உடல் பலம் தாது பலம் பெற

 உணவே மருந்து


  முருங்கை கீரையை நெய்யில் வதக்கி காலை உணவாக தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும் உடல் பலவீனம் நீங்கும் உயிர் அணுக்களைப் பெருக்கும்


  முருங்கைப் பிசினை லேசாக வறுத்து பொடி செய்து இதில் ஒரு ஸ்பூன் எடுத்து பசும்பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் தாது பலம் அதிகரிக்கும் தாம்பத்திய சுகத்தில் திருப்தி உண்டாகும்


இளம் பிஞ்சு முருங்கை காயுடன் சம அளவு சிறிய வெங்காயம் சேர்த்து இதை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது உற்பத்தி அதிகரிக்கும் ஆணுறுப்புக்கு வலிமையை தரும்


  பாதாம் பருப்பு சாரப் பருப்பு இரண்டையும் சமமாக கலந்து இதை  சாப்பிட்டு அதன் பின் பால் அருந்தி வந்தால் இளமைக்கு வலிமையைத் தரும்


தேங்காய்ப் பாலும் மாதுளம் பழத்தையும் சமமாக கலந்து சாப்பிட்டு வந்தால் இழந்த இளமையை மீட்டு தரும்


ஆட்டுப் பாலுடன் பேரீச்சம்பழம் வேர்க்கடலை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும் இளமையில் தோன்றும் முதுமை விலகிவிடும்


கசகசாவை ஊறவைத்து பால் பிழிந்து இந்த பாலுடன் தேங்காய்ப்பால் சமமாக கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து ஊறும் வீரிய சக்தி அதிகரிக்கும்


ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு அரசமரத்து இளம் கொழுந்து இலையை மைபோல் அரைத்து காலை வேளையில் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் குறைபாடுகள் நீங்கி விந்து உற்பத்தி அதிகரிக்கும்


பத்து கிராம் வில்வ வேர் பட்டையை இரண்டு  கிராம் சீரகத்துடன் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் தாது பலம் உண்டாகும் உடல் தளர்ச்சி நீங்கும்


வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் தாது உற்பத்தி அதிகரிக்கும் உடலின் வறட்சி தன்மை நீங்கும்


யானை நெருஞ்சில் பூ தூதுவளைப் பூ இரண்டையும் மைபோல் அரைத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இதனால் ஆண்மை சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் நீங்கி விடும்


ஆண்மை சக்தியைப் பெறுவதற்கு இதைவிட எளிமையான ஒரு மருந்து வேறு எங்கு தேடினாலும்  கிடைக்காது


சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் உடலுக்கு அனைத்து வகையிலும் ஆரோக்கியம் கிடைக்கும்


                    சித்தர்களின் சீடன் 

             பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி