வாத நோய்

 🇨🇭#வாதநோய்_என்றால்_என்ன❓


🇨🇭#மருந்து_உட்கொள்ளும் #காலங்களில்………


🇨🇭#வாதநோய்கான_பத்தியம்_என்ன❓


🇻🇳 வாதநோய் என்றால் என்ன❓


வாத நோய் ஒரு #autoimmune_disease என்ற வகை நோய்களில் ஒன்று அதாவது உடலில் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்கள் நோய் கிருமிகளை அழிக்கும். 


ஒருமுறை ஒரு கிருமியினை அழித்து விட்டால் அதனை நினைவில் கொண்டு வாழ்நாள் முழுவதும் அக்கிருமி மீண்டும் தாக்காமல் பாதுகாக்கும் ஆனால் இந்த வகை நோய்களில்………


 "நமது நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்கள் தவறாக நமது திசுகளை நோய் கிருமியாக நினைத்து அழிக்க தொடங்கும் அது வாழ் நாள் முழுவதும் தொடரும் இதுவே வாதநோய் " 


இதில் நூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளள………


❗பொதுவான நோய் பெயர் வாதம்.❓


💊 வாதநோய் பத்தியம்❓


❌வாதத்தைக் கூட்டும் உணவுகள்❓


👉புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும்.


👉உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். 


👉ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். 


👉நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் மற்றும் தூக்கம் போன்றவற்றை வயதுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.


👉உடல் உறவை தவிர்க்க வேண்டும். 


👉குளிர்ந்த நீர், பனி, மழை, குளிர், காற்று இவற்றில் பிரவேசிக்கக் கூடாது. 


❌ அகத்திக்கீரை, சிறுகீரை, பாகற்காய், தயிர், தட்டை, மொச்சை, முற்றிய வாழைக்காய், கொத்தவரங்காய், கசப்பு, துவர்ப்பு உணவு பதார்த்தங்களையும், எண்ணெய் பொரித்த பலகாரங்களையும் சாப்பிடக் கூடாது.


👉சைவ உணவே சாலச்சிறந்தது.


👉வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ண வேண்டும். 


👉வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். 


👉அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். 


👉புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். 


👉உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.


👉வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை  குறைத்திட உதவும்.


👉டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 

1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். 


👉இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டை யும் தேன் கலந்து சாப்பிடலாம். 


👉வாதத்திற் கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.


👉பால், நெய், தேன்,வெள்ளைப்பூண்டு, மிளகு, முருங்கை பிஞ்சு ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது. 


👉பகல் தூக்கம் கூடாது. 


👉கடுமையான சுமை தூக்குவதோ, கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதோ கூடாது.


👉மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவதும் நல்லது. 


👉எப்பவும் வெந்நீர் குளியல் தான் எடுக்கணும் ,காரணம் வாதநோய் மூட்டுகளில் இறுக்கத்தினை ஏற்படுத்தும் .வெனீர் குளியல் தசைகளை தளர்த்தும் . முடிந்தால் இரவு வெந்நீரில் குளிக்கவும் .


👉எப்போதும் இரவு தவிர மற்ற நேரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் .நீங்கள் எப்போதும் அசைவுகளில் இருக்க வேண்டும் .ஓய்வு எடுக்கும் நேரம் தசைகள் இறுக்கம் கூடும் . அவ்வப்போது அசைவுகளில் இருங்கள் .


👉கடின உடற்பயிற்சி கூடாது . எளிமையான அசைவு பயிற்சிகள் செய்யலாம் .


👉உங்கள் உடல் சூடு அதிகம் இருக்கும் எனவே சிக்கன் தவிர்க்கவும்.

மீன் உணவுகள் எடுக்கவும் .


👉குறைவான உடல் உழைப்பினை செய்வதால் உணவுகள் வயிறு முட்ட தின்ன வேண்டாம்.


👉அதிக சீனி எடுக்ககூடாது எல்லாமே அளவு தான்.


🔴  #வாதம்_அதிகரித்து_இருப்பதற்கான #அறிகுறிகள்❓


பயம், கவலை, அதைரியம், குழப்பம் ஆகிய மனச்சிதறல், அதிக சிந்தனைகள் ஆகிய மனநிலைகள். வலிப்பு, முகவாதம், தானாகவே கண் துடித்தல் ஆகிய நிலைகள் வறண்ட, வெடித்த தோல் அமைப்பு. வாயு தொல்லை, மலச்சிக்கல், வயிறு உப்புசம், வீங்குதல், கெட்டியான மலம் ஆகிய தன்மைகள்.


🔰 எடை குறைதல்❓


வேகமான காற்று, குளிர் இவற்றை விரும்பாவை. அதிக சத்தத்தை விரும்பாமை. தடைப்பட்ட தூக்கம். மாறுபட்ட உணவுமுறை, நடைமுறை பழக்கம் மருந்துகள் ஆகியவற்றினால் வாதத்தை குறைக்கலாம்.


🈯 வாதத்தை குறைக்கும் உணவுகள்❓


இயற்கையிலேயே இனிப்பு, உப்பு, புளிப்பு சுவை கொண்ட உணவுகள் இளஞ்சூடான உணவுகள். 

செரிமானத்துக்கு பின் சக்தி.


💊நன்மை தரும் உணவுகள்❓


கோதுமை, கைகுத்தல்அரிசி போன்ற தானியங்கள், உளுந்து, பச்சை பயிறு முதலிய பருப்பு வகை கள், தயிர், நெய், வெண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண் ணெய், மீன் எண்ணெய், சீஸ் முதலியவை. முருங்கை, வெங்காயம், முள் ளங்கி, பூசணி முதலிய காய்கறிகள், மாம்பழம், தேங்காய், திராட்சை, பேரிச்சை, அன்னாசி, அத்திப்பழம் முதலிய பழங்கள், பாதாம் பருப்பு, மல்லி, பெருங்காயம், சீரகம், பூண்டு முதலிய வாசனை பொருட்கள் ஆகியவை நன்மை தருவன.


❌நன்மை தராத உணவுகள்❓


குளிர்ந்த, வறண்ட துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள், பார்லி கொள்ளு ஆகியவை. பட்டாணி, கொண்டை கடலை முளைகட்டிய பயறு வகைகள், கீரை, உருளை கிழங்கு, பாகற்காய் போன்ற காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி ஆகிய பழங்கள், மிளகாய், மிளகு முதலிய நறுமண பொருட்கள், தேன், கரும்பு ஆகியவை நன்மைதரா.


❌ #தவிர்க்க_வேண்டியவை……


குளிர்ந்த பானங்கள், குளிர்ந்த வெப்பநிலை உடையவை. உண்டபின் குளிர்ச்சி தருபவை ஆகியவை இதில் அடங்கும். காலை, மாலை வேளைகளில் சமைக்காத உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள். கார்பன் - டை- ஆக்ஸைடு ஏற்றபட்ட குளிர்பானங்கள். காபின், நிக்கோடின் போன்ற ஊக்கமூட்டிகள், வறுத்த உணவுகள், வெள்ளை சர்க்கரை கலந்தவை. கசப்பு, காரம், துவர்ப்பு சுவையுள்ள உணவுகள்.


🉐 பொதுவான அறிவுரைகள்❓


உணவு உண்ணும் சூழல் அமைதியாக இருக்க வேண்டும். நேரந்தவறாமல் பார்த்து கொள்ள வேண்டும். உணவுடன் சேர்த்து, பால் அருந்தக்கூடாது. பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட பாலை உணவுக்கு 1 மணி நேரம் முன்போ, பின்போ எடுக்க வேண்டும். உணவு உண்டபின் அரை மணி நேரத்திற்குள் பழம், பழச்சாறு எடுக்கக்கூடாது. கடைசி கவனம் சாப்பிட்டு முடித்து, அடுத்த வேலைக்கு போகும் முன்பு நீண்ட மூச்சு ஒன்று எடுக்க வேண்டும்.


🇨🇭உடலில் வாதநோயை உண்டாக்கும் நச்சுகள் சேராமல் இருக்கத் தகுந்த மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும், மலம் கழிக்கும்போது அதிக சிரமப்படாமல் இருப்பதும் அவசியம். அதற்கு………


கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 தேக்கரண்டி வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். 


இந்த அம்சங்களைக் கடைப்பிடித்தால் வாதநோயை விலக்கி வைக்கலாம்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


     999 437 9988  ☎  81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி