மஞ்சள் மருத்துவம்

 🇨🇭#நாம்_அன்றாடம்_பயன்படுத்தும் #மஞ்சளில்_உள்ள……


🇨🇭#குர்குமின்_மகிமைகள்_என்ன❗❓❓


மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் தான் குர்குமின்.


மஞ்சளிலுள்ள வேதிப் பொருள்களில் முக்கியமானது `குர்குமின்’ (Curcumin). ஆர்கானிக் சந்தைகளில் மாத்திரை வடிவிலான குர்குமின் இப்போது பிரபலமடைந்துவருகிறது. ஆக, மஞ்சள் மகத்தானது❗இதில் நமக்குத் துளிக்கூடச் சந்தேகம் வேண்டாம்.


இன்று கடைகளில் கிடைக்கும் மஞ்சளில், நிறத்துக்காகப் பல செயற்கை கெமிக்கல்களைச் சேர்க்கிறார்கள். இயற்கையாக, எந்த பிரிசர்வேட்டிவும் சேர்க்காத மஞ்சள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், மஞ்சள் கிழங்குகளை வேகவைத்து, அதை உலரவைத்துப் பயன்படுத்தலாம். மஞ்சள் கிழங்கை வாங்கும்போது, அதை உடைத்துப் பார்த்து வேண்டும். அதன் உள்பகுதி ஈரமாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தால், அது நல்ல மஞ்சள்.


மஞ்சளில் வாலட்டைல் எண்ணெய் (Volatile Oil) என்ற திரவம் இருக்கிறது. அதிலுள்ள குர்குமின் (Curcumin) என்ற நிறமிதான் இதற்கான காரணம். குர்குமினில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில், மூளையில் ஏற்படும் பிரச்னையான ஞாபகமறதியை இது சரிசெய்யும். குர்குமின்……… 


👉ஆன்டி-பாக்டீரியல், 


👉ஆன்டி ஆக்ஸிடன்ட், 


👉ஆன்டி இன்ஃப்ளமேஷன் 


போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது இதயம், கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல் என உடலின் அனைத்துப் பகுதிகளின் அழற்சியையும் சரிசெய்யும்.


சாதரனமாக மஞ்சள் தூளில் குர்குமின் 2 சதவீதம் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். மஞ்சளின் ரகத்தைப்பொறுத்து 5 சதவீதமும் அதற்கு அதிகமாகவும் காணப்படும்.


இந்த குர்குமினை சில நிறுவனங்கள் மஞ்சளிலிருந்து பிரித்தெடுத்து மருந்து நிறுவனங்களுக்கு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்றுவிட்டு கலருக்காக அரசு அனுமதித்த கெமிக்கல் கலரை சேர்த்து வெறும் சக்கையை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.


வேக வைத்து, காய வைத்து, பொடி செய்த மஞ்சளை விடவும், பச்சை மஞ்சள் கிழங்கில் தான் அதிக அளவு குர்குமின் உள்ளது.


💢மஞ்சள் இரண்டு வகைப்படும். ஒன்று………


👉`குர்குமா லோங்கா’ 

(Curcuma Longa). 


இது சமையலுக்குப் பயன்படுவது. 

மற்றொன்று………


👉 `குர்குமா செடோரியா’ 

(Curcuma Zedoaria). 


கஸ்தூரி மஞ்சள் வகையைச் சேர்ந்த இதை, சரும அழகுக்குப் பயன் படுத்துகிறோம். 


ஆயுர்வேதத்தில் மஞ்சளை `ஹரித்ரா’ எனக் குறிப்பிடுகிறார்கள்.


⭕ மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.


👉முட்டா மஞ்சள்


👉கஸ்தூரி மஞ்சள்


👉விரலி மஞ்சள்


👉கரிமஞ்சள்


👉நாக மஞ்சள்


👉காஞ்சிரத்தின மஞ்சள்


👉குரங்கு மஞ்சள்


👉குடமஞ்சள்


👉காட்டு மஞ்சள்


👉பலா மஞ்சள்


👉மர மஞ்சள்


👉ஆலப்புழை மஞ்சள்


⭕ நடைமுறையில் உள்ள மஞ்சள் மூன்றாவது வகை ❓


⏩#முட்டாமஞ்சள்…


இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.


⏩#கஸ்தூரிமஞ்சள்……


இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.


⏩#விரலிமஞ்சள்……


இதுதான் கறி மஞ்சள். நீள வடிவில் நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு கறி மஞ்சளும் இதுதான். இதை‌த்தா‌ன் நா‌ம் சமையலு‌க்கு‌ப் பய‌ன் படு‌த்து‌கிறோ‌ம்.


🇨🇭 #_குர்குமின்_பயன்கள்❓


1.புற்றுநோய் கிருமிகளை அழிக்கவல்லது.


2.அல்ஜைமர் நோய் உள்ளவர்களுக்கு மூளையில் உள்ள அழுக்குகளை நீக்குவதில் பெரும்பங்காற்றுகிறது.


3.மல்டிபிள் செலெரோசிஸ், சிஸ்டிக் பைபுரோஸிஸ் க்கும் அருமருந்தாகும்.


4. குர்குமின் ஒரு ஆன்டி-ஆக்ஸிடென்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சலை குறைக்கும் மருந்தாகும். மற்றும் பல என்னிடலடங்கா வியாதிகளுக்கும்,நோய் எதிர்ப்பு சக்திக்கும் மருந்தாகிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.


🇨🇭 #மஞ்சள்_மருந்துகள்❓


💊ஒரு பச்சை மஞ்சள் கிழங்கில், 2 - 9 சதவீதம் குர்குமின் உள்ளது. மஞ்சளை தனியாக சாப்பிடுவதை விட, மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், அதில் உள்ள குர்குமினை முழுமையாக உடல் உறிஞ்சும். 


குர்குமின் முழுமையாக உடலில் சேர, மிளகு மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம். 


தினமும், 30 - 75 கிராம் மஞ்சள் சாப்பிட்டால், 2 - 9 சதவீதம் குர்குமின் கிடைக்கும்.


மேலை நாடுகளில் மஞ்சள் விளைச்சல் கிடையாது என்பதால், இதில் உள்ள குர்குமினை தனியே பிரித்து, மாத்திரை வடிவில் பயன்படுத்துகின்றனர். நமக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


💊 மஞ்சள், மிகச்சிறந்த கிருமிநாசினி. இதைக்கொண்டு குடலைச் சுத்தப்படுத்தலாம். 


மஞ்சள் மற்றும் வேப்பங்கொழுந்தை சம அளவு எடுத்து அரைத்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, ஏழு நாள்கள் சாப்பிட வேண்டும். இதில், மஞ்சள் மற்றும் வேப்பங்கொழுந்தின் அளவு, உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். 


👉50 கிலோ எடையுள்ளவருக்கு, 2.5 கிராம் பசு மஞ்சள், 2.5 கிராம் வேப்பங்கொழுந்து சாப்பிட வேண்டும். 


👉இதேபோல 30 கிலோ எடை என்றால் 1.5 கிராம் பசு மஞ்சள், 1.5 கிராம் வேப்பங்கொழுந்து, 


👉40 கிலோ எடை என்றால், 2 கிராம் பசு மஞ்சள், 2 கிராம் வேப்பங்கொழுந்து சாப்பிடவேண்டும்.


💊 மாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை 

குடிப்பது சிறந்தது. இதில், ரெடிமேடாகக் கிடைக்கும் மஞ்சள் பொடிக்கு பதில் விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். 


👉 ஒரு டம்ளர் பாலுக்கு, ஒரு இன்ச் விரலி மஞ்சளை எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்.


💊#மஞ்சள்சேர்த்த_பால்💊


பால் ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்களுக்கு பால் பிடிக்காதவர்கள் நீங்கள் தேங்காய் அல்லது பாதாம் பாலுடன் மஞ்சள் சேர்க்கலாம். தேன் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டு செய்வதாக இருந்தால் நீங்கள் அதை தவிர்க்கலாம். இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம்.


🔰 தேவையான பொருட்கள்❓


பால் - 1 கப்


மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்


தேன் - 1 டீஸ்பூன்


இலவங்கப்பட்டை - சிட்டிகை அளவு


மிளகுத்தூள் - 1 சிட்டிகை


இஞ்சி சாறு - கால் டீஸ்பூனில்


பாலை பாத்திரத்தில் சூடேற்றி அனைத்து பொருள்களையும் கலந்து மென்மையாக சூடாக்கவும். அவை கொதிக்க வருவதற்கு முன்கூட்டியே எடுத்து விடவும். தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் குடித்து வந்தால் போதுமானது. .


💊​#_மஞ்சள்_தேநீர்💊


மஞ்சள் மற்றும் தேன் தேநீர் தும்மல், மூக்கு ஒழுகுதல், ஒவ்வாமை நாசியழற்சி அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. தேன் ஒவ்வாமை இருப்பவர்கள் தேனை தவிர்த்து நாட்டுச்சர்க்கரை, பனங்கருப்பட்டி சேர்க்கலாம்.


🔰தேவையான பொருட்கள்❓


தண்ணீர் - 1 கப்


மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்


தேன் - இனிப்புக்கேற்ப


தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைத்து தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வரலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி