கால் வலி
🇨🇭#ஆணோ_பெண்ணோ #கால்_வலி_பற்றி #கூறாதவர்கள்_யாரும்_இல்லை…❗❗ ⭕ காரணம்………❓ நம் காலை அத்தனை பாடாய்படுத்தி விடுகின்றோம். அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தேய்வு, எலும்பு, தசை, தசைநாரில் ஏற்படும் காயங்கள், சுளுக்கு, ரத்தகட்டி, குறைவான ரத்த ஓட்டம், சுருள் சிரை நரம்பு (varicose vein) என பல காரணங்களால் கால் வலி உண்டாகின்றது. ♦கால் ஆடு தசை வலி ஏன் உண்டாகின்றது❓ அடிபடுதல், வீக்கம், சருமம், தசை, எலும்பு, மூட்டு ஆகிய கீழ் கால் பகுதிகளில் காயம் ஏற்படுதல் காரணமாக உள் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படுதல், அதிக கால் உழைப்பு, கிருமி பாதிப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்றது. ♦அடிக்கடி ஏன் கால் வலி என்கிறோம்❓ காலின் ஆழ்ந்த ரத்த குழாயில் உணர்வு ஏற்பட்டிருக்கலாம். நீண்ட காலம் படுக்க வேண்டிய உடல் பாதிப்பு ஏற்படும் பொழுது கால்களுக்கு பயிற்சி இல்லை என்றால் இவ்வாறு ஏற்படலாம். வீக்கம், பிடிப்பு, வலி ஏற்படலாம். மூட்டு வலி, மூட்டு தேய்மானம் அதிகமாகக் காணப்படும் ஒன்று. எலும்பிலோ, சதையிலோ கிருமி பாதிப்பு ஏற்பட்டு வீக்கம், சிவந்து போதல், வலி ஆகியவை ஏற்படலாம். நரம்பு பாதிப்பினால் வலி, மரத்து போகுதல், குறு குறுத்தல் ...