கருப்பை இறக்கம் சரியாக

 🇨🇭#பெண்களை_தாக்கும்_கர்ப்பப்பை #இறக்கம்…❗❗❗❗


⭕ கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுவதற்கான காரணமும், அறிகுறியும்……❗❗


⭕ கருப்பையை பலப்படுத்த

வீட்டு வைத்தியம்…❓❓❓


      இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால் அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள் அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம். சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது.


.


✴#கவனம்_தேவை…… ❗❗


சுகப்பிரசவம் நல்லதுதான். ஆனா, பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்கள்ல கவனமா இல்லாட்டி, கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம்.  


சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்... இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும். பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், எடை தூக்கறது, ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்யறது மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை தன்னோட இடத்துலேர்ந்து இறங்கிவிடும்.


பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும் போதுமான அளவு ஒய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும். 


பெரும்பாலும் மெனோபாஸ் வயதில் தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும் அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன. 


 .


✳#பிரச்சினை_தீவிரமாகும்❗❓


எதையுமே கவனிக்காமல் விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். 


.


⭕ கர்ப்பப்பை இறக்கம் சற்றே சிக்கலா நிலையில்……❗


கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். 


சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, 


சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, 


தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு 


போன்றவையும் சேர்ந்து கொள்ளும். 

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.


எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள். 


.


⭕ அதிக வெள்ளைப்படுதல் கர்ப்பப்பையை தாக்கும்❗


பெண்கள் கவனக் குறைவாக இருந்தால் கர்ப்பப்பையை இழக்க நேரிடும். 


 பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்றும் சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விடுவதுண்டு. 


இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறிவிடும். கர்ப்பப்பையை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். 


இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். வியாதியின் குணம் நாள்பட, நாள்பட நிறமும் மாறுபடும். எனவே வெள்ளைப்படுதல் இருந்தால் 

உடனடியாக மருத்துவரை அணுகி நோயின் தன்மையை அறிந்து கொள்வது நல்லது.  


.

.

 🔴 45 வயதைக் தொடும் பெண்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்……❓


பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டுவலி, கால்வலி, மற்றும் உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.  


 45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி 12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். 


 அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் உள்ள 


கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமின் ஆகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் இச்சத்துக்களை பெறலாம். 


 

தினமும் காலையில் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி, யின் அளவை அதிகரிக்கும்.வைட்டமின் Q 10, 45 வயதான பெண்கள் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


இத்தகைய வைட்டமின் ஆனது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும். இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு 

உள்ளாவார்கள். இந்நிலையை தவிர்க்க கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

வைட்டமின் ஏ, நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், போன்றவற்றில் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.


👉 சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, பூப்படையும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.

.

.


💔 கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணங்கள்…❓


👉அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம்  முக்கியமான காரணமாகும்.


👉ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.


👉பிரசவத்தின் போது  குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.


👉பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.


👉மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.


👉இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.


👉நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).


👉பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.


👉அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.


.


💢 கர்ப்பப்பை இறக்கத்திற்க்கான அறிகுறிகள்❓


⭐கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.


⭐கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.


⭐கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.


⭐இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.


⭐ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.


⭐எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.


⭐பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.


⭐அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.


⭐சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.


⭐அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.


⭐சிறுநீரை அடக்க முடியாத நிலை.


⭐சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.


⭐மலச்சிக்கல் போன்ற உணர்வு. 


⭐அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது 


போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.


.

.

🇨🇭#கருப்பையை_பலப்படுத்த

#வீட்டு_வைத்தியம்…❓❓


💊கர்ப்பப்பை இறக்கத்தை 💊

குணமாக்க....


⭐ஒரு *சாதிக்காயை* எடுத்துக்கொள்ளவும்.

அதை பசு வெண்ணெயால் மூடவும்.

அதை  நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு, 

நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.

சிறிது நேரத்தில்,வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.


சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,மேலும், மேலும், பசுவெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.


இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும். இறுதியாக  மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.


இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,


காலை, மாலை இரு வேளையும், 

உணவுக்கு முன்


தேனில்  உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,


இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.


வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,

தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.


💊அஸ்வகந்தா மாத்திரை💊


உணவு முன் காலை, இரவு 

2 மாத்திரை சாப்பிட்டு வரவும்.


💊 உளுந்து💊


கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.


கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சிக்குப் பெண்களுக்கு இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மூலிகைகளில் உளுந்து, 


உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென்னிந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுத்தங் கஞ்சியை வைத்திருந்தார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது பலனளிக்கும்.


💊 ஆலம் விழுது பால் கசாயம்💊


👉செய்முறை❓


ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக காலை மாலை இரு வேளையும் அருந்தலாம் (காபி, டீக்குப் பதிலாக).


பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் (proanthocyanidin சத்துக்காக) சாப்பிடவும்.


💊 கருப்பை வலுவின்மை தீர💊


❓தேவையான பொருட்கள்❓


அருகம்புல்.


செவ்வாழைப்பழம்.


மாதுளம்பழம்.


❓செய்முறை


அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.


செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். 


மாதுளம்பழச் சாறு  இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.


 

💊 தண்ணீர் விட்டான் கிழங்கை💊 பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். 


👉தேவையான பொருட்கள்❓


தண்ணீர் விட்டான் கிழங்கு, பனங்கற்கண்டு, பால்.அரை ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சவும். 


வடிகட்டியபின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை பெண்கள் குடித்துவர கர்ப்பப்பை, சினைப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும். தண்ணீர் விட்டான் கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 


💊 பாதாம் பருப்பை பயன்படுத்தி💊 ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். 


👉தேவையான பொருட்கள்❓


பாதாம், பூசணி விதை, நாட்டு சர்க்கரை, பால். பாதாம் பருப்பு மற்றும் பூசணி விதைகளை வறுத்து பொடி செய்து எடுக்கவும். 


இந்த கலவை ஒரு ஸ்பூன், சிறிது நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இதை குடித்துவர கர்ப்பப்பை, சினப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும். 


💊 அமுக்கரா கிழங்கை பயன்படுத்தி💊 ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். 


👉தேவையான பொருட்கள்❓


அமுக்கரா கிழங்கு, பனங்கற்கண்டு, பால். ஒரு ஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்க போகும் முன்பு எடுத்து கொண்டால் ஹார்மோன் குறைபாடு, மலட்டு தன்மை சரியாகும். அமுக்கரா கிழங்கு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.....


🇨🇭கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை…❓


* உடல், உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.


* குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும்


* எளிய யோகாப் பயிற்சிகள்.


* மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும். ஹார்மோன் செயல்பாடுகளை மன உளைச்சல் பாதிக்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி