சாப்பிடும் முறை
🉐#ஏன்_சாப்பிடும்_போது_பேசக்கூடாது #தெரியுமா❓
⭕#நின்றுகொண்டு_மற்றும்
#அன்னாந்து………
✳#தண்ணீர்_குடிக்ககூடாது_ஏன்❓
✴#உங்களுக்கு_தெரியுமா❓
⭕ நீர் இன்றி அமையாது உலகு என்பார்கள். நீர் இன்றி உயிர்களின் நல்ல ஆரோக்கியமும் கூட அமையாது தான். எந்த உயிரினமாக இருந்தாலும், தண்ணீர் மிக அவசியமான ஒன்று. உணவின்றி கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நீரின்றி இரண்டு நாட்களை கடப்பதே பெரிது.
⏪ தண்ணீரை மண்பானையில் குடிப்பதிலும், பித்தளைக் குடத்தில் குடிப்பதிலும் கூட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
⏩ ஏன், நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறைகளில் கூட நல்லது தீயது என இருக்கிறது.
.
🔴 ஏன் தண்ணீரை வேகமாக குடிக்க கூடாது❓
🔴 நின்றுக் கொண்டே குடிக்க கூடாது❓
🔴 என இனிக் காண்போம்...❗❗
👉 ஒருவர் ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் தண்ணீர் குடிக்கும் வகை கூட உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
👉 நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, வயிற்றில் தெறித்து விழும்படி ஆகிறது. திடீரென வயிறில் வேகமாக தண்ணீர் செல்வது, அருகே அமைந்திருக்கும் உடல் உறுப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும். முக்கியமாக குடல் மற்றும் செரிமான மண்டல இயக்கத்தை பாதிக்கும்.
👉நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, சிறுநீரகத்தின் வடிக்கட்டுதல் தன்மையை பாதிப்படைய செய்யும் என கூறப்படுகிறது. சரியாக வடிகட்டுதல் ஆகாவிடில், சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் பாதை தொற்று / கோளாறுகள் உண்டாகலாம்.
👉நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது, உடலின் நீர் சமநிலையை பாதிக்கிறது. இதனால், மூட்டு பிரச்சனைகள் உண்டாகலாம்.
👉நின்றுக் கொண்டே தண்ணீர் குடிப்பது, செரிமான சிக்கல்களை கொண்டு வரும். மேலும் GERD எனப்படும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உண்டாகவும் இது காரணியாக இருக்கிறது.
👉 நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
👉 நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் குளிர்ந்த மற்றும் சூடான நீரைப் பருகக்கூடாது என்று கூறப்படுகிறது.
👉 நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.
👉 நின்று கொண்டு தண்ணீரை பருகும்போது அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டம் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் வரை சீரற்றதன்மையை உருவாக்கும். இதனால் மூட்டுவலி மற்றும் எலும்புகளின் இணைப்புகளில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
👉 தொடர்ச்சியாக நின்று கொண்டே பருகினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
⭕ #தண்ணீரை_வாய்_வைத்து #குடியுங்கள்❗❓
ஆயுர்வேத முறையில் தண்ணீரை வாய் வைத்து, மெல்ல, மெல்ல சிப் செய்து சுவைத்து குடிப்பது தான் நல்லது என கூறப்பட்டிருக்கிறது. மேலும், தண்ணீரை வேகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
🔴 இனி மறந்தும் இந்த நேரங்களில்
தண்ணீர் குடிக்கவே குடிக்காதீங்க❗
ஆபத்து அதிகம் வரும்❗
👉உடலில் 70 சதவீத தண்ணீர்……
தசைகளிலும்,
👉90 சதவீத தண்ணீர்
மூளையிலும்………
👉இரத்தத்தில்
83 சதவீத தண்ணீர் கலந்து உள்ளது.
இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
ஆனால் அத்தகைய தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடிக்க கூடாது என்பதையும் குடித்தால் என்ன ஆகும் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
🔰#காரமான_உணவிற்கு_பின்பு🔰
சிலர் காரமான உணவுகளை உண்ட பின்பு உடனே நீர் அருந்தும் பழக்கம் கொண்டு இருப்பர்.
மேலும் இந்த நிலையில் நாம் நீர் அருந்தினால் அவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்தும்.
🈯#தூங்குவதற்கு_முன்🈯
பலருக்கு இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும்.
இப்படி இரவு தண்ணீர் குடிப்பதால் இரவு நேரத்தில் கிட்னி மெதுவாகவே வேலை செய்யும் இதனால் உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும்.
🈸#சாப்பிடும்_போது🈸
பலரும் சாப்பிடும் போதும் சாப்பிட முடித்த பின்பும் தண்ணீர் குடிப்பர். இவ்வாறு குடித்தால் அவை செரிமான கோளாறை தரும்.
மேலும் மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.
🈚#அளவுக்கு_அதிகமாக🈚
தினம் 2 லிட்டர் தண்ணீரே நமது உடலுக்கு போதுமானது. மேலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான்.
அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.
🈶#உடற்பயிற்சிக்கு_பிறகு🈶
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள்.
இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.
இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.
🈯#கடல்_நீர்🈯
சிலர் குடிப்பதற்கான கடல் நீரை பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறு.
ஏனெனில் கடல் நீரில் ஏராளமான மனித உடலில் இருந்து வெளியேறிய ஒட்டுண்ணி வகை வைரஸ்கள் இருப்பதால் இவை உடலுக்கு மிக அபாயகரமான விளைவை தந்து விடும்.
.
🔴 #ஏன்_சாப்பிடும்_போது_பேசக்கூடாது #தெரியுமா❓❓❓
மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள்.
🔰#அவை……🔰
◀ முகத்தோடு இணைந்த தொண்டை,
◀ வாயோடு இணைந்த தொண்டை,
◀ குரல் வளையோடு இணைந்த தொண்டை.
வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு *லெவல் கிராசிங்* போன்றது.
சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.
இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும்.
சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள்.
மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.
சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள்.
தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்த கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும்.
அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம்தான் குறட்டை விடுதல் என்கிறார்கள்.
குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள்
⭕ #உணவு_உண்ணும்_போது #கடைப்பிடிக்க_வேண்டியவை…❓❗
⭐ உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
⭐ காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
⭐ சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
⭐ இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
⭐ அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.
⭐ பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் உணவை உண்ணக் கூடாது.
⭐ இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டே சாப்பிடக்கூடாது.
⭐ காலணி( செறுப்பு) அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
⭐ சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக்கூடாது.
⭐ இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
⭐ உணவினை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது மற்றும் அதிக கோபத்துடனும் உணவினை உண்ணக் கூடாது.
⭐ சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
⭐ ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடக் கூடாது
⭐ உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
⭐ ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்
⭐ உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
⭐ உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
⭐ சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
⭐ உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
⭐ சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
⭐ தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
☀ சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
Comments
Post a Comment