பாரம்பரிய அரிசி வகைகள்

 🇨🇭#அந்தக்காலத்தில்_2000_க்கும் 

#மேற்பட்ட………


🇨🇭#அரிசி_வகைகள்_நம்மிடம்

#இருந்தது……❗❗❗


⭕ அரிசி என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் உண்மை அல்ல. நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசி பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவாக தின்றுகொண்டிருக்கிறோம்.


நாம் சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்காமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.


"" இயற்கை வேளாண் விஞ்ஞானி "" நம்மாழ்வார் கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. மிகவும் முக்கியமான ரகங்களான, கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி . இவைகள் எல்லாம் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை. நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு,  தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.


🔴 #நீங்கள்_தெரிந்துகொள்ள_வேண்டிய #பாரம்பரிய_அரிசி_வகைகள்❓❗


▶மாப்பிள்ளை சம்பா


▶கருப்பு கவுனி


▶குடவாழை


▶துளசிவாச சீரகச்சம்பா


▶கண்டசாலி


▶கைவரச்சம்பா


▶வாடன் சம்பா


▶தேங்காய்பூச் சம்பா


▶வாலான்


▶சிங்கினிகார்


▶பூங்கார்


▶ராஜமன்னார்


▶பவானி


▶சம்பா மோசனம்


▶செம்பாளை


▶கொட்டாரச் சம்பா


▶ராஜயோகம்


🔯 அரசர்களின் அரிசி கறுப்பு கவுனி அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்


▶மிளகுச் சம்பா


▶நவரா


▶கருங்குறுவை


▶சொர்ண மசூரி


▶அறுபதாம் குறுவை


▶மைசூர் மல்லி


▶காலா நமக்


▶சின்னார்


▶கிச்சிலிச் சம்பா


▶காட்டுயானம்


▶பொம்மி


▶ஒட்டடம்


▶பால் குடவாழை


▶சொர்ணவாரி


▶தூயமல்லி


▶ஆத்தூர் கிச்சிலிச்சம்பா


▶தங்கச்சம்பா


▶ராஜமுடி


▶குழியடிச்சான்


▶நீலஞ் சம்பா


▶குண்டுக்கார்


▶கொத்தமல்லிச் சம்பா


▶கவுனி


▶கல்லுண்டை


▶முற்றின சம்பா


▶கருடன் சம்பா


▶சேலம் சம்பா


▶மரத்தொண்டி


▶சிவப்புக்கவுனி


▶இலுப்பைப் பூச்சம்பா


▶திருப்பதி சாரம்


▶சிவப்புக் குருவிக்கார்


▶சண்டிக்கார்


▶பொன்னி


▶குள்ளக்கார்


▶அனந்தனூர் சன்னம்


▶கைவரச்சம்பா


▶ஒட்டடையான்


▶பனங்காட்டுக் குடைவாழை


▶கொச்சின் சம்பா


▶கலியன் சம்பா


▶கள்ளிமடையான்

 

▶காட்டுச்சம்பா

 

▶மாப்பிள்ளைச் சம்பா

 

▶ சிறுகமணி சம்பா

 

▶சண்டிகார்


▶நீலம் சம்பா

 

▶மடுமுழுங்கி

 

▶சேலம் சன்னா

 

▶பாசுமுகி

 

▶காலா ஜீரா

 

▶கைவரச் சம்பா

 

▶சிங்கார்

 

▶சித்த சன்னா


▶வைகுண்டா

 

▶தீகார்


▶சன்ன சம்பா


▶ முற்றின சம்பா


▶ ராஜமன்னார்


 ▶மிளகுச் சம்பா


▶ ரத்தசாலி


▶ பிசினி


▶ கொத்தமல்லிச் சம்பா


▶ வாழைப்பூ சம்பா


▶ பொலிநெல்


▶ பால் குடைவாழை


▶ காட்டுப்பொன்னி


▶ ராஜயோகம்


▶ யானைக் கொம்பன்


▶ வெள்ளைக் குடைவாழை


▶ கம்பன் சம்பா


▶ ஆற்காடு கிச்சிலிச் சம்பா


▶ராம ஜடாலே


▶வாலன் சம்பா

 

▶கருங்குறுவை 


▶கிச்சிலி சம்பா  


▶சீரக சம்பா 


▶இரவைப்பாண்டி


▶ ரசகடம்


▶ மரநெல்


▶ துளசி வாசனை சம்பா


▶ சீரகச் சம்பா


▶ காட்டுயானம்


▶ தூயமல்லி


▶ கல்லுண்டைச் சம்பா


▶ கண்டசாலி


▶ கந்தசாலா


▶ சிவன்சம்பா

 

▶கலர்பாலை


▶ சீரகச் சன்னா


▶ ஒட்டடம்


▶ அனந்தனூர் சன்னம்


▶ பச்சை பெருமாள்

 

▶கருத்தகார்


▶ கட்டச்சம்பா


▶செம்புளிச் சம்பா


▶ காலா நமக்

 

▶சூரக்குறுவை


▶ கருப்பு சீரகச்சம்பா


▶ ராமஹல்லி


▶ குருவா


▶ கேரள சுந்தரி


▶ வெள்ளசீரா


▶ பாராபாங்க்


▶ காலாபத்தி பிளாக்


▶ மாலாபத்தி


▶ வடக்கன் சீரா


▶ தோடா பெருநெல்லு


▶ ஜீமாய்நாடு


▶ ஜீரக சாலா


▶ அரிமோடன்


▶ ஆனமோடன்


▶ பாளியாறல்


▶ குரியாகயாமா


 ▶காலாச்சி பிட்


▶மரத்தொண்டி


▶ செந்நெல்


▶ கரிகஜனவள்ளி


▶ வெள்ளைக்கார்


▶ ரக்தாசுடி


▶ ராணிசால்


▶ நாசர்பாத்


▶ புல்பாப்ரி


▶ தங்கச் சம்பா


▶ மஞ்சள் பொன்னி


▶ அறுபதாம் குறுவை


▶ கொடகுவிளையான்


▶ துளுநாடான்


▶ சன்ன நெல்


▶ விஷ்ணுபோகம்


▶ ஆத்தூர் கிச்சிலிச் சம்பா


▶ சௌபாக்கி


▶ ஆம்பிமோகர்


▶ ஹரித்திகத்தி


▶ எளாய்ச்சி


▶ பாசுபதி


▶ தில்கஸ்தூரி


*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.


*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*


#எந்தெந்த_அரிசி_என்னென்ன #பலன்களைத்_தரும்❗❓


#இதோ………👇


♦ கருப்பு கவுணி அரிசி


மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.


♦ மாப்பிள்ளை சம்பா அரிசி


நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.


பழங்காலத்தில் திருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கு இவ்வரிசியினை கொடுப்பார்கள்.  அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி, புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர கூடிய தன்மை கொண்டது.


♦ பூங்கார் அரிசி


சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி .


♦ காட்டுயானம் அரிசி


நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.


♦ கருத்தக்கார் அரிசி


மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 


♦ காலாநமக் அரிசி


புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 


♦ மூங்கில் அரிசி


மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 


♦ அறுபதாம் குறுவை அரிசி


எலும்பு சரியாகும். 


♦ இலுப்பைப்பூசம்பார் அரிசி


பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 


♦ தங்கச்சம்பா அரிசி


பெயருக்கு ஏற்றார் போல் இதை உண்ணும் போது உடல் நிறம் மாறும். புரத சத்து, வைட்டமின், தாது உப்புகள் நிறைந்தது. மேலும் வாழ்நாள் அதிகரிப்பதுடன் உடல் ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் வலுவடையும். பற்கலை, வலுவாகும் இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.


♦ கருங்குறுவை அரிசி


இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு ‘அன்ன காடி ‘என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது . இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 


♦ கருடன் சம்பா அரிசி


நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி .

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.


♦ கார் அரிசி


தோல் நோய் சரியாகும். 

சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் என்ற தோல்நோய்களுக்கும் மருந்தாகும்.


♦ குடை வாழை அரிசி


குடல் சுத்தமாகும். 


♦ கிச்சிலி சம்பா அரிசி


இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 


♦ நீலம் சம்பா அரிசி


இரத்த சோகை நீங்கும். 


♦ சீரகச் சம்பா அரிசி


அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 


♦ தூய மல்லி அரிசி


உள் உறுப்புகள் வலுவாகும். 


♦ குழியடிச்சான் அரிசி


தாய்ப்பால் ஊறும். 


♦ சேலம் சன்னா அரிசி


தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 

கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி . குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் . களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் . இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .


♦ பிசினி அரிசி


மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 


♦ சூரக்குறுவை அரிசி


பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 


♦ வாலான் சம்பா அரிசி


சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 


♦ வாடன் சம்பா அரிசி


அமைதியான தூக்கம் வரும்


♦ திணை


உடலுக்கு வன்மையைகொடுக்கும். வலிமையை பெருக்கும். உடலை வலுவாக்கும்.


♦ வரகு


உடல் பருமன் குறைக்கும். மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்


♦ சாமை


காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.


♦ குதிரைவாலி


தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.


♦ கை குத்தல்


உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.


♦ சிவப்பு காட்டு அரிசி


இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


♦ சிவப்பு அரிசி


கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.


♦ குள்ளகாற் அரிசி


இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.


♦ கவுணி அரிசி 


புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .


♦ சிவப்பு கவுணி அரிசி 


புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .


♦ கட்ட சம்பா அரிசி 


நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


♦ சிங்கினி கார் அரிசி 


 எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .


♦ இலுப்பைபூ சம்பா அரிசி 


சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .


♦ காட்டுயானம் அரிசி 


இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .


♦ சூரகுருவை அரிசி 


நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


♦ பனங்காட்டு குடவாழை அரிசி 


தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .


♦ தூயமல்லி அரிசி 


தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .


♦ இலுப்பைப் பூச்சம்பா


பித்தத்தினால் உண்டாகும் உடல் உபாதைகளை தீர்க்க கூடியது. சிரஸ்தாபம் (தலை வலி) , உபசர்க்கதாகம், உஷ்ணம் போன்றவற்றை தீர்க்க கூடியது.


♦ ஈர்க்குச் சம்பா


இவ்வகை சம்பா பெரும்பாலும் பூஜைக்கு அதிகமாக  பயன்படுத்துகின்றனர். பார்க்கும் போதே உண்ண தோன்றுவதுடன் சுவையும் மிக்கதாக இருக்கும்.


♦ கல்லுண்டைச் சம்பா


இதன் பெயரை பார்க்கும் போதே இதன் குணம் தெரிந்திருக்கும். இதை உண்பவர்கள் யாராக இருந்தாலும்  மல்யுத்த காரரை எதிர்க்கும் அளவிற்கு தோள் வலிமையை தரும் என்பார்கள்.


♦ காடைச் சம்பா


காடைச்சம்பா அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பல்வேறு நோய்களையும் குணமாக்கும் அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. 


♦ காளான் சம்பா


உடலுக்கு உறுதியையும், ஆரோக்கியத்தையும் தருவதுடன் சில வாத நோயினையும் குறைக்கும் தன்மை கொண்டது.


♦ கிச்சிலிச் சம்பா


கிச்சலி சம்பா தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் பலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் தேகச் செழுமையாகும். 


♦ குறுஞ் சம்பா


வாதம், பித்தம் என இரண்டிற்கும் ஏற்றது இந்த குறுஞ்சம்பா. உடலில் கரப்பா பிரச்சனை இருந்தால் அவை நீங்குவதுடன், ஆண்களுக்கு விந்து விருத்தியை உண்டாக்கும்.


♦ குண்டு சம்பா


இவ்வரிசியை  உண்பதால் உடலில் உள்ள பிணி நீங்குவதுடன் நாவறட்சியைப் போக்கும். மேலும் பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.


♦ குன்றிமணிச் சம்பா


உடலில் தோன்றும் சிறுசிறு உபாதைகளை நிக்கி  சரீர பலம் தரக்கூடியது.


♦ கைவரை சம்பா


வறட்சியை தாண்டி அனைத்து நிலத்திலும் வளர கூடியதும். உடலுக்கு அதிக வலிமையை தருவதுடன் சற்று  பித்தத்தையும் அதிகரிக்கும். அளவோடு உண்பது சாலச் சிறந்தது.


♦ கோடைச் சம்பா


கோடைச் சம்பா அரிசி வாதம் மற்றும் பித்த நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலிற்கு நல்ல குளிர்ச்சி  தரும் வல்லமை கொண்டது. கோடைக்கு ஏற்ற அரிசி என்பதால் இதனை கோடைச் சம்பா என்று கூறப்படுகிறது.


♦ கோரைச் சம்பா


கோடை காலத்திற்கு ஏற்றது, இது உடலில் உள்ள பித்தம், நமைச்சல் போன்றவற்றை போக்குவதுடன், உடல்  சூட்டை தனித்து குளிர்ச்சியை தர வல்லது.


♦ மணிச்சம்பா


'நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்’, நீரழிவு நோயாளிகளுக்கேன்ற ஒரு அரிசி இருக்கிறது என்றால் அது மணிச் சம்பா என்று கூறும் அளவிற்கு அத்துணை சத்துக்களை உள்ளடக்கி உள்ளது. அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும். உடலை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.


♦ மல்லிகை சம்பா


கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் போன்றவற்றை போக்கும். உண்பதற்கு ருசியாகவும், தேகத்திற்கு உறுதியையும், சுகத்தையும் கொடுக்கும்.


♦ மிளகு சம்பா


மிளகு சம்பா அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது வாதம் போன்ற பலவிதமான நோயைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்காலத்தில் மல்யுத்த வீரர்கள் இவ்வரிசியினை உண்டு உடல் வலிமை பெற்றனர் எனக் கூறப்படுகிறது.


♦ மைச்சம்பா


எளிதில் செரிமானம் ஆவதுடன், வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை நிக்கும்.


♦ புழுகுச் சம்பா


இந்த அரிசியை உண்பவர்களுக்கு உடலில் வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.


♦ வளைத்தடிச் சம்பா


இவ்வரிசி வாத, பித்த போன்ற தொந்தரவுகளை தர கூடியது. வயிற்று உப்புசம், வயிற்று எரிச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.


♦ சீரகச் சம்பா


 “சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் –  வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே❗


இதன் பொருள் இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்  என்பதாகும். வாத நோய், குடல் புண், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.  


♦ நீலச்சம்பா


இந்த அரிசியை தொடர்ந்து உண்டு வந்தால் ரத்த சோகை நீங்குவதுடன் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.


♦ வாடன் சம்பா


அதீதமான மருத்துவக் குணமும் கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் என்பதால் குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியைத் தான் பயன்படுத்துவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த இந்த நெல் இரகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும் சிறந்ததாகும். அதுமட்டுமல்லாது மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட சொல்வார்கள்.


♦ வாலான் சம்பா


இந்த நெல் இரகத்தில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் குடல் சுத்தமாகும், தேகம் அழகு பெறும், பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.


இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .


பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.


மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே ❗

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி