற்கு வாய்ப்பு உண்டு. இரண்டாவது கர்ப்பத்தில் மருத்துவரின் ஆலோசனையோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போதும் நஞ்சுகொடி இருக்கும் இடத்தை பொறுத்து அவை மீண்டும் குழந்தையின் அருகில் வராமல் தடுக்கும் முயற்சி செய்யலாம்.


⭕#கர்ப்பக்கால_நோய்


◀கர்ப்பக்காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருந்து பிரசவக்காலத்தின் இறுதியில் கட்டுக்குள் இல்லாமல் போகும் போது குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியம் குறையாமல் இருக்க சிசேரியன் செய்யப்படுவதுண்டு. தற்காலிகமான பிரச்சனையாக இருந்தாலும் பிரசவக்கால இறுதியில் சிலருக்கு அதிக ரத்த அழுத்தம் ,நீரிழிவு வரக்கூடும்.


◀முதல் கர்ப்பத்தின் போது கர்ப்பக்கால தற்காலிக நோயை கொண்டிருந்தால் இரண்டாவது முறை கருவுற்றதும் கர்ப்பகால நோய் வராமல் தடுப்பதற்கான முயற்சி எடுப்பது அவசியம். முதல் பிரசவ பாதிப்பு இரண்டாவது பிரசவத்திலும் தொடர்ந்து இருந்தால் பேறுகாலம் வரை மருத்துவரின் கண்காணிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும்.


⭕#இடுப்பு_எலும்பு


▶ பொதுவாகவே உயரம் மிக குறைவாக இருக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் காட்டிலும் சிசேரியன் ஆவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உண்டு. இது முதல் பிரசவத்துக்கு மட்டும் அல்ல இரண்டாவது, மூன்றாவது என தொடர்ந்து வரும் எல்லா பிரசவக்காலத்துக்கும் இது பொருந்தும்உயரம் சீராக இருந்து இடுப்பு எலும்பு விரிவடைவதில் சிக்கல் இருந்தால் இரண்டாவது பிரசவம் சுகப்பிரசவமாகுமா என்பதும் பார்க்கலாம்.


▶ இடுப்பு எலும்பு வளையும் தன்மை ரிலாக்ஸ் என்பது குறைவாக இருப்பவர்கள் கருவுற்ற நாள் முதலே இடுப்பு எலும்பு வலுப்படுத்த உரிய பயிற்சியை மருத்துவரிடம் கேட்டு அதன் படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் குழந்தையின் தலை உரிய நேரத்தில் பிரசவம் நெருங்க நெருங்க பெண் உறுப்பின் கீழ் வெளியேற ஏதுவாக தயார் நிலையில் வருவதற்கு வாய்ப்பு உண்டு.


▶ இது பிரசவக்காலத்தின் இறுதி மாதத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் வழியாகவே உறூதிப்படுத்தப்பட்டுவிடும். அதற்கேற்ப உங்கள் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்குமளவு பயிற்சியை ஆரம்ப கட்டத்தில் இருந்து செய்துவர வேண்டும்.


🔴 #குறிப்பு


கர்ப்பப்பையில் இருக்கும் தழும்பு சிசேரியன் செய்யப்பட்ட தழும்பு ஏற்கனவே உடலில் இருக்கும். இந்நிலையில் பிரசவ வலி வரும் போது. அந்த தையல் விடுவதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடங்களுக்குள் அடுத்த குழந்தை பிறக்கும் போது சுகபிரசவம் வாய்ப்பதற்கான முயற்சியில் இந்த கர்ப்ப்பை தழும்பு தையல் பிரிவதற்கான வாய்ப்பு உண்டு.


இதிலும் குழந்தையின் எடை சற்று அதிகமாக இருக்கும் போது அதிக அழுத்தமும், முக்கலும் கொடுக்கும் போது தையல் பிரிவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.


ஆக மேற்கண்ட இந்த நான்கு பிரச்சனைகளில் ஒன்றாக முதல் பிரசவம் சிசேரியனாக இருந்திருந்தால் இரண்டாவது பிரசவத்தில் இந்த பிரச்சனைகளை குறித்து உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். அதிலும் முதல் பிரசவம் பார்த்த மருத்துவரே இரண்டாவது பிரசவமும் பார்ப்பவராக இருந்தால் உங்கள் உடல் வரலாற்றை நன்கு அறிந்திருப்பார்.


தொடர்ந்து அவரிடம் சிகிச்சைசெல்வதன் மூலம் இரண்டாவது பிரசவம் சுகப்பிரசவமாக மருத்துவரே வழிகாட்டுவார். தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சிசேரியன் டெலிவரி அறிவுறுத்தப்படும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி