Napkin disasters

 🔥 ரசாயன டயாபரும், ரசாயன சானிட்டரி பேடும் உங்களுக்குத் தரும் உள் உறுப்பு கேன்சர் ஆபத்து !...


சானிட்டரிவேர்  உங்கள் குழந்தைகளுக்கு  போடுபவர்களா நீங்கள் ??

கெமிக்கல் சானிட்டரி நாப்கின்  உபயோகிக்கும் நவீன அன்பர்களே ! உங்களுக்கும்தான்.


ஒரு நிமிடம் படிங்க !


கணவன்மார்களுக்கும், மனைவிமார்களுக்கும், பெற்றோருக்கும்,கன்னிப் பெண்களுக்கும் ஓர்  எச்சரிக்கை தகலும், அதற்கான மாற்றமும்.


🔥 நிலத்தில் குவிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் தானாக மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் கூட ஆகிறது.


தற்போதைய ரசாயன சானிட்டரி நாப்கின்கள் ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சனை, சுற்றுச் சூழல் கேடுகள் என்பது நிச்சயமாக நம்மை பிரம்மிக்க வைக்கிறது 🔥


தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை பெயர் அளவுக்கு நடைமுறையில் உள்ளது.


பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின் போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்துகின்றனர். 


சிறு குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்துகின்றனர். 


வயது அதிகமானோர்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்துகின்றனர். 


ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பல்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.


பிளாஸ்டிக் ஒரு பக்கம் இருந்தாலும் ரசாயன சானிட்டரி பற்றி சொல்லவே கொலை நடுங்கும். ஆனால் பெண்கள் தங்களுக்கும்,தங்கள் குழந்தைகளுக்கும் இந்த பயங்கரவாதத்தை உபயோகிப்பதுதான் உச்சபட்ச கொடுமை.


🔥 ஒரு காட்டன் பஞ்சை எடுத்து நீரில் முக்கினால் அதனால் குறிப்பிட்ட அளவு நீரைதானே தக்க வைத்துக் கொள்ளவே முடியும்🔥🔥


அதே போன்று உண்மையிலேயே சானிட்டரி நாப்கின்களில் காட்டன் பருத்தி பயன் படுத்தப் பட்டால் அதனால் எட்டு மணி நேரத்துக்கு எப்படி தாக்குப் பிடிக்க முடியும் ?🔥 என்ற கேள்வியை மனதில்  கேளுங்கள். 


நம் சமுதாயத்தை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்க சுய சிந்தனை நமக்கு அவசியம்.


Ultra Gel  அல்ட்ரா ஜெல் எனும் கெமிக்கல் பயன் படுத்தினால் மட்டுமே நீண்ட நேரம் ஈரம் உறிஞ்சும் டெக்னிக் என்பது சாத்தியம்.


உங்கள் உள் உறுப்பை ரசாயனம் தொட்டால் உங்களுக்கு உள் உறுப்பு 

கேன்சருக்கு பல மடங்கு வாய்ப்பு உண்டு என்பதை அறிவீர்களா ??


சானிட்டரி நாப்கின் மக்குவதற்கு பல  நூற்றாண்டுகள் வரை ஆகும். 


தற்போதைய சானிட்டரி நாப்கின்கள் 

பருத்தியால் தயாரிக்கப் படுவதாகவும், மேலும் அதில் உள்ள ஒருவித கெமிக்கல் திரவம் நீண்ட நேரத்துக்கு பெண்களை, குழந்தைகளை,பெரியோர்களை சௌகரியாக வைத்திருப்பதாகவும் பல்வேறு ஏமாற்று பொய் பிரச்சாரங்களும், விளம்பரங்களும் பல்வேறு இலுமினாட்டி அடிமை 

நிறுவனங்களால் முன்னெடுக்கப் படுகின்றன.


நாடெங்கிலும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற சுகாதார கழிவுகள் சரிவர கையாளப்படவில்லை என்ற நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்தி விட்டு நேரடியாக கழிவறைகளில் வீசுகின்றனர். 

அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாகின்றனர்.


மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படும் இவற்றை எரிப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகிறது என்பது மட்டும் அல்ல.


🔥 சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடும்,ரசாயன டையாக்சினும் ❓ பெண்களுக்கு கர்ப்பப்பையின் வாய் பகுதியில் புற்றுநோயை கூட உண்டாக்குறது.


https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://naturallysavvy.com/care/dioxins-the-facts-about-this-toxin-in-tampons-and-sanitary-pads/amp/&ved=2ahUKEwig2Ma4gvLfAhVDXisKHTvCBEkQFjABegQIDBAE&usg=AOvVaw2E5ef0l4eAKNgFVgD2fF9N&ampcf=1


பாரம்பரிய துணி அடிப்படையிலான செயல் முறையை கைவிடுவதற்கு காரணமாக சுகாதார ரீதியிலான பிரச்சனைகள் சொல்லப்பட்டது. 


ஆனால், அந்த மாற்றமே தற்போது சமூகத்துக்கும், உடல்நலனுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் நிலையில் போதிய விழிப்புணர்வோடும், வழிகாட்டுதலோடும் மீண்டும் பாரம்பரிய முறைக்கு சென்று அதில் வசதிக்கு மாறுதல் செய்து கொள்வது மட்டுமே நமக்கு நிரந்தரமான ஒரே தீர்வு.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் அலோபதி மருத்துவர்கள் வியாபார நோக்கு காரணமாக, அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டுதான் உள்ளனர்.


சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெண்கள் நல சிறப்பு மருத்துவர் சியாமளாவிடம் சமீபத்திய BBC பேட்டியில் கேட்ட போது, "பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதை விட அதிக அளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன் படுத்துபவர்களுக்கே அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது" என்கிறார்.


"சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன் படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்றும் டாக்டர் சியாமளா கூறுகிறார்.


சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து பேட்டியில் பேசிய அவர், "மாதவிடாய் காலத்தின் போது பெண்கள் நான்கு மணி நேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன் படுத்த வேண்டியது இருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவு வரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்று நோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 


எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை" என்று விவரிக்கிறார் டாக்டர்.


சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல், உடல்ரீதியிலான பாதிப்புகளுக்கு என்னதான் தீர்வு என்று சென்னையை சேர்ந்த அந்த பெண்கள் நல சிறப்பு டாக்டர் சியாமளாவிடம் கேட்ட போது, "சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும், தற்போது கிராமப்புற பகுதிகளிலுள்ள பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் துணி அடிப்படையிலான பாரம்பரிய முறையே சிறந்தது. 


அதாவது, வீட்டிலேயே பருத்தியிலான இலகுவான துணிகளை கொண்டு தைக்கப்படும் உடையே சிறந்தது" என்றுதான் கூறுகிறார்.


மாதவிடாய் காலத்தின் போது துணியை பயன் படுத்துவதால் ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தியே சானிட்டரி நேப்கின்கள் சந்தையில் இடம் பிடித்த நிலையில், மீண்டும் துணியை பயன்படுத்துவதற்கான அவசியம் என்னவென்று நிருபர் கேள்வி எழுப்பிய போது, "வெறும் துணியை பயன்படுத்துவதன் மூலம் சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்து விட முடியாது என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.


அதை உருவாக்க தேர்ந்தெடுக்கப் படும் துணியின் தரம், தைக்கப் படும் விதம், பயன் படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளை பின்பற்ற வேண்டும் 


சானிட்டரி நாப்கின்களை பயன் படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் பாரம்பரிய சாதா துணி அடிப்படையிலான முறையை ஏற்றுக் கொள்வதில் பெண்கள் குழந்தைகளுக்கும்,தங்களுக்குமே பெரும் தயக்கம் காணப்படுகிறது.


சானிட்டரி நாப்கின்கள் தங்களது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் பெண்கள் தொடர்ந்து அவற்றை பயன்படுத்துவதற்கும், மனரீதியிலான போக்குக்கும் தொடர்புள்ளதா என்ற பேட்டியில் சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் ரம்யா சம்பத்திடம் கேட்ட போது, "ஒரு சிறுமி வயதுக்கு வந்தவுடன் தனது தாய் கூறும் வழிமுறைகளை பின்பற்றுகிறாள். ஒரு கட்டத்திற்கு பிறகு, தன்னை சுற்றி உள்ளவர்களின் வழிமுறையை கண்காணிக்கிறாள்" என்று குறிப்பிட்டார்.


தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றத்தின் தொடக்கம் எவ்வளவு அழகானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


அனைத்திலும் நாம் ஒரு சில மாற்றம் செய்து நாமே பாரம்பரியத்துக்கு திரும்ப வேண்டிய நேரம் இது என்பது மட்டுமே இதன் மாற்று.


இதில் எதேனும் குறைகளை சரி செய்யலாம் என்று உங்கள் மனம் விரும்பினால் மேழி - 9487569003 எண்ணில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.


ஒவ்வொருவரும் சிறு சிறு மாற்றங்களை வாழ்வில் கொண்டு வர நம் முன்னோர்கள் செயல்களை சிந்தித்து விடை காணுங்கள்.


தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.


தயங்காது பகிருங்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி