அத்தி மருத்துவம்

 *    ஆரோக்கிய வாழ்வை தருகின்ற

               அத்தி மரத்ததை பற்றிய

       சில எளிய வைத்திய குறிப்புகள்


நோயின்றி என்றும் ஆரோக்கியமாய் வாழ  தினம் ஐந்து அத்திப்பழங்களை உண்டு வந்தாலே போதும் ஆரோக்கிய வாழ்வு தானாக அமைந்துவிடும்


   நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தந்து உடல் உள் உறுப்புகளுக்கு வலிமையை உண்டாக்கி உயிர்காக்கும் ஒரு அரிய வகை பழங்களில் மிகவும் சிறந்த பழமாக அத்திப்பழம் திகழ்கிறது


அத்திப் பழத்தை உண்டு வந்தால் அதனால் கிடைக்கின்ற சில அரிய பலன்கள்


உடலில் நோய்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற மலச்சிக்கலை முழுமையாக நீங்கும்


இதயம் பலம் பெறும் 

ரத்த உற்பத்தி அதிகரிக்கும் 

நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்


உடலுக்கு அழகும் உள் உறுப்புகளுக்கு வலிமையையும் உறுதியாக கிடைக்கும்


அஜீரண நோயை குணப்படுத்தும்


ரத்தத்தில் உள்ள பித்தத்தை தணிக்கும் ரத்தத்தில் அதிகமாக இருக்கின்ற சக்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும் நாவரட்சி குணமாகும்


உடலில் உள்ள அதிக உஷ்ணத்தை தணிக்கும் பித்தத்தால் வருகின்ற அனைத்து நோய்களையும் உடலுக்கு வராதபடி பாதுகாக்கும்


உடல் பலவீனம் நீங்கும்


ரத்த மூலம் மூல வாய்வு வயிற்று கடுப்பு கீல்வாதம் மூட்டு வீக்கம் போன்ற நோய்கள் வருவதைத் தடுத்து நிறுத்தும்


 தோல் நோய்கள் வராதபடிக்கு உடலை பாதுகாக்க அத்திப்பழம் பெரிதும் உதவும்


உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் அத்திப் பழத்திற்கு இருப்பதால் வெள்ளை வெட்டை போன்ற உஷ்ண நோய்கள் உடலில் தோன்றாது 


உலர்ந்த அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் வெகு எளிதாக கிடைத்துவிடும்


தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெறும் கல்லீரல் பலம் பெறுவதால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் தீரும்


சுருங்கச் சொன்னால் 

அத்தி பழத்தை உண்டு வந்தால் போதும்

அது உடலில் ஆரோக்கியத்தை உண்டாக்கி விடும் இது உறுதி


அத்தி விதையைப் ஆலவிதை அரசவிதை இவைகளை இடித்து பொடிசெய்து சம அளவாக கலந்து வைத்துக் கொண்டு மூன்று கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைபாடு குணமாகும்


அத்தி மரப்பட்டையை இடித்து வைத்துக்கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து பாதியாக சுண்டக் காய்ச்சி தினந்தோறும் காலை வேளையில் இதை அருந்தி வர நீரிழிவு நோயின் தீவிரம் குறைந்துவிடும் தேக எரிச்சல் பாத எரிச்சல் படிப்படியாக குறைந்துவிடும்


அத்தி மரப்பட்டையை ஐம்பது கிராம் அளவு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு இடித்து சாறு பிழிந்து பசுமோருடன் கலந்து காலை வேளையில் குடிக்க பெரும்பாடு நீங்கும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்


அத்தி மரப்பட்டையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து இதை பசும்பாலுடன் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் இவைகள் அனைத்தும் முழுமையாக குணமாகிவிடும்


அத்திமர பொடியை வெந்நீரில் கலந்து பருகி வர சீதக்கழிச்சல் வெள்ளைப்படுதல் நீரிழிவு நோய் விந்து குறைபாடு மூட்டு வலி இவைகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும்


அத்தி மரப்பட்டையை ஊறவைத்த தண்ணீரில் ஆறாத புண்களை கழுவி புண்ணுக்கு மருந்திட ஆறாத புண்ணும் விரைவில் ஆறி வரும்


உடம்பில் ஏற்படும் வாத வீக்கத்திற்கு அத்திப்பாலை தடவிவர வீக்கம் குறைந்துவிடும் மூட்டுகளின் மீது அத்திப்பாலை பற்றிட மூட்டுவலி நீங்கும்


அத்தி மர பாலை ஐந்து மில்லி அளவு எடுத்து இதற்கு சரியாக பசுவின் நெய் சேர்த்து நன்றாக குழைத்து இதில்சிறிது சர்க்கரை கலந்து இதை காலை வேளையில் சாப்பிட ரத்த கடுப்பு நீங்கும் வயிற்றுப் போக்கு குணமாகும் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு நீங்கும் சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும் நரம்பு பிடிப்பு நீங்கி உடல் வலிகள் குணமாகும் பித்தம் தணியும் 


அத்திப் பிஞ்சுடன் துவரம்பருப்பை சேர்த்து இதை நன்றாக வேகவைத்து கடைந்து  கூட்டாக செய்து இதை உணவில் கலந்து சாப்பிட்டு வர உள் மூலம் வெளிமூலம் போன்ற மூல நோய்களை நீங்கும் குடலிறக்கத்தை குணப்படுத்தும் 


உடலில் உண்டாகும் வலிகளை நீக்கும் உடலிலுள்ள வெப்பத்தை அகற்றும் குடல்புண்களை குணப்படுத்தும் உண்ட உணவுகளை நன்றாக செரிமானம் செய்து அஜீரண நோயை குணப்படுத்தும்


உடலில் உள்ள வறட்சியை நீக்கி உணவுகளின் கழிவான மலத்தை இளக செய்து மலச்சிக்கலை அறவே நீங்கி விடும்


ஐந்து அல்லது ஆறு அத்தி மரத்தின் இளம் துளிர் இலைகளை பறித்து வாயிலிட்டு நன்றாக மென்று அதிகாலை வேளையில் விழுங்கி வர நீர்த்த விந்து கெட்டிப்படும் 


உடலிலுள்ள வறட்சி நீங்கி உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும் ரத்தத்தில் உள்ள பித்தம் தணியும் மேலும் வாய்ப்புண்களை குணப்படுத்தும்


உடலை வலிமைப்படுத்த

     ஒரு எளிய வைத்தியம்


முருங்கை விதை 

பூனைக்காலி விதை

நிலப்பனங் கிழங்கு 

பூமி சர்க்கரைக் கிழங்கு


  இவைகளை சம அளவாக சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து இந்த பொடியில் 5 கிராம் அளவு எடுத்து இதில் 5 மில்லி அத்திப்பாலை கலந்து காலை வெறும் வயிற்றில் தினந்தோறும் நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர அளவுக்கு அதிகமான உடல் சக்தியும் அபரிதமான விந்து உற்பத்தியும் உடலில் உண்டாகும்


ஆண்கள் இதை சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும் 

பெண்கள் இதை சாப்பிட்டு வர உடலுக்கு அதிகமான அழகை கொடுக்கும் 

மேலும் வெள்ளை வெட்டை நோய்களை முழுமையாக நீக்கும்


பொதுவாக

தினந்தோறும் அத்திப்பழத்தை சாப்பிட்ட பின் பசும்பாலை தவறாமல் குடித்து வர உடலுக்கு அனேக நன்மைகள் உண்டாகும்

  

                  சித்தர்களின் சீடன் 

            பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி