ஆண்மை வீரியம்

 *       என்றும் அழகாய் இருப்பதற்காக சித்தர்கள் அருளிய இளமையின் ரகசியம்


  ஒரு கைப்பிடி அளவு ஆலமரத்து விழுதின் இளம் துளிர்களை ஐந்துகிராம் பனங்கற்கண்டுடன் சேர்த்து நன்றாக இடித்து தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து இதை அதிகாலையில்பருகி வந்தால் உடல் உறுதிப் பெறும் 


  உடலின் உள் உறுப்புகள் அனைத்தும்  பலம் பெறும் அழகான உடல் அமைப்பு உண்டாகும் அலியாக இருப்பவருக்கும் ஆண்மையை தந்து ஆண் உறுப்புக்கு வலிமையைதரும்


  வாலுளுவை அரிசியைசூரணம் செய்து இதில் ஐந்து கிராம் எடுத்து பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டால் என்றும் மேனி தளராது உடல் சுருக்கம் ஏற்படாது தேகம் அழகாய் மிளிரும் சகல மிதமான தீராத நோய்களும் தீரும்


  கருடன் கிழங்கை கொண்டு வந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பசும்பாலில் வேகவைத்து அதன்பின் வெயிலில் இட்டு உலர்த்தி இதை சூரணமாக செய்து கொண்டு இதில் மூன்றுகிராம் பொடியை காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் தளர்ந்த உடலும் இறுகி உறுதியாகும்


  உடலில் அழகு ஏற்படுவதை உணரலாம் மேலும் இதனால் சர்வ விஷக்கடிகளும் நீங்கும் மேலும் நரை திரைகள் வராது 


   மூக்கிரட்டை வேரை சூரணம் செய்து கொண்டு பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இளநரை மாறும் உடல் இறுகி உறுதியாகும் உடல் சுருக்கம் ஏற்படாது பார்வைத் திறன் அதிகரிக்கும் தேகம் அழகு பெறும் என்றென்றும்ஆரோக்கியம் நீடிக்கும்

  

  நிலப்பனங்கிழங்கு சூரணம் செய்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது உண்டாகும் ஆண்மை அதிகரிக்கும் உடலில் அழகு ஏற்படும்


    மூன்று பெரிய நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இளமை என்றும் குறையாது அழகான உடலமைப்பும் ஆரோக்கியமும் எப்போதும் நீடிக்கும் அழகாக இருப்பதற்கு இதைவிட எளிய மருத்துவம் வேறு எதுவும் இல்லை


                        சித்தர்களின் சீடன் 

                 பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி