பித்தம்
🇲🇻#உடலில்_ஏற்படும்_பல_நோய்களுக்கு #அடிப்படை_காரணம்…
🇨🇭#பித்தம்___பித்தம்___பித்தம்❗❗❓❓
✴ இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் என்பது உஷ்ணமாகும். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும்.❗
உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஒன்றில் குறைந்தாலும் அவை உடலில் குறைபாட்டை உண்டாக்கும்.
கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும்.
.
⬆ #பித்தம்_அதிகமானால்_ஏற்படும்⬆ ⬆#நோய்கள்_மற்றும்_அறிகுறிகள்❓
👉உடலில் தடிப்பு,
👉இரத்த பித்தம்,
👉உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல்,
👉உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல்,
👉ரத்தம் நீல நிறமாக மாறுதல்,
👉கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம்,
👉வாயில் கசப்புச் சுவை,
👉வாயில் இரத்தத்தின் நாற்றம்,
👉வாயில் கெட்ட நாற்றம்,
👉தாகம் அதிகரித்தல்,
👉உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை,
👉வாய் வேக்காடு,
👉தொண்டைக்குள் வேக்காடு,
👉கண் நோய்,
👉மலத்துவாரத்தில் வேக்காடு,
👉ஆண் குறியில் வேக்காடு,
👉உயிருக்கு ஆதாரமான இரத்தம் வெளிவருதல்,
👉கண் இருண்டு போதல்,
👉கண், சிறுநீர், மலம் இவை பசுமை கலந்த மஞ்சள் நிறமாகுதல்,
👉உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு ஏற்படும்
👉உடல் வறட்சியாக இருக்கும்
👉தோல் கடினமாக மாற்றமடையும்
👉குமட்டல்
👉அடிக்கடி தலைச்சுற்று
👉இளநரை
👉மலச்சிக்கல்
👉பசியின்மை
👉வாயு பிரச்சனை
👉உடல் மற்றும் கண் எரிச்சல்
👉நாக்கு வறட்சியாக காணப்படும்
👉வாய் கசப்பு தன்மையுடையதாக இருக்கும்
👉அஜீரணம்
👉மனஅழுத்தம்
👉அல்சர்
👉உயர் இரத்த அழுத்தம்
👉இளநரை
👉பொடுகுதொல்லை
👉முடி உதிர்வு
👉தோல் சுருக்கம்
👉மஞ்சள்காமாலை
போன்ற அறிகுறிகள் காணப்பட்டு
பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
.
🇨🇭 #பித்தம்_குறைய_என்ன_செய்ய #வேண்டும்❓
அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும் இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில்நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.
மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாக இருந்தால் இது உடல் உஷ்ணத்தை தூண்டி பித்தத்திற்கு வழிவகுக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது பித்தம் குணமாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்தது.
அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது.
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும். எனவே உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதிகமான அளவு தேனீர், காப்பி அருந்துவதும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து பித்தத்தை அதிகரிக்கும். அதிகளவு டீ, காப்பி அருந்துவதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரியான அளவு தூக்கமின்மையும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து பித்தத்தை அதிகரிக்கும். எனவே தினமும் போதியளவு தூக்கம் மிக அவசியம்.
கசப்புத் தன்மை கொண்ட உணவுகளையும் இனிப்பு உணவுகளையும் எடுத்துக் கொண்டால்,உடலில் பித்தத்தின்
அளவு குறையும்.
ஆப்பிள், திராட்சை, சுச்சினி, லெட்யூஸ், வெள்ளரிக்காய், பீன்ஸ், தேங்காய், வாட்டர்மெலன், பால் ஆகிய உணவுகள் நம்முடைய உடலின் பித்த நிலையைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளாகும்.
.
🇨🇭 #பித்தத்தின்_சீற்றத்தினால்ஏற்படும்
#உபாதைகளை_நீக்க……
40 வகையான பித்தத்தை தணிக்கும் வல்லமை கொண்டது. எளிமையாக தயாரிக்கலாம் என்பதோடு எப்போதும் வீட்டில் பதப்படுத்தி வைத்தால் அவசரத்துக்கு கை கொடுக்கும்.
.
💊#தேவையான_பொருள்கள்❓
இஞ்சி- தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கப்பட்டது 50 கிராம்
▶சீரகம் - 50 கிராம்
▶காட்டு சீரகம் - 50 கிராம்
▶கருஞ்சீரகம் - 50 கிராம்
▶இந்துப்பு - 50 கிராம்
▶எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப
அனைத்தையும் உலோக பீங்கானில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இவை மூழ்கும் அளவுக்கு எலுமிச்சை சாற்றை மட்டும் விடவும். கொட்டையில்லாமல் சாறு இருக்கட்டும். நன்றாக கிளறி அதை வெயிலில் காயவைத்து எடுக்கவும். நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு அதை பொடி செய்து வைக்கவும். இந்த பொடியை ஈரம்படாத கண்ணாடி பாட்டிலில் வைத்து தினமும் கால் டீஸ்பூன் அளவு காலை மாலை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள் அனைத்தும் தீரும்.
.
💊#பித்தம்_குறைய ❓
🔰தேவையான பொருட்கள்❓
▶சுக்கு பவுடர்: 50 கிராம்
▶சீரக பவுடர்: 50 கிராம்
▶நெல்லிக்காய் பவுடர்: 50 கிராம்
இவை மூன்றையும் கலந்து ஒரு போத்தலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.
.
🔰#பித்தம்_தன்னுடைய_இயற்கையான🔰#அளவிலிருந்து_குறைந்து
🔰#விட்டால்…❓❗
▶செயலற்றிருப்பது,
▶குளிர்ச்சி, விட்டு விட்டு ஏற்படும் உடல் வலி,
▶குத்தல்,
▶சுவையின்மை,
▶அசீரணம்,
▶உடலில் சொரசொரப்பு,
▶நடுக்கம்,
▶பளு, நகம், கண் இவை வெளுத்துப் போதல்
போன்றவை உடலில் காணும்.
Comments
Post a Comment