அக்கி அனுபவ மருந்து

 அக்கிக்கு அனுபவ மருந்து


சிலாசத்து பற்பம் - 1 சிட்டிகை

சங்கு பற்பம் - 1 சிட்டிகை

குங்கிலிய பற்பம் - 1 சிட்டிகை


3 வேலையும் உணவுக்கு முன் சதாவரி நெய்யில்


வெண்பூசணி லேகியம் 1 ஸ்பூன் உணவுக்கு பின் 3 வேலையும்.


மேல் பூச்சு மற்றும் பொம்மை வரைய


பூங்காவி(அ) செம்மண் நன்றாக பொடித்து ஒரு அகலில் வைத்து அக்கி வந்தவரை கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்து முதுகு பக்கம் வெற்றிலை பாக்கு வைத்து குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்கி கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து அந்த தண்ணீரை பூங்காவியில் ஊற்றி குழைத்து முதுகில் பொம்மை வரைய வேண்டும்.


அக்கி பட்ட இடத்தில் மேல் பூச்சாக இதே மருந்தை போடவும்.


பிறகு மிளகாய், மிளகு, உப்பு கல்லை ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி அவரின் இடது கையில் கொடுத்து 3 வழி கூடும் இடத்தில் போட்டுவிடசொல்லவும்.


பத்தியம் : மாமிசம் சாப்பிடக்கூடாது. பாயில் படுக்கக் கூடாது. 


இது எங்கள் குடும்ப முறையில் உள்ளது. 


நன்றி,


மேலும் பயணிப்போம்...


J.லோகேஷ் குமார்,

வேலூர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி