செம்பருத்தி பூ கசாயம்

 *          இதயம் கல்லீரல் சிறுநீரகம் 

   இவைகளை ஆரோக்கியமாக இயக்கும்

               செம்பரத்தை பூ கசாயம்


கசாய செய்முறை


   பதினைந்து செம்பருத்திப் பூக்களை  ஒன்றிரண்டாக இடித்து கால் லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாதியாக சுண்டும் படி காய்ச்சி ஆற வைத்து பின் இதை பருக வேண்டும் இதனோடு சர்க்கரையோ மற்ற எந்த இனிப்பு வகைகளையோ கண்டிப்பாக சேர்க்கக்கூடாது


பயன்கள்


  இதயம் கல்லீரல் சிறுநீரகம் இவைகளில் பலகீனம் இருந்தால் இது நிவர்த்தியாகும்

பலவீனம் இல்லாமல் இருந்தால் இந்த உறுப்புகள் மேலும் பலம் பெறும் சிறு குழந்தைகள் முதல் ஆண் பெண் இருபாலரும் ஒரு மாதகாலம் பருகிவந்தால் உடலில் ஏற்படுகின்ற முன்னேற்றத்தை நாமே அறிந்து கொள்ளலாம்


மேலும்


பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனும் உதிரப்போக்கு நோய் குணமாகும்


செம்பரத்தை பூ கசாயம் எலும்புருக்கி நோயை குணப்படுத்தும்


இதய பலவீனத்தால் இருக்கின்ற சிறு குழந்தைகளுக்கு இந்த கசாயம் நல்ல ஒரு பலனை தரும் தினமும் காலை வேளையில் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் சாப்பிட்டால் இதய பலவீனம் குணமாகும்


இதயம் மற்றும் கல்லீரல் சிறுநீரக குறைபாடுகளுக்குஆங்கில மருத்துவத்தை கடைபிடித்து வருபவரும் செம்பரத்தை பூ கசாயத்தை பயன்படுத்தி வந்தால் இதனால் உள் உறுப்புகளின் பலகீனம் விரைவாக குணமாகும் 


  இந்த பூவை வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சிறுநீரகம் இருதயம் பலம் பெறுவதோடு பெண்களுக்கு இருக்கின்ற வெள்ளை நோய் மிக எளிதாக குணமாகும் ஆண்களும் பயன்படுத்த சிறுநீர் எரிச்சல் தணியும்


    பதினைந்து செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து இந்த விழுதை

காய வைத்து ஆறின பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் இருபாலருக்கும் உடம்பில் இருக்கின்ற உஷ்ணம் தணிந்து சிறுநீர் எரிச்சல் சிறுநீர் கடுப்பு ஒரு வார காலத்திற்குள் ஆச்சரியப்படும் படியாக குனமாகி விடும்


  மேலும் உஷ்ணத்தால் வருகின்ற வயிற்று வலி வயிற்று உப்பிசம் எளிதாக குணமாகும்


           நோயின்றி வாழ வாழ்த்துக்கள்

                  பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி