நெருஞ்சில் பொடி

 நான் உங்கள் மூலிகை பேசுகின்றேன்.


என் தமிழ் பெயர் நெருஞ்சில். 

எனது ஆயுர்வேத பெயர் கோக்‌ஷூரா


எனது மருத்துவ பயன்கள் இதோ!


1 :- நல்ல நெருஞ்சில் முட்களை சேகரித்து , அதை கல் மண் இல்லாமல் சுத்தம் செய்து, நாட்டு பசுமாட்டின் பாலில் போட்டு வேகவைத்து, அதை சூரிய ஒளியில் போட்டு உலர்த்தி பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொண்டு 4 கிராம் வரை எடுத்து பசும்பாலில் கலந்து நாட்டு வெல்லம் சேர்த்து தினமும் காலை மாலை உணவுக்கு முன் சாப்பிடு வந்தால்; உடலுறவில் நீண்ட இன்பம் கிடைக்கும். உடலுக்கு பலம் ஏற்படும். ஒரு கிராம் அளவு எடுத்து தேநீருக்குப் பதில் இந்த டீயை சாப்பிட்டு வந்தால் 

#சிறுநீரக_செயலிழப்பு வரவேவராது.


2 :- அதே பொடியை , இளநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூத்திரக் கட்டு நீங்கும்.


3 : - அதே பொடியை 100 கிராம் அளவு எடுத்து அதில் வால்மிளகு 30 கிராம் , சிறுநாகப்பூ 30 கிராம், சுத்தி செய்த வெடியுப்பு 30 கிராம் என்ற அளவில் எடுத்து இடித்து சலித்து பாட்டிலில் வைத்துக் கொண்டு,  ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை எடுத்து இளநீரில் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தாராளமாக இறங்கும்.


இது சித்த மருத்துவ முறை.

____________________________________________


      (இதோ ஆயுர்வேத மருத்துவ முறை!)


           பாலில் வேகவைத்து உலர்த்திய 


1 நெருஞ்சில் முள் பொடி.  10 கிராம் ( கோக்‌ஷூரா)


2 மூக்கிரட்டை வேர் 10 கிராம்

( புனர்ன்னவமூல) 


3 கடுக்காய் தோல் 10 கிராம்

( ஹரீதகீபலத்வக்)


4 வால்மிளகு 10 கிராம்

( கங்கோல)


5 ரேவல் சீனி கிழங்கு 10 கிராம்

( Rheum emodi)


6 வெள்ளை வெங்காரம் பொறித்தது 10 கிராம்

( ஸ்வேத டங்கண) 


7 எண்ணெய் வெங்காரம் 10 கிராம்

( க்ருஷ்ண டங்கண)


8 ஸர்ஜக்ஷாரம் 10 கிராம்

ஸர்ஜக்ஷார 


9 சுத்தி செய்த வெடியுப்பு 10 கிராம்

( ஸோரக) 

இவைகளை அளவு பிரகாரம் எடுத்து பொடித்து சலித்து பாட்டிலில் வைத்துக் கொண்டு; 


காலை மாலை உணவுக்கு முன் இந்த சூரணத்தை ஒன்று முதல் மூன்று கிராம் வரை எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தீரும் வியாதிகள் கீழே.


சீழ்மேகம், மூத்திரம் வெளியேறாமல் தடைபட்டு நின்றதை வெளியேற்றும், அடிக்கடி ஏற்படும் நீர்ச்சுருக்கு சரியாகிவிடும், குன்மம் ( அல்சர்) குணமாகும், பெருவயிறு குறையும், பசியின்மை நீங்கும், கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும்,. காமாலை குணமாகும், சிறுநீர் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.  இது நல்லதொரு நீர் பெருக்கி. 


இந்த சூரணம் ஆயுர்வேத மெடிக்கலில் கிடைக்கும்.


Kalaisuriyan Perambalore 

9444033381

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி