எள் செடியின் மகிமை

 ஆச்சரியப்பட வைக்கும் எள்ளுச் செடியின் மகிமை !!!!!!!


எள்ளுச் செடியை இந்தியாவில் புஞ்சைப் பயிராகப் பயிர் செய்கின்றார்கள். அச்செடி விதை விதைத்த 90 நாளில் முளைத்துப் பெருத்துப் பூத்துக் காய்த்து விடுகின்றது. எள்ளுக்காய் காய்த்தபின், செடியைப் பிடுங்கி உலர்த்தித் தட்டினால் எள்ளு விதை உதிர்ந்து விடும். அத்தகைய எள்ளைக் காற்றில் தூற்றித் தூசு முதலானவைக ளைப் போக்கிக் சேகரித்து வியாபாரிகளுக்கு விற்பது நாட்டு வழக் கம்.


எள்ளிலிருந்து பலவகைப் பலகாரங்கள் செய்யலாம். எள் உஷ் ணமுடையது. இரத்த சுத்திக் கேதுவனாது. எள்ளை அறைத்து முள் பொத்திக்கொண்ட பாகத்தில் கட்ட


முள் அழுகி வெளிப்பட்டுவிடும்.


எள்ளைப் பொடிசெய்து நெருப்பில் தூவி அதிலிருந்து


வெளிப்படும் புகையை சுவாசிக்கில் சலுப்பு நீங்கும். எள்ளுப் பொடியின் புகையால் மோட்டுப் பூச்சி நாசமடைந்து விடும். கொசுக்கள் அணுகாது.


நாகதாளி அடர்ந்த காட்டை அழிக்க எள்ளை விதைத்தால் நாகதாளி அழிந்துவிடும். நாகதாளிச் செடியில் எள்ளோ அல்லது எள்ளின் நெய்யோ பட்டமாத்திரத்தில் நாகதாளிச் செடி வேருடன் அழிந்துவிடும். அழிந்த நாகதாளிச் செடி பயிர்களுக்கு எருவாகும். ஏனெனில் நாகதாளிச் செடியின் முள் முதலிலேயே அழுகிவிடுவ தால்தளைகளில் போட்டு மிதிக்க ஏது உண்டாகின்றது.


மூட்டை பூச்சியையும் கொசுக்களையும் நாசம் செய்ய எள்ளை


நீக்கியபின் செடியைக் கொளித்திப் புகை போடலாம். கட்டிகளிலுள்ள விஷங்களை வெளிப்படுத்த எள்ளை அறைத் துக்காட்டலாம்.


சூதகவாய்வு என்னும் வியாதிக்கு எள்ளும் வெல்லமும்


கலந்து சாப்பிட குணமாகும்.


சேராங்கொட்டை என்னும் (மார்க்கிங் நட்) விதை கொடிய உஷ்ணமுடையதும் புண் பண்ணக் கூடியதுமானது. அத்தகையசேராங் கொட்டையின் வேகம் சமனான எள் சேர்ந்த மாத்திரத்தில் குறைந்துவிடும்.


ஆனபடியால் மருந்து வகைகளில் எங்கு சேராங்கொட்டை சேர்க்கப்படுகின்றதோ அங்கு அதற்குச் சமனானா எள்ளும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் வயிறு, வாய் முதலானவைகளில் புண் ஏற்பட்டுத் தொந்தரவு உண்டாகும். சிலர் சேராங்கொட்டைக்குத் தேங்காய் மாத்து என்பார்கள். அது பொருத்தமல்ல; எள் ஒன்றே சரி யான மாத்தெனக் கொள்ளல் வேண்டும்.


இந்தக் காரணத்தால்தான் சாத்திரங்களில் பெரிய மருந்தாகக் கூறியுள்ள இடிவல்லாதி என்னும் மருந்தைக் கூறுங்காலத்தில் பல சரக்குகள் சேர்க்கச் சொன்னாலும் எள்ளைச் சேர்க்கும் அளவு மாத்தி ரம் சேராங்கொட்டைக்கு இரண்டு பங்கு அதிக அளவையே கூறியி ருக்கின்றனர்.


சேராங் கொட்டையின் அளவுக்குக் குறைவாக எள் சேர்க்கச் சொல்லும் முறை சரீரத்திற்கு உஷ்ணத்தை உண்டு பண்ணி வயிற்று வலி சீதபேதி முதலான வியாதிகளைத் தரும்.


இடிவல்லாதி மருந்தில் சேராங்கொட்டையும் எள்ளும் பன வெல்லமும் சேர்த்து இடிப்பது போதுமானது. சில முறைகளில் ரசம், கந்தகம் மற்றும் பல கடைச்சரக்குகள் சேர்ப்பதும் உண்டு.


இடிவல்லாதியால் மேகப்படை, மேகப்புண், சொரிசிரங்கு,


குஷ்டம் முதலிய வியாதிகள் நீங்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைத்திய நிபுணரும் கல்வியில் தேர்ந்தவரும் உலகம் புகழக் கூடியவருமான ஒருவர் பங்கு விகிதம் பணம் வசூலித்து இடிவல்லாதி லேகியத்தைச் செய்து பலர்க்குக்


கொடுத்தார்.


லேகியம் உண்டவர்களுக்கு இரத்த பேதியும், வாய், வயிறு இரணமும் ஏற்பட்டுச் சிலர் மாண்டதாவும், சிரல் சிகிச்சை பெற்றுச் சுகமுற்றதாகவும் கூறப்படுகிறது. இதையுணர்ந்தபின் லேகியத்தை ஒரு மூலையில் தள்ளிவிட்டார். இடிவல்லாதி லேகியம் செய்து பெரும் பணம் திரட்டக் கருதி வரவழைத்துச் சேகரித்து வைத்திருந்த சேங்கொட்டை மூட்டைகளை ஒரு பக்கம் அடுக்கி வைத்துவிட் டார்.


ஒரு நாள் அவர் அழைப்பிற் கிணங்கி அவரிடம் சென்று வார்த் தையாடிக்கொண்டிருந்தேன். பிறகு அத்தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும்போது சேங்கொட்டை மூட்டைகளைக் கண்டு இவ்வளவுசேங்கொட்டை எதற்காக என, வினவியதற்கு அவர் மேற்கூரிய கதையைச் சொன்னார்.


அப்படியானால் அதன் முறையைச் சொல்லுங்கள் என்றதும் அதன் முறையைக் காட்டினார். அம்முறையில் எள்ளுச் சேர்க்கப் படாததைக்கண்டு, இதை உண்டவர்மரணமடைவது திண்ணம் என் றேன். ஏனெனில் சேங்கொட்டைக்கு முறிவாகியதும், வேகத்தைத் தணிப்பதும் கெடுதலை நீக்கக் கூடியதுமான எள் சேராததால் இது உட்கொள்ளக் கூடியதன்று என்றதைக் கேட்டு மனம் கசிந்து தான் நம்பிச் செய்த முறையால் பிறர்க்குத் தீங்கு நேர்ந்ததாய்க்கூறினார்.


எனவே, வைத்தியர்களுக்கு இவ்வியாசம் பலனைத்தரும் என் பதில் ஐயமில்லை.


பெண்களுக்கு பால்சுரக்க எள்ளும் கேழ்வரகின் அடையும் வெல்லமும் சேர்த்து இடித்து உண்ண பால் சுரக்கும். ஆனால் இக்கா லத்தில் அநாகரீகமாய் நினைப்பவர்கள் பெருகிவிட்டதால் இதை உண்ண மறுப்பார்களென நினைக்கின்றேன். ஆனால் குணம் கண்டு ஒருவரும் வெறுக்கமாட்டார்கள்.


எள்ளும் முருங்கக் கீரையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த


வாயுவால் ஏற்படும் மார்வலி நீங்கும். எள்ளும் பனவெல்லமும் சூதகத்தை வெளிப்படுத்தும்.


           - அனுபவ வைத்திய நூலிலிருந்து


M.S. சித்தா சிகிச்சை மையம்

அகத்தியர் தோட்டம்,

கல்பகனூர் அஞ்சல்,

ஆத்தூர் வட்டம்,

சேலம் மாவட்டம்.

Ph - 9443853756

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி