இயற்கை வெங்காய உணவு

 இது மருந்து அல்ல  

எப்பொழுதும் நோயின்றி

ஆரோக்கியமாக வாழ 

நாம் உண்ண வேண்டிய  ஒரு உணவு


     சின்ன வெங்காயத்தை மூன்று கைப்பிடி அளவு சுத்தம் செய்துகொண்டு அதனோடு பெரிதாக உள்ள தேங்காயில்

 அரை மூடி எடுத்து துருவி

       

       இவை இரண்டையும் நெய்யிலிட்டு வதக்கி நெய் சேராதவர்கள் நல்லெண்னையை  செக்கு எண்ணெய்யாக 

பார்த்து வாங்கி அதிலிட்டு வதக்கி


     வேக வைக்கும் பொழுது அதிகம் குழைந்து போகாத அளவிற்கு லேசாக வேக வைத்து பாதி அளவிற்கு வெந்ததும்


         இதில் வறுத்துப் பொடித்த எள்ளின் பொடியை ஐந்து கிராம் அளவிற்கு தூவி நன்றாகக் கிளறி கொண்டு

          

          பதமாக அதாவது உன்னும் பக்குவத்திற்கு வந்ததும் இதனோடு முருங்கைப் பூ முருங்கைக்கீரை இரண்டையும் ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து


       ஏற்கனவே செய்து வைத்திருக்கும் வெங்காயம் தேங்காய் கலவையில் இந்த கீரையையும் சேர்த்துக் கொண்டு ருசிக்காக சிறிது உப்பை சேர்த்து கொண்டால்


        இப்பொழுது சத்தான வெங்காய கூட்டு ரெடியாகி விட்டது


        இதை உணவோடு அதாவது உணவும் இந்த கூட்டும் சரிவிகிதத்தில் இருக்குமாறு கலந்து காலை உணவாக சாப்பிட்டு வரவேண்டும்


        தொடர்ந்து இதை பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர உடலில் புதியதொரு உற்சாகம் ஏற்படுவதை நம்மால் உணர முடியும்


ஆதலால்


       வெங்காயம் உண்ண தன் காயத்திற்கு பழுதில்லை என்று இதை உணவாக உண்டு நன்மையைப் பெறலாம்


இதைப்போல மருந்தாக உட்கொள்ளும் பொருட்களை உணவாக  எப்படி உட்கொள்வது என்று இன்னொரு முறையில்பார்ப்போம்

    

         தூதுவளை கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிட்டு வந்தால்


இதனால்


சளி கோழை கபம் விலகும்

நரம்புகளுக்கு நல்ல சக்தி கிடைக்கும்

உடலில் உள்ள வலிகள் போகும்

வாத நோய்களின் பாதிப்புகள் குறையும்


இதைப்போலவே


         அம்மான் பச்சரிசி என்னும் மூலிகையை பருப்பில் இட்டு சாப்பிட்டு வந்தால்


இதனால்


வயிற்றுப் புண்கள் ஆறிவிடும்

மலச்சிக்கல் நீங்கும்

குடல் வலிமை பெறும்

நெஞ்செரிச்சல் குணமாகும்


ஆனால்


      இந்த கீரைகள் இரண்டையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு இதை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால்


ஆண்மை சக்தி உண்டாகும்

உடல் வலிமை பெறும்

நோய் நொடிகள் விலகும்

மேலும்

உடல் அழகு பெறும்

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை

உண்மைதான்


     ஞான மூலிகை என்னும் தூதுவளை கீரையோடு மூலிகையில் வெள்ளி சத்து அதிகமாக இருக்கின்ற அதாவது வெள்ளி பஸ்பம்  என்று சித்தர்களால் சொல்லிய அம்மான் பச்சரிசி கீரையை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் நல்ல வலிமையை பெறும் என்று வேறு ஒரு உதாரணத்தைச் சொல்லி உணர்த்த தேவையில்லை


சித்தர்களின் சீடன் 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி