ஆறாத புண் ஆற

 🇨🇭#நாள்பட்ட_ஆறாத_புண்ணை 

#ஆற்றும்_வல்லமை_கொண்ட……


💊#வீட்டு_வைத்தியம்……❓❓💊


🇨🇭நமது உடம்பில் வரும் அனைத்தும்

புண்கள் குணமாக……❓❓


👉தேவையான பொருட்கள்❓


தான்றிக்காய் தோல் – 50 கிராம்


புளியங்கொட்டைத் தோல் – 20 கிராம்


சீயக்காய் – 20 கிராம்


மஞ்சள் – 20 கிராம்


     ஆகியவற்றை எடுத்து ஒன்றாகக் கலந்து இளநீர் விட்டு அரைத்து வைக்கவும். பின்னர் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யை அடுப்பிலேற்றி சிறுதீயாய் எரிக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த விழுதை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்க்கவும். எண்ணெய் பொரிந்து அடங்கியபின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டிப் பத்திரப்படுத்தவும்.


இந்த மருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நன்மருந்து. 


வாய்ப்புண், 


மூக்குப்புண், 


சேர்ற்றுப் புண், 


வெட்டுக்காயங்கள்


லேசாய் தடவிட விரைவில் ஆறிவிடும்.சர்க்கரை வியாதியில் உண்டாகும் புண்ணால் கை, கால்கள் வெட்டி எறியப்படுவதை இன்று சாதாரணமாய்க் காண்கிறோம். புண்களை குணமாக்க இதை பூசி வாருங்கள். புண் இருந்த இடம் தெரியாமல் மறையும்.


💊திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கருங்காலிக் கட்டையை வகைக்கு 5 கிராம் வீதம் சேர்த்து, அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, புண் ஏற்பட்டுள்ள பகுதியை காலை, இரவு உணவுக்கு முன் அலம்பிவிடுவதால், அங்குள்ள கிருமித் தொற்று நீங்குவதுடன், புண் விரைவில் ஆறுவதற்கும் ஏற்ற சிகிச்சையாகும். அதன்பிறகு, அதிமதுரத் தூளை அந்த இடத்தில் தெளிப்பதும் நல்லதே.


💊மயில்துத்தம், வேப்பிலை, மஞ்சளைப்  புகைத்து புண் ஏற்பட்டுள்ள பகுதியில் இரவில் படுக்கும் முன் புகையைக் காண்பித்துவர, புண் விரைவில் ஆறும்.


💊அத்திமரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி வைத்துகொள்ளுங்கள்.

தினமும் காலையும் இரவும் புண்ணுக்கு மருந்து தடவுவதற்கு முன்பு அத்திமரப்பட்டை ஒரு கைப்பிடி எடுத்து மண் சட்டியில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் நீர் விட்டு (காயங்களுக்கு ஏற்ப) கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி வைக்கவும். அவை நன்றாக ஆறியதும் புண் இருக்கும் இடத்தில் கழுவி துடைத்து உலர்ந்ததும் பிறகு மருந்து போடலாம். அத்திமரப்பட்டை நீர் புண்ணின் ஆழம் வரைக்கும் சென்று உள்ளிருக்கும் கிருமிகளை நீக்கிவிடும்.


💊ஊமத்தை இலையை கையளவு எடுத்து மண் போக சுத்தம்செய்து அம்மியில் வைத்து மைய அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி மாவு கலந்து குழைத்து புண் கட்டி, வீக்கம் இருக்கும் இடத்தில் கனமாக பற்று போல் போட வேண்டும்.

இந்த பற்று காய காய துடைக்கமால் அதன் மேலேயே பற்று போட வேண்டும். இவை புண், கட்டி உள்ளிருக்கும் சீழ், கிருமிகளை உறிஞ்சு எடுக்கும். மறுநாள் காலை புண் இருக்கும் இடத்தை இளஞ்சூடான நீரில் கழுவி மீண்டும் இந்த பற்றை போடலாம். தொடர்ந்து 5 நாட்கள் வரை போட்டால் கட்டியாக இருந்தால் உடைந்து சீழ், அங்கு சேர்ந்திருக்கும் கெட்ட ரத்தம் அனைத்தையும் வெளியேற்றும்.


💊 நாட்டு மருந்து கடையில் கடுக்காய்தூள், காசுக்கட்டி தூள் கிடைக்கும். இரண்டையும் வாங்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். அதன் பிறகு தினமும் காலை வேளையில் பசு நெய்யில் கடுக்காய்த்தூளையும், காசுக்கட்டி தூளையும் 5 முதல் 10 சிட்டிகை வரை எடுத்து ( வயதுக்கேற்றபடி கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்) நாக்கு, உதடு பகுதியில் தடவி வரவேண்டும். தினமும் காலையும் மாலையும் இருவேளையும் தடவி வந்தால் நாக்கு புண், உதடு புண் குணமாகும்.


💊 கானாம் வாழை 💊


ஆறாத நீண்ட நாள் புண்ணின் ரணத்தை ஆற்ற இவை உதவும். இதை கானாங்கோழி கீரை என்றும் சொல்வார்கள். இந்த இலையை அம்மியில் வைத்து மை போல் அரைத்து ஆறாத புண்ணின் மீது வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவும். மறுநாள் அந்த விழுதை எடுத்து வேறு விழுதை வைத்து கட்டிவிடவும். தொடர்ந்து கட்டிவந்தால் அந்த விழுதோடு புண்ணில் இருக்கும் சீழும் வெளியேறிவிடும்.


💊தொட்டாற்சுருங்கி இலைகளை சிறு உரலில் நீரிவிடாமல் இட்டு இடித்து சாறாக்கி அதை புண்ணின் ஆழம் வரை இறங்கும்படி விட்டு பிறகு அந்த இலையை வைத்து கட்டிவிடவும். இலை காய காய சாறை விட்டு கட்டிவந்தால் 7 நாட்களில் ரணம் ஆறக்கூடும்.


💊 பீர்க்கங் கொடியின் இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்கள் மற்றும் சீழுடன் வெளியேறும் புண்களை கழுவி வந்தாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.


ஒரு முழு பீர்க்கங்காயை தோலுடன் நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முருங்கை விதை (முற்றின முருங்கை விதைக்குள்ளே உள்ள வெண்மை நிறம் கொண்ட பருப்பு 10 எண்ணிக்கை) அளவு எடுத்து இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி ஜூஸாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு


காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். ஆகாயத் தாமரை இலையுடன் வினிகர் சேர்த்து வேக வைத்து சாற்றைப் பிழிந்து எடுத்துவிட்டு, சக்கையை மட்டும் அழுகிய புண்களில் வைத்துக் கட்டிவந்தால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.


💊வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம் ஆறிவிடும்.


💊நாயுருவி இலை, சுண்ணாம்பு, வெள்லைப்பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து வழித்து, காயத்தை சுத்தம் செய்து அதன் மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும். காயம் ஆறிய பின் தான் இந்த மருந்து விழுந்துவிடும்.


💊வெட்டுக்காயம் ஆற வசம்பு தூளை காயத்தின் மீது தூவ குணமாகும்.


💊அடி, சிராய்ப்புக்கு மருதோன்றியிலையை அரைத்து நீரில் கலக்கிக் கழுவச் சிறுகாயம், அடி, சிராய்ப்பு தீரும்.


💊கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் , வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.


💊வாய்ப்புண் குணமாக நெருஞ்சில் இலையை சாறு எடுத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.


💊காலில் முள்குத்திய வலி நீங்க வெற்றிலையில் நல்லெண்ணெய்யை தடவி அணலில் வாட்டி, சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க காயத்துக்கு போட செப்டிக் ஆகாது.


💊கருவேலம் கொழுந்தை மைபோல அரைத்து புண் மூது வைத்து கட்டி வந்தால் புண் ஆறிவிடும்.


💊புரையோடிய புண் அல்லது காயம் ஆற அத்திபால் தடவ புண்கள் ஆறும்.


💊படுக்கைப்புண் குணமாக குப்பைமேனி இலையை விளக்கெண்ணை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் தடவ படுக்கைப் புண் ஆறும்.


💊5கிராம் திரிபலா சூரணத்தை 

200மிலி நீரிலிட்டுக் காய்ச்சி,  காயங்களை கழுவி, மத்தன் தைலம் பூசிவர காயங்கள், புண்கள் குணமாகும்


💊 பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2, தினம்3வேளை கொண்டு, குங்கிலிய வெண்ணை அல்லது அருகன் தைலம் பூச தீப்பட்ட காயங்கள் குணமாகும்


💊 தவசுமுருங்கை இலைகளை இடித்து,வதக்கிக்கட்ட,அடிபட்ட காயம்,வீக்கம் குணமாகும்


💊மஞ்சளை அரைத்துப் பூச சிரங்குகள்,அடிபட்ட புண்கள்,கட்டிகள் குணமாகும்


💊அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி குணமாகும்


💊முட்சங்கன் வேர்பட்டையை யரைத்துப் பூச அடிபட்ட வீக்கம் கரையும்


💊ஊமத்தைசாறு,தே.எண்ணை சமன் கலந்து,காய்ச்சி,வடித்துப் பூச புண்கள், அழுகிய புண்கள் குணமாகும்


💊கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும்.


💊சிற்றாமுட்டி இலைகளையரைத்துப் பூச ஆறாத புண்கள் ஆறும்


💊அதிமதுரதூளை,நெய்விட்டுப் பிசைந்து பூச காயங்கள், வெட்டுக்காயங்கள் குணமாகும்


💊அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்துப்பூச. சாற்றினை  விட்டுக்கட்ட, வெட்டுக் காயத்தினாலேற்பட்ட இரத்தப் போக்கு, காயம் குணமாகும்


💊அரிவாள்மனைபூண்டு இலைதூள்,சமன் தேன்மெழுகு,சிறிது தே.எண்ணை கலந்து களிம்பு செய்துபூச புண்கள்,காயங்கள் ஆறும்


💊 கீழாநெல்லியி இலைகளையரைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்


💊ஓரிதழ்தாமரைசமூலத்துடன், பச்சைக்கற்பூரம்,கோரோசனை கலந்து, நெய் சேர்த்துப் பூச புண்கள், காயங்கள் குணமாகும்


💊சிவப்புக்குங்கிலியதூள் 2 கிராம், 200மிலிபாலில் கலந்து தினமும் காலை பருகிவர கட்டிகள் ,காயங்கள் குணமாகும்


💊 சாதிக்காய் எணணையைத் தடவ புண்கள், காயங்கள்,பாரிசவாயு குணமாகும்


💊 நல்வேளைவிதை எண்ணையை பூச சொறி, சிரங்கு,புண் ஆறும்


💊அண்டிக்கொட்டைதைலத்தை (முந்திரிக்கொட்டை) குச்சியால் தொட்டு புண்கள்மீது வைக்க ஆறும். பித்தவெடிப்பு நீங்கும்.


💊 தொட்டாற்சுருங்கி சமூலச்சாற்றை தினமிருவேளை தடவ,அரைத்து சுண்ணாம்பு சேர்த்துகட்ட வெட்டுக்காயங்கள் குணமாகும்


💊 வல்லாரை இலைச்சாறுடன்,சமன் நெய் சேர்த்துப்பூச

அடிபட்டகாயம், கொப்புளங்கள் குணமாகும்


💊 வெற்றிலையை நெய்தடவி வதக்கிப் பற்றிட தீப்புண்கள் குணமாகும்


💊 மருதோண்றி இலைகளையரைத்துப் பூச கொப்புளங்கள்,தீக்காயங்கள் குணமாகும்


💊 குங்கிலியம்,மெழுகு, வகைக்கு100 கிராம், சிறுதீயிலுருக்கி,350மிலி ந.எண்ணை சேர்த்துக் காய்ச்சி, துணியில் தடவிப் பற்றிட புண்கள் ஆறும்


💊 சங்குப்பூவை நீரில் கொதிக்கவைத்து,பொறுக்கும் சூட்டில் கழுவ  யோனிப்புண்கள் குணமாகும். பால்வினைநோய்,வெள்ளைப்படுதலால் ஏற்படும் யோனி துர்நாற்றம் நீங்கும்


💊 அருகம்புல்லுடன்,மஞ்சள் சேர்த்தரைத்துப்பூசி,1மணிநேரம் ஊறவைத்து குளிக்க சொறி,  சிரங்கு,படர்தாமரை,புண்கள்,உடல்அரிப்பு குணமாகும்


💊 ஆமணக்கு எண்ணையை, தூய,மெல்லிய பருத்தி துணியில் ஊற வைத்துப் பற்றிட மார்புக்காம்புகளிலேற்படும் வெடிப்புகள், புண்கள் குணம் ஆகும்


💊எருக்கிலைச்சூரணத்துடன்,

வி.எண்ணை சேர்த்துத் தடவ நாள்பட்ட புண்கள் குணம் ஆகும்


💊 கல்யாணபூசணிக்காயை வேகவைத்து,சதைப்பகுதியை எடுத்து புண்கள்மீது கட்ட குணமாகும்


💊 கல்யாணமுருங்கைபட்டையை சிதைத்து,கொதிக்கவைத்த நீரால் கழுவ புண்கள், தோல்நோய்கள் குணமாகும்


💊 தான்றிக்காயை நீரிலரைத்துப்பூச புண், சிரங்குகள் குணமாகும்


💊 நாய்வேளை இலை 10 கிராம், 100மிலி நெய்யில் காய்ச்சி, வடித்துப்பூச புண்கள் குணம் ஆகும்


💊நுணா இலைகளையரைத்துப்பூச புண்கள், சிரங்குகள் குணமாகும்


💊 கிணற்றுப்பாசான் இலைச்சாறு விட்டு, அந்த இலைகளை வைத்துக் கட்ட வெட்டுக் காயங்கள், இரத்தப்போக்கு குணமாகும்


💊 கிணற்றுப்பாசான் இலையுடன் சமன் மஞ்சள் சேர்த்தரைத்துக் கட்ட புண்கள் குணமாகும்


💊 கிரந்திநாயகம் இலைகளையரைத்துக் கட்ட ஆறாத புண்கள் ஆறும்


💊 நித்யகல்யாணிபூவை தே.எண்ணையில் வதக்கி,அந்த எண்ணையில் அரைத்துப் பூச புண்கள் ஆறும்


💊ஓரிதழ் அரளிப்பூவை, தே.எண்ணையில்,வதக்கி,அந்த எண்ணையிலரைத்துப் பூச புண்கள் ஆறும்


💊 மல்லிகை பூவையரைத்து, இரவில்,தொடையில் புண் உள்ள இடத்தில் வைத்துக்கட்ட குணமாகும்


💊 அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்து,தேன்கலந்து,காயங்கள்மீதுபூச, தழும்பின்றி ஆறும்


💊 இளவெந்நீரில் குளித்து,  இலுப்பை புணணாக்குச் சூரணம் கொண்டு, தேய்த்துக் கழுவ,  அழுகிய, நாட்பட்ட,  சீழ்கோர்த்த புண்கள் ஆறும்.


💊 வெங்காயசாற்றுடன், மஞ்சள்தூள் கலந்துபூச. தீக்காயங்கள் குணமாகும்


💊 எலுமிச்சை சாற்றுடன், மஞ்சள்தூள் கலந்துபூச,இரத்தக் காயங்கள் குணமாகும்


💊 மஞ்சளைசுட்டு,பொடித்து தினமிருவேளை கட்ட,நாட்பட்ட புண்கள் ஆறும்


💊 முடி அல்லது கம்பளியைக் கருக்கி,பொடித்து அடிபட்ட புண்கள்மீது வைத்துக் கட்ட ஆறும்


💊 வேப்பங்கொட்டைபருப்பை பொடித்து, புரையோடிய புண்களுக்கும், புழு நெளியும் இரணங்களுக்கும் வைத்துக் கட்ட ஆறும்


💊 கெட்டியான டிகாஷனை தடவ,தீப்புண்கள் குணமாகும்


💊 பெருங்காயத்தை இழைத்துப் பூச,காதுகளில் தோடுபோட்ட புண்கள் ஆறும்


💊 வெங்காயத்தை இடித்துக் கட்ட,சிறுகாயங்கள்,புண்கள் ஆறும்


💊 அத்திப்பட்டை குடிநீர்கொண்டு புண்களை கழுவ ஆறும்


💊 படுக்கை புண்களை சுத்தம் செய்து,குப்பைமேனி இலைகளை வதக்கிக் கட்டிவர விரைவில் ஆறும்


💊 அடிபட்ட காயங்களை திரிபலாசூரணத்தில் கழுவி,திரிபலா சூரணம்பூச ஆறும்


💊 அரக்குசூரணம் கொண்டு கட்ட, காயம்,இரத்தக்கசிவு குணமாகும்


💊சோற்றுக்கற்றாழையை, 

தீப்புண்களின்மீது தடவ குணமாகும்


💊அருகம்புல்சாற்றை,புண்களில் தடவ ஆறும். மூக்கிலிட  மூக்கில் இரத்தம் வடிதல் நிற்கும்


💊காட்டாமணக்குப் பாலைத் தொட்டுவைக்க அழுகிய புண்கள் ஆறும்.


💊மிளகாய்பூண்டு பாலைத் தொட்டுவைக்க,வெட்டுக்காயங்கள்,புண்கள் ஆறும்


💊வெங்காயத்தை தே.எணணையில் காய்ச்சிப்பூச,காயங்கள்,புண்கள் விரைவில் ஆறும்


💊 மாசிக்காயை சுட்டு,சாம்பலை தளமாய் வைத்தழுத்த வெட்டுக்காய உதிரப்பெருக்கு நிற்கும்


💊பீட்ரூட்சாறு,தே.எண்ணை கலந்து பூசிவர தீப்புண் ஆறும்


💊மல்லிகையிலையையரைத்து, எள்நெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி வடித்துப்பூச சீழ்புண்கள்,  ஆறாதபுண்கள் ஆறும்


💊 பீட்ரூட்சாறைத் தடவ தீப்பட்ட இடம் கொப்புளமில்லாமல் ஆறும்.


💊 அரசு தளிரிலைகளையரைத்துப் பற்றிட  புண்கள் ஆறும்


💊 அரசுபட்டைதூள் கருக்கித் தே.எண்ணையில் கலந்து பூச புண்கள் ஆறும்


💊 கானாவாழைஇலையை அரைத்துக்கட்ட  படுக்கைப்புண் ,மார்புக்காம்பைச் சுற்றி வரும் புண்கள் ஆறும் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலை இரவு ஆறாத புண்களுக்கு மேல் போட ஆறும்.


💊 வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம் ஆறிவிடும்.


 💊 நாயுருவி இலை, சுண்ணாம்பு, வெள்லைப்பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து வழித்து, காயத்தை சுத்தம் செய்து அதன் மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும். காயம் ஆறிய பின் தான் இந்த மருந்து விழுந்துவிடும்.


 💊 வெட்டுக்காயம் ஆற வசம்பு தூளை காயத்தின் மீது தூவ குணமாகும்.


 💊 அடி, சிராய்ப்புக்கு மருதோன்றியிலையை அரைத்து நீரில் கலக்கிக் கழுவச் சிறுகாயம், அடி, சிராய்ப்பு தீரும்.


💊 கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் , வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.


 💊 வாய்ப்புண் குணமாக நெருஞ்சில் இலையை சாறு எடுத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.

 


💊காலில் முள்குத்திய வலி நீங்க வெற்றிலையில் நல்லெண்ணெய்யை தடவி அணலில் வாட்டி, சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க காயத்துக்கு போட செப்டிக் ஆகாது.


💊 கருவேலம் கொழுந்தை மைபோல அரைத்து புண் மூது வைத்து கட்டி வந்தால் புண் ஆறிவிடும்.


💊 புரையோடிய புண் அல்லது காயம் ஆற அத்திபால் தடவ புண்கள் ஆறும்.


💊 படுக்கைப்புண் குணமாக குப்பைமேனி இலையை விளக்கெண்ணை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் தடவ படுக்கைப் புண் ஆறும்.


🇨🇭 கால் புண்ணுள்ள பகுதியில் அடிக்கடி தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வதும், கைத்தறி வேட்டியைக் கட்டிக் கொள்வதும், கொசு, ஈ, எறும்பு ஊர்வதைத் தவிர்க்கும்விதம் வாழ்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்


🔴#குறிப்பு❓


உடலில் புண் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட சிறுதானியங்கள், எள், உளுந்து, பால், பால் பொருள்கள், கரும்புச்சாறு, நீர்வாழ் பிராணிகள், புளிப்பு, உப்புமற்றும் மசாலாப் பொருள்கள், மலக்கட்டு மற்றும் குடலில் வாயுவை அதிகரிக்கும் கிழங்குகள், செரிமானத்தில் உடல் உட்புறச்சூட்டை அதிகரிக்கும் ஊறுகாய், மிளகாய் வற்றல், செரிமானத்துக்குக் கடினமானவை, குளிர்ந்த உணவு, மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை அனைத்தும் புண்ணிலிருந்து நீரை அதிகம் கசிய வைப்பதுடன், அந்தப் புண் ஆறாமல் செய்வதில் தேர்ந்தவையுமாகும்.


பார்லி, கோதுமை, அறுபது நாளில் விளையக் கூடிய அரிசி (சிவப்புநிறம் கொண்டது), கடலை, துவரை, பச்சைப் பயறு, முற்றாத இளைய முள்ளங்கி, கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், இந்துப்பு, மாதுளம் பழம், நெல்லிக்காய், நெய், கொதித்து ஆறியதண்ணீர், ஆடு, கோழி போன்ற கிராமத்து இறைச்சிகள் போன்றவை நீங்கள் சாப்பிட உகந்தவை. இவற்றால் நீர்க்கசிவு குறைந்து புண் விரைவில் ஆறும்.


மேற்கண்ட மூலிகைகள் எல்லாமே நாள்பட்ட ஆறாத புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டவை. எல்லா புண்களுக்கும் இந்த வைத்தியம் செய்யலாம். பக்க விளைவுகள் இல்லாதவை. நீரிழிவு மாதிரியான பிரச்சனைகளை கொண்டிருந்தாலும் கூட இந்த மூலிகைகள் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஏதாவது ஒரு மூலிகையை மட்டும் குறிப்பிட்ட படி குறிப்பிட்ட நாட்கள் வரை செய்யலாம்.


நீங்கள் மருத்துவசிகிச்சை மேற்கொள்ளும் போதும் அதனோடு இதையும் செய்துவரலாம். இரண்டே நாட்களில் வலியும், காயமும் ஆறதொடங்கும். மாறாக புண்வலி தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையோடு சிகிச்சையும் எடுத்துகொள்வது விரைவில் குணமாக்க உதவும்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


       999 437 9988 ☎ 81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி