கர்ப்ப்பை நீக்கம் கவனம்

 🇨🇭#கர்ப்பப்பை_மற்றும்_சினைப்பை #அகற்றுவதால்………


🇨🇭#ஏற்படும்_பக்கவிளைவுகள்…❗❓


👉 பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.❗❗❗


🙏#பொறுமையாக_படிக்கவும்……🙏


பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து மாதம் ஒருமுட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. 


முன்பு எப்பொழுதும் இல்லாத சதவிகிதத்தில் இப்பொழுது பெண்களுக்கு கர்ப்பபை பிரட்சனைகள் அதிகமாக வருகின்ற நிலையில் அனேக பெண்களுக்கு 30 முதல் 45 க்குள் 

இந்த கர்ப்பை அகற்றல் என்பது நிகழ்ந்து விடுகிற சூழ்நிலையில் அதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 


💢கர்ப்பப்பை அகற்றல் என்றால் என்ன❓


பெண்ணின் கர்ப்பப் பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பெயர்தான் ஹிஸ்டரெக்டமி. சில நேரங்களில் கர்ப்பப் பையுடன் கரு முட்டைப்பையும் 

கருக்குழாயும்  அகற்றப்படும். 


துரதிர்ஷ்டவசமாக, கர்ப்பப்பை அகற்றுதல் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சாதாரண ஆபரேஷனாகிவிட்டது. 


ஆனால் பெண்கள் உஷாராயிருக்க வேண்டும். வேறு  சிகிச்சைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்த பிறகே இந்த அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்க வேண்டும். 


💢 கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால்  நீங்கள் என்ன செய்ய வேண்டும்❓


👉அதிகரத்தப்போக்கு, 


👉ஃபைப்ராய்ட்ஸ், 


👉எண்டோமெட்ரியாசிஸ் திக்னஸ் 


போன்ற ஆபத்தில்லாத பிரச்னைகள் இருந்தால், அவற்றுக்கு முதலில் வேறு சிகிச்சை முறைகளைத்தான் 

கையாள வேண்டும். 


பல பிரச்னைகளுக்கு இந்த அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டிய அவசியமிருக்காது. 


இதைப்பற்றி நிறையத் தெரிந்து கொள்ளவும் மாற்று சிகிச்சை முறைகளைப் பற்றி ஆலோசிக்கவும் உங்களுக்கு நேரமிருக்கும். 


ஆனால் ஒரு விஷயம். என்ன செய்ய வேண்டும் என்று  முடிவு செய்வதற்கு முன்பு உங்கள் பிரச்னை என்ன என்பதையும் அதைத் தீர்க்க உள்ள சிகிச்சை முறைகளைப் பற்றியும் நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள 

வேண்டும்.


கேன்சர் போன்ற அபாயகரமான நோய் தாக்கியிருந்தால், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை மட்டுமே அதுதான் உயிர் காக்கும் ஒரே வழி.


இந்த கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை,  பெரிய அறுவை சிகிச்சை. சில பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சையின்போது சிக்கல்கள் வர 

வாய்ப்பிருக்கிறது.


💢இந்த அறுவை சிகிச்சையை எப்படிச் செய்கிறார்கள்❓


அடி வயிற்றை அல்லது பெண்ணுறுப்பை வெட்டுவதன் மூலம் இந்த அறுவை சிகிச்சையைச் செய்வார்கள். சில சூழ்நிலைகளில் லேப்ரோஸ்கோபிக் அறுவை 

சிகிச்சையும் செய்யப்படுகிறது. 

எந்த வகையான அறுவை சிகிச்சை என்பது சம்பந்தப்பட்ட 

பெண்ணின் நோயை பொருத்தது. மாதவிலக்கு வந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு கர்ப்பப் பையுடன் கரு முட்டைப் பைகளும் அகற்றப்பட்டால் மாதவிலக்கு நின்று மெனோபாஸ் நிலையை அடைந்து விடுவார். 

அதனால் பொதுவாக நாற்பத்தைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு 

`ஓவரிஸ்‘ எனப்படும் கரு முட்டைப் பைகளை அகற்றுவதில்லை. இந்த அறுவை சிகிச்சை செய்ய 

வேண்டியிருந்தால் 

கரு முட்டைப் பைகளை அகற்றாமல் செய்ய இயலுமா என்று உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.


💢ஏன் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது❓


யூட்ரென் ஃபைப்ராய்ட்ஸ் என்பது கர்ப்பப்பை தசைகளில் வளரும் ஆபத்தில்லாத (கேன்சர் இல்லாத) கட்டிகள். 


கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பல நேரங்களில் இந்தக் காரணத்துக்காகத்தான் செய்யப்படுகிறது. 


ஃபைப்ராய்டுகள் பொதுவாக அறிகுறிகள் எதையும் காட்டுவதில்லை. அவற்றுக்கு சிகிச்சையும் தேவையில்லை. 

மெனோபாஸுக்குப் பிறகு அவை அப்படியே சுருங்கிவிடும். ஆனால் அதிக அளவு ரத்தப் போக்கையோ அல்லது அதன் வளர்ச்சியால் வேறு அறிகுறிகளையோ இந்த ஃபைப்ராய்டுகள் 

உருவாக்கினால், அப்போது கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.


⭕ அசாதாரண ரத்தப்போக்கு


முப்பத்தைந்திலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குள் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் நிகழும். இது இயல்பாக கருமுட்டை 

உருவாகாததால் ஏற்படும். இவற்றில் பல தானாகவே சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும் அல்லது மருந்துகளின் மூலம் சரிப்படுத்தலாம். இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழியோ முதல் வழியோ அல்ல.


⭕எண்டோமெட்ரியாஸிஸ்


இதுவும் கர்ப்பப் பையைப் பாதிக்கும். ஆனால் ஆபத்தில்லாத ஒரு விஷயம். முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகம் இருக்கும். முக்கியமாய் அதுவரை கர்ப்பம் உண்டாகாத பெண்களிடம் கர்ப்பப் பையின் உள்தோலுக்குள் இருக்கும் எண்டோமெட்ரியல் திசுக்கள் கர்ப்பப்பைக்கு வெளியிலும் பிற உறுப்புகளிலும் வளரும்போது இந்தப் பிரச்னை வருகிறது. 


மாதவிலக்குக் காலங்களில் வலி அதிகமாக இருப்பது, 

அசாதாரண ரத்தப்போக்கு போன்றவற்றுக்கு இது காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் கருவுறும் தன்மையை இழப்பதற்கும் இது காரணமாக அமைகிறது. 


⭕யூட்ரின் ப்ரோலாப்ஸ்


கர்ப்பப்பை தன் வழக்கமான இடத்திலிருந்து நகர்ந்து கீழிறங்கும் நிலை இது. இதுவும் ஆபத்தில்லாததுதான். 


பலவீனமான, நீட்டிக்கப்பட்ட 

தசைகளும் திசுக்களும்தான் இப்படியாவதற்குக் காரணம். இதனால் சிறுநீர்ப்பை  போன்ற பிற உறுப்புகளுக்குப் பாதிப்பு உண்டாகலாம். குழந்தை பிறப்பு, 

மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரஜன் குறைவு போன்றவையும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம்.


கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகளில் பத்து சதவீதம்தான் இடுப்புப் பகுதி உறுப்புகளில் 

(Pelvi corgans) வரும் புற்று நோய்க்காகச் செய்யப்படுகிறது. 


கர்ப்பப் பையின் வாய்ப் பகுதி புற்றுநோய் (Cervical cancer) கர்ப்பப்பை உள் தோலில் வரும் புற்றுநோய் போன்றவற்றுக்காக இந்த அறுவை சிகிச்சையை அதிகம் செய்கிறார்கள். 


❌👉#_சினைப்பை_நீக்கப்பட்டால்…❗


அதிக சத்தம் போட்டு பேச முடியாது.


கனமான பொருட்கள் தூக்க முடியாது.


சாதாரன வேலைகள் செய்தால் கூடா உடல் சோர்வாகி விடும்.


பயம், பதட்டம் அதிகமாக இருக்கும்.


மாரடைப்பு வரும்.


❌👉#_கர்ப்பப்பை_எடுத்தால்……❗


▶உடல்சூடு 


▶இரவில் அதிகம் வியர்த்தல் 


▶தூக்கமின்மை 


▶அடிக்கடி கோபம் 


▶சலிப்பு 


▶மறதி 


▶மனஉளைச்சல் 


▶உடல் வலி 


👉போன்ற பிரச்சனைகள் தாக்கும்.


💔சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும்.


💔உடலுறவில் பிரச்சனை ஏற்படும்.


💔எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.


💔பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும்போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.


தவிர்க்கமுடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினைமுட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப்பையும்  இயங்காது❗


ஆனால் அது கடும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். 


💔ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் 


💔மார்பக புற்றுநோய் 


போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.


➡அதிகமாக உதிரம் போதல், 


➡வலி, 


➡சிறிய கட்டிகள், 


➡வெள்ளைப்படுதல் 


ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். 


மாத விடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன்பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும்.


💔 பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.


💚பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.❗


⭕ #சினைப்பையும்_கருப்பையும் #இருப்பதால்_என்ன_பயன்கள்…❓


⭐ பெண்களின் சினைமுட்டைப்பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. 


⭐எலும்புகளை வலுப்படுத்துகிறது.


⭐ பயப்பட மாட்டார்கள்


⭐ தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.


மேலே கூறிய எந்தவித பக்க விளைவும்

இருக்காது…❗


மொத்தத்தில் பெண்கள் பெண்களாக இருப்பார்கள்…😍


❌ பக்க விளைவுகள்……❓❓❗❓


👉குணமடைய நீண்ட காலம் எடுக்கும்


பொதுவாக கருப்பை அகற்றும் முறையில் இந்த வகையான பக்கவிளைவுகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக இந்த அறுவை சிகிச்சை நீளவாக்கில் வெட்டி செய்யப்படும். சில நேரத்தில் எதிர்பாராத குறுக்கில் வெட்டி அறுவைசிகிச்சை செய்யும் போது கருமுட்டை மற்றும் கருக்குழாய் போன்றவற்றை உடலில் நீக்கும் நிலை ஏற்படும். இந்த அறுவைசிகிச்சை முடிந்த ஒரு சில வாரங்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டும். மேலும் இந்த காயம் குணமடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு சிலருக்கு காயம் குணமடைய மாதக் கணக்கிலும், சிலருக்கு வருடக்கணக்கிலும் எடுத்துக் கொண்டிருக்கிறது.


👉அந்தரங்க பகுதி அறுவைசிகிச்சை


கருப்பை நீக்கும் அறுவைசிகிச்சையில் இந்த முறையும் பக்கவிளைவை ஏற்படுத்தும். இந்த முறையில் மருத்துவர் கருப்பையை அந்த பகுதி வழியாக நீக்குவார். மனிதர்களில் அந்தரங்கப் பகுதி மிகவும் மென்மையானது. இந்த முறை அறுவை சிகிச்சையில் மருத்துவர் முறையான கவனம் எடுக்கவில்லை எனில், அது அந்தரங்க பகுதியில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


👉இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புள்ளது


இயற்கைக்கு மாறாக கருப்பையை நீக்கும் போது, அறுவை சிகிச்சையின் போதும் மற்றும் அதன் பின்னும் அதிகப்படியான இரத்த இழப்பை ஏற்படுத்தும். இப்படி அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்படுவது இரத்த சோகையை ஏற்படுத்தும். சில நோயாளிகளின் விஷயத்தில், இந்த வகை அறுவை சிகிச்சையானது இரத்த கட்டிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இரத்த கட்டிகள் பெரும்பாலும் கால் மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான பகுதிகளில் கர்ப்பபை அறுவைசிகிச்சையின் பக்கவிளைவால் ஏற்படுகிறது.


👉புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது


இந்த பக்க விளைவு லேபராஸ்கோபிக் அறுவைசிகிச்சை விஷயத்தில் காணப்படுகிறது, இது கருப்பை திசுக்களை உடைப்பதற்காக மார்க்செலேட்டர் சக்தியை பயன்படுத்துகிறது, அதேபோல் லேபராஸ்கோபிக் முறையில் நீக்கும் கருப்பையில் காயம் ஏற்படும். அதே சமயம் எதிர்பாராத விதமாக புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரப்பப்படலாம்.


👉வலி


எல்லா கர்ப்பப்பை நீக்கும் அறுவைசிகிச்சை முறையிலும் வலி இருந்தே தீரும். ஒவ்வொன்றிற்கும் எடுக்கும் கால அளவைப் பொறுத்து வலியின் அளவு மாறுபடும். அறுவைசிகிச்சை முறையில் உடலில் இருந்து சில உறுப்புகள் நீக்கப்பட்டாலும் அவை கருப்பை அறுவைசிகிச்சை அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இது குணமடைய ஒரு மாத காலத்திற்கு மேலும் ஏற்படலாம். இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு வலி இருப்பதாக பல பெண்கள் கூறுகின்றனர். இதில் லேபராஸ்கோபிக் அறுவைசிகிச்சை முறையே குறைவான வலியைத் தரக்கூடியது.


👉மயக்க மருந்திலிருந்து பிரச்சனை


குணமடையும் காலத்தில் வலி என்பது இருக்க கூடிய ஒன்று தான். அறுவைசிகிச்சையின் போது வலியை சமாளிக்க மயக்க மருந்து கொடுக்கப்படும். இது சில பெண்களுக்கு சுவாசப் பிரச்சனை மற்றும் இருதய கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இது குறிப்பாக ஆஸ்துமா உள்ள பெண்களுக்கும், 50 வயதை கடந்த பெண்களுக்கும் ஏற்படுகிறது.


👉தொற்றுநோய்


இந்த அறுவைசிகிச்சையில் உடலின் உள்ளுறுப்புகளில் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த நோய் தொற்று பல உடல்நல பாதிப்புகளை உடனடியாக ஏற்படுத்தும். மருத்துவரும் மருத்துவ குழுவும் என்னதான் கவனம் எடுத்து பார்த்துக் கொண்டாலும், நோயாளியின் உடலில் ஏற்படும் சில ஒவ்வாமை ஆபத்துக்கு வழிவகுக்கும்.


👉உள்ளுறுப்புகளில் காயம்


மனித உடல் ஒரு விசித்திரமான இயந்திரம். அதில் பல உடல் உறுப்புகள் குறைவான இடத்தில் இருக்கும். அதிலும் பெண்ணின் கருப்பையை சுற்றி கருக்குழாய், குடல் மற்றும் இடுப்பு எலும்பு போன்ற உறுப்புகள் இருக்கின்றன.உடலில் இருந்து கருப்பையை நீக்கும் போது அருகில் உள்ள உறுப்புகளில் காயம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். அப்படி ஏற்படும் காயத்தின் தன்மையை பொறுத்து குணமைடைய நீண்ட அல்லது குறுகிய காலம் எடுத்து கொள்ளும்.


👉உடலுறவின் போது வலி


இந்த பக்கவிளைவு பொதுவாக ஏற்படக் கூடிய ஒன்றல்ல. சில பெண்களுக்கு கருப்பை நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்ட பின் உடலுறவில் வலி ஏற்பட்டிருக்கிறது. இது அடிவயிற்றில் அதிக வலி அல்லது வயிற்று பிடிப்பு போன்றவற்றை உணர செய்யும். நீங்க அது போல் உணர்தல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியமாகிறது.


🆗கருப்பைவாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 


🆗 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை 

#பேப்_ஸ்மியர்_டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 


முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப்பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


81 4849 6869 ☎ 999 437 9988


💊#திருநெல்வேலி_மேலப்பாளையம்💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி