கடுக்காய் ஊறல் குடிநீர்

 உடல் ஒரு குறிப்பிட்ட கிருமியின் தாக்குள்ளான பிறகு அந்த கிருமியை உடலின் எதிர்ப்பு சக்தியால் கொல்ல முடியாத பொழுது நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். மருந்து என்பது வியாதிக்கு வியாதி மாறுபடும். எந்த ஒரு வியாதிக்கும் மருந்து உண்டு.


நாம் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக உட்கொள்ளும் மருந்துகள் அந்த நோய் கிருமியை கொல்லும், இல்லையெனில் அந்த நோய்கிருமிகளின் இனப்பெருக்கத்தை தடைசெய்யும், அல்லது அந்த நோய்க்கிருமிகளை கொல்வதற்கு நமது உடலின் எதிர்ப்பு சக்திக்கு துணை செய்யும்.


தடுப்பு மருந்துகள் என்பவை சற்றே மேலானவை. இவை நோயை அழிப்பதில்லை. ஆனால் "நோயை நான் அழிக்கமாட்டேன். அதற்கு பதிலாக அதை எப்படி அழிப்பது என்று உனக்கு கற்றுத்தருகிறேன்" என்று நமது உடலுக்கு பயிற்சி அளிக்கிறது. ஆனால் தடுப்பு மருந்துகளும் வியாதி சார்த்தவைதான். ஒரு குறிப்பிட்ட வியாதிக்கான தடுப்பு மருந்து மற்ற வியாதிக்கு பொருந்துவதில்லை.


இதை விட மேலான ஆரோக்கியமான வழிமுறைகள் தான் நமது முன்னோர்கள் பின்பற்றியது. அவர்கள் நோயைப்பற்றியும், தடுப்பு மருந்து பற்றியும் சிந்திக்கவில்லை. மாறாக நமது உடலின் எதிர்ப்பு சக்தியை முடிந்தவரையில் அதிகமாக வைத்துக்கொள்ள முயற்சித்தனர். 


ஆரோக்கியமான உணவு, மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல், வாத பித்த கப நாடிகளை சரிசெய்ய திரிகடுகு, திரிபலா சூரணம் என்று பல ஆரோக்கியமான வழிமுறைகளை கண்டுபிடித்தனர். அவை இன்றும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன.


இந்த கொரோனா காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கடுக்காய் ஊறல் குடிநீர் என்ற ஒரு மருந்தை ஆயுஷ் என்றழைக்கப்படும் இந்திய பாரம்பரிய மருத்துவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதை இன்றளவில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.


கடுக்காயின் விதையை நீக்கிவிட்டு, தோலை மட்டும் எடுத்து, லேசாக இடித்து, தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, பிறகு அந்த நீரை வடிகட்டி குடிக்கவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு நூறு கிராம் கடுக்காய்கள் போதுமானவை. இந்த நீரில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும், நுண்ணுயிர்களை கொல்லும் தன்மையும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 


கடுக்காய் ஊறல் குடிநீர் கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா என்ற ஆராய்ச்சியை தாம்பரம் சித்தமருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆறு பேர் சோதனை செய்து டிசம்பர் 2020ல் கட்டுரை வெளியிட்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியை இந்திய பாரம்பரிய மருத்துவ கழகம் (AYUSH Ministry) அங்கீகரித்து தனது இணையத்திலும் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. 


பாரம்பரிய மருத்துவம் எப்பவுமே சிறப்புதான். ஆனால் நமக்குத்தான் அதன் அருமை புரியவில்லை.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி