கல்லீரல் நலமடைய

 🇨🇭#கல்லீரல்_கொழுப்பு_Fatty_Liver  #குறைய………


🇨🇭#நம்ம_வீட்டு_கை_வைத்தியம்❓


ஈரலில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் எளிய வீட்டு மருந்து இது 


பசி இன்மை சீரணம் இன்மை ருசி இன்மை மலச்சிக்கல் போக்கும் அருமருந்து…


💊கசாயமாக…………💊


▶வறுத்த துவரம்பருப்பு ............ மூன்று கிராம் 


▶கறிவேப்பிலை தூள் ...மூன்று கிராம் 


▶சுக்கு தூள் ................ மூன்று கிராம் 


ஆகிய மூன்று பொருட்களையும் நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து நூறு மில்லி கசாயாமாக சுருக்கி இறக்கி வடிகட்டி கல் உப்பு ........ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து ஒரு வேளை மருந்தாகக் குடிக்க வேண்டும்.


நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு மருத்துவ ஆய்வு செய்து பார்க்க ஈரலின் நிலை நன்கு மேம்பட்டு ஆரோக்கியம் அடைந்து இருப்பதை உணர முடியும்.


💊அல்லது சூரணமாக💊


வறுத்த துவரம்பருப்பு ............ ஐம்பது கிராம் 


கறிவேப்பிலை தூள் .... ஐம்பது  கிராம் 


சுக்கு தூள் ................ ஐம்பது கிராம் 


ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்துக்கலந்து வைத்துக் கொண்டு உணவு சாப்பிடும்போது ஒரு சிட்டிகை மட்டும் கல் உப்பு சேர்த்து சோற்றில் பிசைந்து சாப்பிடலாம். அல்லது இட்லி தோசைக்கு பொடியாகவும் பயன்படுத்தி நலம் அடையலாம்.

அல்லது இந்த சூரணத்தை வெந்நீரில் கலந்து தினமும் இரண்டு மூன்று வேளைகள் குடிக்கலாம் 

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதை ஒரு மருந்தாக அல்ல உணவாகப்பயன் படுத்தி ஈரல் நோய்களில் இருந்து விடுபட்டு நலமுடன் வாழலாம்.


*💊திரிபலா கஷாயம்💊*


👉தேவையானப் பொருள்கள்❓


கடுக்காய்த் தோல்=100 கிராம்.


நெல்லி வற்றல்=100 கிராம்.


தன்றிக்காய் தோல்=100 கிராம்.


➡ செய்முறை❓


எல்லாவற்றையும் சுத்தப் படுத்தி,வெயிலில் காய வைத்து,இடித்து,பொடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


👉உபயோகிக்கும் முறை❓


இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200 மி.லி நீரில் கலந்து அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்து மருந்துகளை வடிக்கட்டிச் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும். காலையிலும் இதே போல் ஊறவைத்து மாலையில் கொடுக்கவும்.


⭐ தீரும் நோய்கள்❓


காமாலை,ஈரல் வீக்கம் போன்ற நோய்கள் குறையும்.


💊அன்னாசிப் பழத்தில் இருந்து பிழிந்த சாறை ஒரு நாளைக்கு இரண்டு,மூன்று தடவை 100 மி.லி வீதம் குடித்து வந்தால் ஈரல் நோயின் வீரியம் குறையும்.


💊முள்ளங்கியை இடித்துப் பிழிந்து சாறை வேளைக்கு 25 மி.லி ஆக ஒரு நாளைக்கு 2 வேளை குடிப்பதால் வலப்பாட்டு மற்றும் இடப்பாட்டு ஈரல் வீக்கம்,ஈரல் கட்டி முதலியவை குறையும்.


❓#வேறஎன்ன_செய்ய_வேண்டும்❓


* மதுவை மறக்க வேண்டும். 


* உடல் எடையைப் பேண வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும். 


* கொழுப்பு மிகுந்த உணவுகளான செந்நிற இறைச்சிகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 


* முக்கியமாக, பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய்யில் கவனம் தேவை. 


* நொறுக்குத் தீனிகளை ஓரங்கட்ட வேண்டும். மைதா உணவுகளும் வேண்டாம். 


* இனிப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


 * உணவில் உப்பு அளவோடு இருக்கட்டும். 


* வெள்ளை அரிசி உணவுகளைக் குறைத்துக் கொண்டு, முழுத்தானிய உணவுகளையும் சிறுதானிய உணவு களையும் அதிகப்படுத்த வேண்டும்.


* கீரைகள், பழங்கள், காய்கறிகள் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபிளவினாய்டு நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிக பலன் தரும். அதற்கு அவரைக்காய்க்கு முக்கியத்துவம் தர வேண்டும். தினமும் 3 கப் காய்கறி தேவை.


 * சிவப்பு, ஆரஞ்சு, அடர் பச்சை மற்றும் மஞ்சள் நிறக் காய்களும் பழங்களும் சிறந்தவை. 


* எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. 


* தாவரப் புரதங்களைக் கூட்ட வேண்டும். உதாரணம்; பருப்பு மற்றும் பயறுகள், முளைவிட்ட தானியங்கள். 


* ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்துள்ள மீன் உணவுகளைச் சேர்த்துக்கொண்டால் நல்லது. 


* தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுவதும் நீச்சலும் அதே பலனைத் தரக்கூடியவையே. 


* மன அழுத்தம் ஆகாது. 


* 6 - 8 மணி நேரம் இரவுத் தூக்கம் தேவை.. 


* இத்தனையும் சரியாக இருந்தால் கொழுப்புக் கல்லீரலுக்கு நம் உடலில் இடமில்லை சிகிச்சையும் தேவையில்லை.


* பழைய அரிசியில் சமைத்த சாதத்தில் மோர் கலந்து தர வேண்டும்.


* ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, கரும்புச்சாறு நல்லது.


* பாசிப்பருப்பு மிகவும் நல்லது. கூட அரிசியை சேர்த்து சமைக்கலாம்.


* அசைவம், சீஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை, இனிப்பு ஆகாது. நோய் கடுமையான நிலையில் பால், நெய் இவற்றைக்கூடத் தவிர்க்கவேண்டும்.


* கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கைப்பிடி அளவு கொத்தமல்லி, ½ கைப்பிடி அளவு வெட்டுவாய்ப்பூண்டு ஆகியவற்றை அரைத்து துவையல் செய்து கொடுக்கலாம்.


* சோற்றுக்கற்றாழையுடன், மஞ்சள், மல்லி கலந்து ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உணவுக்கு முன் தருவது நல்லது.


* மலமிளக்கி மருந்து முதலில் தரப்பட வேண்டும்.


* திரிபலாக் கஷாயம் 1 அவுன்ஸ் வீதம் 2 வேளை தரலாம்.


* நவாயாச சூரணம் 300 மி.கி. தேனுடன் கலந்து தினமும் இருவேளை தரலாம்.


* வெறும் வயிற்றில் 2, 3 செம்பருத்தி பூக்களை சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புகள் குறையும்.


* கல்லீரல் குழாய்களில் அடைப்பு இருந்தால் ‘அப்ரகம்’ என்ற கனிமத்தின் பஸ்மம் நல்ல மருந்து. 100-500 மி.கி. வரை தரலாம்.


* 1 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி மஞ்சள், 2 தேக்கரண்டி கலந்து காலை 6 மணி, மாலை 6 மணி எனக்கொடுக்க ஈரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.


* ஈரல் வீக்கம், சுருங்குதல் ஆகியவற்றுக்கு கொள்ளுக்காய் நல்ல மருந்து. 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் வேர்ச்சூரணம் கலந்து கொதிக்கவிட்டு ½ லிட்டராக சுருங்கிய பின் 3 வேளை உணவுக்கு முன் சாப்பிட குணம் தெரியும்.


* கொள்ளுக்காய் வேர்ச்சாம்பல் 50 மி.கி. காலை மாலை கொடுத்தால் ஈரல் சுருக்கத்துக்கு நல்லது.


* கீழாநெல்லி, கடுக்காய், வல்லாரை, கரிசிலாங்கண்ணி, சீந்தில் கொடி ஆகியன நன்மை தரும்.


* கடுமையான ஹெபடைட்டிஸ் உடன் ரத்த சோகையும் சேர்ந்திருக்கலாம். ஆகவே இரும்புச்சத்து தரும் மருந்துகளை கொடுக்கலாம்.


* முழு ஓய்வு தேவை.


* உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வெயிலில் நடத்தல், நீண்ட பயணம் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும்.


* வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயண குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.


* சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.


* மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது.சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும்.பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம்படுத்தும்.


* கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய்யை 20 லிருந்து 30 கிராம் வரை தினசரி உபயோகிக்கவும்.


* சுண்டக்காய் செடியின் துளிர் இலை எடுத்து அதனுடன் இஞ்சி, 

தேங்காய், புளி இவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டுவர கல்லீரல் நோய்கள் தாக்காமல் கல்லீரல் பலப்படும்.


* திராட்சை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும்.


* சீந்தில் கொடி பொடியை பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெறும்.


* கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 5, துளசி 5, கீழாநெல்லி சிறிதளவு எடுத்து காலை மாலை சாப்பிடுவதற்கு முன் இவற்றை சாப்பிட்டு வர (15 நாட்களுக்கு ) கல்லீரல் சம்பந்தமான நோய்கள் தீரும். கல்லீரல் பலப்படும்.


* தேனுடன் தக்காளி பழச்சாறு கலந்து சாப்பிட கல்லீரல் பலப்படும்.


* ரோஜாப்பூவுடன் சீனா கற்கண்டு சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து ஒரு வாரம் வெயிலில் வைத்து பிறகு காலை மாலை சாப்பிட்டு வர கல்லீரல் பலமடையும்.


* நாள்தோறும் ஒருதுண்டு  பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.


* கீழாநெல்லி இலையை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். உப்பில்லா பத்தியமாக இருந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். கல்லீரலை செயல்பட வைக்கும்.


* நீண்ட நாள் வாழ கல்லீரல் மிகவும் அவசியமான உறுப்பாகும்.இதனை சரியாக பராமரிக்க வெங்காயம், 

கரிசலாங்கண்ணி, 

பொன்னாக்கண்ணி, பச்சை காய்கறிகள், உலர்ந்த பழங்கள் உண்ண வேண்டும்.


💊ஆப்பிள் சீடர் வினிகர்💊


ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.


💊நெல்லிக்காய்💊


வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.


💊அதிமதுரம்💊


சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.


💊மஞ்சள்💊


தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.


💊ஆளி விதைகள்💊


இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


💊பப்பாளிப் பழம்💊


கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.


💊கீரை, கேரட் ஜூஸ்💊


அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.


💊அவகேடோ மற்றும் வால்நட்ஸ்💊


கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்


💊ஆப்பிள், காய்கறிகள்💊


கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.


💊க்ரீன் டீ💊


இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.


❌தவறான டயட்❓


உடலை சிக்கென்று வைக்கிறேன் பேர்வழி என்று ஏதாவது ஒரு ‘ஃபேன்சி டயட்டிங்' முறையை பின்பற்றினால், முதலில் பாதிப்படைவது கல்லீரல் தான். நல்லதை செய்கிறோம் எனும் போலி மனமயக்கத்தில், உடலில் நிஜமாக நடப்பது என்ன என்பதை நம்மால் உணர முடியாமல் போய்விடும். 


எனவே கல்லீரலின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய ‘கடுமையான டயட்' முறைகளை தவிர்த்து, ஒரே சீரான உணவுமுறை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.


❌உடற்பயிற்சியின்மை❗❓


உடலுக்கு எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாமல், மந்தமான, சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றினால், வியாதிகள் நம்மை தேடி வந்து சேரும் என்பது தான் உண்மை. கொஞ்சமாவது நடக்க வேண்டும், கை மற்றும் கால்களை அசைத்து வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது தான் உடலில் உயிர்ப்பு இருக்கும். 


ஏ.சி சொகுசு மற்றும் யாவற்றுக்கும் மற்றவர் உதவி என்று சோம்பலான வாழ்க்கையை வாழ்ந்தால், வியாதிகள் தான் உருவாகும். பின்னர், எல்லாம் இருந்தும் ‘ஆரோக்கியம் இல்லை - ஆயுளும் இல்லை' எனும் துரதிர்ஷ்டத்திற்குத் தான் உட்பட வேண்டியிருக்கும்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


      999 437 9988 ☎ 81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி