கொடுக்காப்புளி

 தமிழக சித்த மருத்துவம் (பாரம்பரிய மருத்துவம்):

கொடுக்காப்புளி மரங்கள்


கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும். இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இர ுப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும். வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு. இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள். எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு. சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு. காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும். எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்தறட்சிக்காலத்திலும் உயிர்வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம். வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..


தற்காலத்தில் மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, ஆப்பிளின் சற்றே புளிப்பான இனிப்புச் சுவையைக் கொண்டிருந்ததால், கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது.

கிராமப்புறங்களில், நகரங்களில் எங்கும் காணக் கிடைக்கும். ஓசியில் கிடைக்கும் அவற்றை, சிறுவர்கள் கொத்துக்கொத்தாகப் பறித்து கால் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

அதன் வித்தியாசமான புளிப்பு கூடிய இனிப்பு சுவையில், லயித்து மகிழ்வதும், பழைய நினைவுகளாகிவிட்டன. மரத்தில் சிவந்த நிறத்தில் காணப்படும் பழுத்த கொடுக்காப்புளிகளே சாப்பிட அதிக சுவையுடன் இருக்கும்..


எனினும் பழங்களை அணில்கள், பறவைகள் வேட்டையாடி விடும் என்பதால் காய்கள் சற்றே நிறம் மாறும்போதே நம் ஆட்கள் அதை பறித்து வைத்துக்கொள்வார்கள். செங்காயாக இருக்கும் அவற்றின் சுவையும் அருமையாகவே இருக்கும்.

எனவே, கண்களால் கண்ட போதே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் பறவைகள் அல்லது வேறு யாரேனும் சிறுவர்கள் பறித்துவிடுவர் என்பதால் பையன்கள் உடனே அவற்றைக் கொய்துவிடுவர்.

புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்

இப்போது அரிதாகக்கடைகளில் கிடைக்கிறது. காசில்லாமல் கொத்துகொத்தாக பறித்து தின்ற அவையெல்லாம் இன்று விலையிட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகின்றன.

பழைய நினைவுகளால் அன்றைய சிறுவர்களும் இன்று அறிந்த அவற்றின் மருத்துவ குணங்களால், மற்றோரும் வாங்குகின்றனர்.

கொடுக்காபுளி சர்க்கரை நோயைப் போக்குவதாக சொல்லப்பட, அநேகர் குவியல் குவியலாக வாங்கிச்செல்கின்றனர். இப்போது கொடுக்காபுளியின் மற்ற மருத்துவ குணங்கள் பார்க்கவும்..


மருத்துவ குணங்கள் ::


வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது..


நெடுநாள் நோய்வாய்ப்பட்டு உடல் தேறியவர்களுக்கு, உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது..


உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது.


மற்ற உபயோகங்கள் ::


கொடுக்காபுளி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. 


இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது. கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன..


கொடுக்காப்புளி ( Pithecellobium dulce ) விதையின் வெளிப்புறம் உள்ள சதைப்பற்றான பகுதி, துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையுடனிருப்பதால், சிறுவர்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றன. கிளிகள் உள்ளிட்ட பறவை இனங்களாலும், அணில், குரங்கு போன்ற விலங்குகளாலும் தேடப்படும் பழமாக கொடுக்காப்புளி திகழ்கிறது. இலைச்சூரணத்தை தொடர்ந்து உட்கொண்டுவர காசநோயைக் குணப்படுத்தும். கொடுக்காப்புளி இலையை மென்று அதன் குச்சியால் பல் துலக்கிவர பற்களும் ஈறுகளும் மிகுந்த பலம் பெறும். கொடுக்காய்ப்புளியின் கனி உடல் ஊளைச்சதை மற்றும் உடல் பருமனைக் குறைக்கும். கொடுக்காய் புளி மருத்துவ குணங்கள் வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது. நெடுநாள் நோய்வாய்ப்பட்டு உடல் தேறியவர்களுக்கு, உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது..


பெண்களின் கருப்பை நோய்களுக்கும், உள் உறுப்பு புண்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் தீர்வாகிறது.உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது. கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்கள் - இயற்கை மருத்துவம் தற்காலத்தில் மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, ஆப்பிளின் சற்றே புளிப்பான இனிப்புச் சுவையைக் கொண்டிருந்ததால், கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது கிராமப்புறங்களில், நகரங்களில் எங்கும் காணக் கிடைக்கும். ஓசியில் கிடைக்கும் அவற்றை, சிறுவர்கள் கொத்துக்கொத்தாகப் பறித்து கால் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதன் வித்தியாசமான புளிப்பு கூடிய இனிப்பு சுவையில், லயித்து மகிழ்வதும், பழைய நினைவுகளாகிவிட்டன. மரத்தில் சிவந்த நிறத்தில் காணப்படும் பழுத்த கொடுக்காப்புளிகளே சாப்பிட அதிக சுவையுடன் இருக்கும். எனினும் பழங்களை அணில்கள், பறவைகள் வேட்டையாடி விடும் என்பதால் காய்கள் சற்றே நிறம் மாறும்போதே நம் ஆட்கள் அதை பறித்து வைத்துக்கொள்வார்கள்.. செங்காயாக இருக்கும் அவற்றின் சுவையும் அருமையாகவே இருக்கும். எனவே, கண்களால் கண்ட போதே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் பறவைகள் அல்லது வேறு யாரேனும் சிறுவர்கள் பறித்துவிடுவர் என்பதால் பையன்கள் உடனே அவற்றைக் கொய்துவிடுவர். புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உ இப்போது அரிதாகக்கடைகளில் கிடைக்கிறது. காசில்லாமல் கொத்துகொத்தாக பறித்து தின்ற அவையெல்லாம் இன்று விலையிட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகின்றன. பழைய நினைவுகளால் அன்றைய சிறுவர்களும் இன்று அறிந்த அவற்றின் மருத்துவ குணங்களால், மற்றோரும் வாங்குகின்றனர். கொடுக்காபுளி சர்க்கரை நோயைப் போக்குவதாக சொல்லப்பட, அநேகர் குவியல் குவியலாக வாங்கிச்செல்கின்றனர். இப்போது கொடுக்காபுளியின் மற்ற மருத்துவ குணங்கள் பார்க்கலாம்..


மருத்துவ குணங்கள் :: 

வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது.. நெடுநாள் நோய்வாய்ப்பட்டு உடல் தேறியவர்களுக்கு, உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.. 


உபயோகங்கள் :: 

கொடுக்காபுளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது. கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி எலும்புகளை பலப்படுத்த கூடியதும், பல், மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், ரத்த சோகைக்கு மருந்தாக அமைவதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், ஊட்டசத்து அதிகம் உள்ளது கொடுக்கா புளி. கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். பசுமையான நிறம், செம்மை நிறம் என இரண்டு வண்ணங்களில் இந்த காய் இருக்கும். புளி இனத்தை சேர்ந்தது. கொடுக்கா புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன..


இதை அன்றாடம் 3 காய்கள் வீதம் சாப்பிடுவதால் எலும்புகள் பலப்படும். ரத்தசோகை சரியாகும்.கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி இலைகள், பூக்கள், நாட்டு சர்க்கரை, சீரகம், மிளகுப் பொடி. ஒருபிடி இலை மற்றும் பூ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அல்சர் உள்ளவர்கள் குடித்துவர நல்ல பலன் தரும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வயிற்று கடுப்பு குணமாகும். செரிமானத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வாயு கலைந்து வயிற்று வலி போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொடுக்கா புளியின் சதை பகுதியை பயன்படுத்தி பற்கள், மூட்டுகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி, உப்பு, மிளகுப் பொடி. கொடுக்கா புளியின் மேல் தோலை நீக்கி சதை பகுதியை 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர பல் வலி குணமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும். எலும்புகளை பலப்படுத்தும். மூட்டு வலி சரியாகும். ரத்த சோகையை போக்க கூடியது. ஊக்கம் தரக்கூடிய சத்துக்களை உடையது. கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கா நீர் விடாமல் அரைத்த புளி இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கவும். மேல்பூச்சாக போடும்போது மூட்டு வலி குணமாகும். வீக்கம் கரைந்து, வலி குறையும். கொடுக்கா புளியின் இலைகள் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. கோண புளியங்காய் என்ற பெயரை கொண்ட இதன் சதை பகுதி எலும்பு, பற்களுக்கு பலம் தரக்கூடியது. சாலை ஓரத்தில் உள்ள கொடுக்கா புளி மரத்தில் அற்புத குணங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி நன்மை பெறலாம். ஆப்பிளுக்கு போட்டியாக தற்போது கொடுக்காபுளியும் விற்கப்படுகிறது. சிறு பழவகையைச் சேர்ந்த கொடுக்காபுளி தற்போது ஆப்பிள் பழத்திற்கு போட்டியாக வந்துள்ளது கிராமப்புறங்களில் அதிகளவில் வளர்ந்து தொங்கும் கொடுக்காப்புளி சாதாரணமாக சிறு பழ வகையைச் சேர்ந்தது. இனிப்பு மற்றும் துவர்ப்புடன் உள்ள மருத்துவ குணமிக்க கொடுக்காபுளி சர்க்கரை போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஆனால், கிராமப்புற இளைஞர்களுக்கு கொடுக்காப்புளியின் உண்மையான அறிமுகம் உண்டு. ஆனால், இன்றைய நகரத்து குழந்தைகளுக்கு கொடுக்காபுளியின் உண்மையான மகத்துவம் பற்றி எளிதில் தெரிய வாப்ப்பில்லை..


கொடுக்காபுளியின் உண்மையான மகத்துவம் பற்றி தெரிந்தவர்கள் அதிக விலையையும் பொருட்படுத்தாமல் அதனை வாங்கிச் செல்கின்றனர்..


கோண புளியங்காய்.. கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய்.. கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது. ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது. அது செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும். வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம். உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. குடல் அழற்சி, பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து..


.. நன்றி

T M சிவப்பிரகாசம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி