உணவும் குணமும்

 நாம் அன்றாடம் உண்ணுகின்ற உணவின் மூலமாகவே 

உயர்ந்த குணத்தை பெறலாம்

உயர்ந்த மனிதனாய் வாழலாம்


   நாம் அன்றாடம் வழக்கமாக உண்ணும் உணவின் மூலம் உடலில் எப்படி வாதம் பித்தம் சிலேத்துமம் மாறுபட்டு இதன் மூலம் நமக்கு நன்மையும் தீமையும் ஏற்படுகின்றதோ அதைப்போல


   நாம் உண்ணுகின்ற உணவின் மூலம் நமது குணமும் உயர்ந்த குணமாகவும் தாழ்ந்த குணமாகவும் மாறுபடும்


அதாவது 

உலகில் வாழும் மக்கள் அனைவரும் தனித்தனி குணத்தை பெற்றிருந்த போதிலும்


பொதுவாக


சாத்வீக குணம் 

ராஜச குணம்

தாமச குணம்


  என்று சொல்லக்கூடிய இந்த  முக்குணங்களில் ஏதாவது ஒரு குணத்தை சார்ந்தே மண்ணில் மாணிடராய் உயிர் வாழும் நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம் 


இதுவே மானிட வர்க்கத்தின் மனிதகுணங்களின் நியதியாகும் இதுவே இயற்கையின் விதியாகவும் இருக்கின்றது


சாத்வீக குணம் என்பது 

சிவ நிலையை குறிக்கும்


இராஜச குணம் என்பது 

விஷ்ணு நிலையை குறிக்கும்


தாமச குணம் என்பது 

பிரம நிலையை குறிக்கும்


தாமச குணத்தை தருகின்ற

மொச்சை 

கத்திரிக்காய் 

முள்ளங்கி 

முந்திரி 

உருளைக்கிழங்கு 

கஞ்சா

 அபின் 

 பீர்க்கங்காய் 

சுரைக்காய்

 எருமைப்பால்

மீன் மற்றும் விலங்குகளின் கறி


  இவைகளை உணவாக உட்கொண்டால் மந்தப் புத்தியும் சோம்பலும் ஏற்படுவதோடு மட்டும் அல்லாமல் தன்னிலை உணராத ஒரு தன்மையும் மனிதனுக்கு உண்டாகிவிடும்


இதைப்போல ராஐச குணத்தை தருகின்ற உணவுகளான


கடுகு

உப்பு 

புளி 

மிளகாய் 

பெருங்காயம் 

நிலக்கடலை 

முந்திரிப்பருப்பு 

ஜவ்வரிசி  

இலவங்கம் 

ஓமம் 

கசகசா 

புடலங்காய் 

பூசணிக்காய் 

எலுமிச்சை 

பறவைகளின் கறி


இவைகளை உட்கொண்டு வந்தால்

மூர்க்க குணமும் தேவையற்ற கோபமும் ஏற்படும் தேவையில்லாத செயல்களை செய்யும் ஒரு நிலையை உண்டாகி விடும்


மேற்கண்ட இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து


சாத்வீக குணத்தை தருகின்ற

பொரி 

அவல் 

சம்பா அரிசி 

கார் அரிசி 

பச்சை அரிசி 

பச்சை பயிறு 

திணை 

உளுந்து 

எள்ளு 

சுக்கு 

மிளகு 

சீரகம் 

வெந்தயம் 

தேன் 

சீனி சர்க்கரை

திராட்சை 

பேரீட்சம் பழம்

மாதுளை பழம்

ஜாதிக்காய் 

ஜாதிப்பத்திரி 

ஏலக்காய் 

குங்குமப்பூ 

தேங்காய் 

இளநீர் 

பசும்பால் 

பசுநெய் 

கண்டங்கத்திரி 


இவைகளை உணவாக 

  உட்கொண்டு வந்தால்


இதனால்  எளிமையாக வாழுகின்ற குணத்தை பெறுவதுடன் தன் நிலையை உணர்ந்து கொள்ளும் ஒரு சமயோகித சிந்தனையாளராகவும் பேரறிவு எனும் உயர்ந்த ஞானத்தைப் பெறும் 

உயர்ந்த பாக்கியசாலியாகவும் வாழும் ஒரு நிலையை இந்த உணவுகளின் மூவம் மனிதனுக்கு வெகு எளிதாக கிடைத்துவிடும்


  இயற்கையாக கிடைக்கின்ற உணவுகள் அனைத்தும் மனிதனுக்கு பல வகையான சத்துக்களை தந்த போதிலும் 


மனிதனாக வாழ்வதற்கு தகுதியான உயர்ந்த குணங்களை அனைத்து வகையான உணவுகளும் தந்துவிட முடியாது 


ஒரு குறிப்பிட்ட உணவு வகையில் மட்டுமே இந்த உயர்ந்த குணங்களை தருகின்ற உன்னத சக்திகள் இருக்கின்றது என்பது சித்தர்களின் கருத்தாகும்


எனவே 

மனிதனாக வாழ்வதற்கு 

சாத்வீக குணத்தை தருகின்ற உணவுகளை மனிதன் உட்கொண்டு வந்தால்


இதன் மூலம் 


சாத்வீக குணத்தை ஒரு மனிதன் அடைந்து விட்டால்


  கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் ஒரு சரிவிகித மன இயல்பும் சகிப்புத்தன்மையும்  மனிதனுக்கு உண்டாகிவிடும் இதனால் துன்பம் நம்மை விட்டு விலகிவிடும்


மேலும் 

நாம் செய்கின்ற செயல்பாடுகள் அனைத்தும் நற்காரியங்களாக மட்டுமே இருக்கின்ற ஒரு நிலை ஏற்படும் 


இப்படி ஒரு சக்தியை இந்த பிரபஞ்சம் மனிதனுக்கு தந்தருளும் 


இதனால் 


எப்பொழுதும் 

ஆனந்தத்தையும் மகிழ்ச்சியும் அளவில்லாமல் என்றென்றும்  நிலையாக பெறமுடியும் என்பது உறுதியான உண்மையாகும்


எப்பொழுதும் மகிழ்ச்சியாக 

இருக்கின்ற ஒரு மனதை இயற்கை நமக்கு தருவதுடன் மட்டும் அல்லாமல் 


கருணை 

வாய்மை

தானம் 

தயவு 

பணிவு 

எளிமை 


   போன்ற நல்ல குணங்களை மட்டுமே மனதில் ஏற்படும் 


குணங்களில் உயர்ந்தவனாக இருந்தால் மட்டுமே அவன் மனிதனாக கருதப்படுவான்


 ஆதலால் 

சாத்வீக குணங்களை தருகின்ற நல்ல உணவுகளை உணவாக உட்கொண்டு இதன் மூலம் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு 


நல்ல மனிதனாய் வாழ்ந்து

மனிதர்களில் மகாத்மா எனும் உயர்ந்த நிலையை பெற்று வளமாக வாழ வேண்டும் என்பதே மனித பிறப்பின் நோக்கமாகும்


எனவே 

அன்பு இரக்கம் பேரறிவு எனும் உயர்ந்த குணங்களை பெற சாத்வீக குணங்களை தருகின்ற உணவுகளை உட்கொண்டு  உயர்ந்த மனிதனாக வாழ்வோம்


                  சித்தர்களின் சீடன்

           பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி