வாதம் 80
🇨🇭#80_வகை_வாதநோய்களும்……
🇨🇭#அதன்_அறிகுறிகளும்…❓❗❗❓❓
💢👉 வாதநோயின் 5 வகையான இயக்கங்கள்❓
💢👉அதற்கான வீட்டு வைத்தியமும்❓
♿ மலச்சிக்கல் முதிர்ந்து வாய்வு ❗
வாய்வு முதிந்து வாதம் ❗
♿ வாதநோய்க்கு முதல் முக்கிய காரணம் மலச்சிக்கலும், செரிமான கோளாரும் தான்…❗❗
நமது உடல் மற்றும் உணர்ச்சி மட்டத்தில் நம் உடலின் செயல்பாட்டை நிர்வகிக்கும் மூன்று அடிப்படை ஆற்றல்கள் வாதம் , பித்தம், கபம் வரைமுறை படுத்தப்படுகிறது.
வாதத்தை புரிந்து கொள்ள, அதன் குணங்களைப் புரிந்துகொள்வது அவசியம். வாதம் காற்று கூறுகளால் ஆனது. இதன் பொருள் காற்றை (வாயு) ஒத்த குணங்கள் உள்ளன. வாதம் காற்றைப் போன்றது - இது ஒளி, குளிர், உலர்ந்த மற்றும் நகரும் தன்மை கொண்டது.
பெரும்பாலும் 40 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இன்னவென்று கண்டறிய முடியாத இனம்புரியாத உபாதைகள் இருக்கும்.
வாத, பித்த, கப சமநிலை கெட்டு, வாதம் உடலில் அளவுகடந்து அதிகரிப்பதால் உண்டாகும் உபாதைகள்தான் இவை.
சிலருக்கு சாதாரண உபாதைகளாக எண்ணக்கூடிய நாட்களில் சீரடையும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும்.
சிலருக்கு உயிர் பறிக்ககூடிய அளவுக்கு வளரும். வயது முதிர்ந்து இயற்கை மரணம் அடைந்தவர்களின் இறுதி நாட்களை ஆராய்ந்து பாருங்கள். பிறவியெடுத்த இம்மனிதவுடல், முதிர்ந்து தேய்மானம் அடைந்தவுடன் முதலில் வாத உபாதைகள் ஏற்பட்டுதான் தனது வாழ்நாளை முடிக்கும்.
வயதானவருக்கு ஏற்படும் வாத உபாதைகள் இயற்கையின் கட்டாயம். அதன் தாக்கத்தை குறைக்கலாமே தவிர, தடுக்க முடியாது. மற்றவர் அனைவருக்கும் ஏற்படும் வாதநோய்களை, சித்த மருத்துவத்தினால் நிச்சயமாக துரிதமாகக் குணப்படுத்தமுடியும்.
மனித உடலில் உருவாகும் வலி உபாதைகள் அனைத்தும் பெரும்பாலும் வாதத்தால் வருபவையே.
இக்கால மருத்துவத்தில் இவை வெறும் வலி உபாதைகளாக மட்டுமே பார்க்கப்பட்டு வலி நிவாரணி மருந்துகள் தரப்படுகிறது. ஆனால் உபாதையையும் அதன் தொடக்கத்தையும் நிரந்தரமாகத் தீர்க்க, நமது சித்த மருத்துவத்தில் மருந்துண்டு.
👉வாதத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்………
▶ மூளை, இதயம், நுரையீரல் சிறுநீரகம், போன்ற உருப்புகளை இயக்குவது, வாயு. ஆக பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் இந்த வாயுவே. இதில் இருந்து உருவாகுவதே வாதம்.
▶ மூத்திரப்பை, பாதங்கள், இடுப்பு, துடைகள், தொப்புலுக்கு கீழ் உள்ள இடங்கள், குடல் போன்ற இடங்களில் வாயு தங்கி பின் முதிர்ந்து வாதமாக உருவாகும்.
ஒருவரின் இதய ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கலை மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) என்கிறோம். இதேபோன்று ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதை வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.
ஒருவரின் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம், கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாகப் பாய்ந்து மூளைத் திசுக்கள் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகின்றன. இதனால் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படும்……
அங்க இயக்கங்கள், பேச்சுத்திறன்,
சிந்தனைத் திறன், மனநிலை,
பார்வை, கேட்கும் திறன்,
உடல் உணர்வுகளின் தன்மை
ஆகியவை சீராகச் செயல்படுகின்றன. அதனாலேயே நாம் அன்றாடப் பணிகளைச் சரியான சுயசிந்தனையுடன் செய்ய முடிகிறது.
மூளைத் திசுக்களிடையே பரவி இருக்கும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் அடைப்புகள், ரத்தக் குழாய்களில் பாயும் ரத்தம் உறைந்து போதல், சில நேரம் மூளை ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு மூளைத் திசுக்களிடையே ரத்தம் கசிந்து விடுதல் ஆகியவை காரணமாக மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் இந்தப் பாதிப்பால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட உடல் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டு வாதநோய் ஏற்படுகிறது. மூளையின் வலது பக்கம் பாதிக்கப்படும்போது உடலின் இடது பகுதியிலும், மூளையின் இடது பக்கம் பாதிக்கப்படும்போது வலது பக்கத்திலும் வாதத்தன்மை, பேச முடியாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
👉வாதமாக மாறி உடலில் எந்த இடத்தில் தங்கி உபாதைகள் தருகிறதோ அதன் பெயரில் வாதமாக சொல்லப்படும். நமது சித்தர்கள், அவற்றின் தன்மையைப் பொறுத்துப் பெயரிட்டு வகைப்படுத்தியுள்ளனர்.
.
.
🔴 #வாதத்தின்_5_வகையான
#இயக்கத்தை_கொண்டது❓
♒ பிராண வாயு♒
பிராண வாயு நமக்கு உணர்ச்சி அனுபவத்தை ஈர்க்கும் சக்தியைக் குறிக்கிறது. இது ஈர்ப்பின் சக்தி மற்றும் காந்த இயல்பு கொண்டது. அது செயல்படும் விதம், நாம் நம்மை வெளிப்படுத்தும் பதிவுகள் வகைகளை தீர்மானிக்கிறது. பிராண வாயு தலை மற்றும் இதயத்தில் (மார்பில்) வசிக்கிறார்,அங்கு ஆசை வாழ்கிறது,
தேர்வுகள் செய்யப்படுகின்றன, மற்றும் உணர்ச்சி அனுபவம் செயலாக்கப்படுகிறது. அது ஆரோக்கியமாக இருக்கும் போது, இணக்கமான மற்றும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விஷயங்களை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம். பிராண வாயு சமநிலையற்ற நிலையில் இருக்கும் போது, நாம் நமது புலன்களை தவறாகப் பயன்படுத்துகிறோம், மேலும் நோயை ஏற்படுத்தும் விஷயங்களை நமக்குள் கொண்டு வருகிறோம்.
♎ சமனா வாயு♎
பிராண வாயு ஈர்ப்பின் சக்தியைக் குறிக்கும் அதே வேளையில், சமனா வாயு உறிஞ்சும் சக்தியைக் குறிக்கிறது, நாம் ஈர்க்கப்பட்ட பதிவுகள் நம் இருப்பு மையத்தை நோக்கி இழுக்கிறது. உதாரணமாக, சமனா வாயு குடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை இரத்த ஓட்ட அமைப்புக்கு கொண்டு செல்கிறது, மேலும் நாம் தொடும் விஷயங்களின் உணர்வுகள் தோலில் இருந்து மத்திய நரம்பு மண்டலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. சமனா வாயு சரியாக செயல்படும்போது, பதிவுகள் சரியாக உறிஞ்சப்படுகின்றன. இது செயலிழந்த நிலையில் இருக்கும்போது, உறிஞ்சுதல் கடினமாகி, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உணர்வின்மை ஏற்படலாம்.
♈ வியனா வாயு♈
உறிஞ்சப்பட்டவுடன், ஒரு எண்ணம் செயல்பட வேண்டும். இது வியனா வாயுவின் பாத்திரமாகும், இது பதிலைச் சுற்றும் சக்தியாகும், அதை மையத்திலிருந்து சுற்றளவுக்கு நகர்த்தும். எடுத்துக்காட்டாக, செரிமான அமைப்பில் இரத்தம் உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்கிறது, இதனால் ஒவ்வொரு உயிரணுவும் அதன் சரியான விநியோகத்தைப் பெறுகின்றன. நரம்பு மண்டலத்தில், மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து ஒரு தசை அல்லது உறுப்பு நோக்கி ஒரு சமிக்ஞை அனுப்பப்படுகிறது.
⛎ உதனா வாயு⛎
செயலுக்கும் வெளிப்பாட்டிற்கும் உதனா வாயு பொறுப்பு, அதாவது பணிக்கு பெறப்பட்ட ஆற்றலை வைப்பது. செல்கள் பெறப்பட்ட ஆற்றலை எடுத்து அவற்றின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்கின்றன. செல்லுலார் ஆற்றலுக்கும் புரதங்களை உருவாக்குவதற்கும் ஊட்டச்சத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நரம்புகள் தசைகள் மற்றும் உறுப்புகள் சரியாக செயல்பட அறிவுறுத்துகின்றன.
♊ அபனா வாயு♊
செல்களின் செயல்பாடு வேலை மற்றும் கழிவு இரண்டையும் உருவாக்குகிறது. வேலைக்கு உதனா வாயு பொறுப்பேற்றுள்ள நிலையில், கழிவுகளை சுத்தம் செய்வதற்கு அபனா வாயு பொறுப்பு. அபனா வாயு முதன்மையாக சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் மாதவிடாய் போன்ற செயல்பாடுகளின் மூலம் கழிவுகளை நீக்குகிறது. உடலின் கீழ்நோக்கி பாயும் அனைத்து ஆற்றலுக்கும் இது பொறுப்பாகும், மேலும் குழந்தையை கருப்பையிலிருந்து வெளியே கொண்டு உலகிற்கு கொண்டு செல்ல தேவையான ஆற்றலுக்கும் இது பொறுப்பாகும்.
.
.
🉐 #80_வகை_வாதநோய்களும்_அதன் #அறிகுறிவும்❓
♦1.சூரிய வாதம்
இந்த வாதம் உண்டாகிவிட்டால், உடல் அனல் காய்ந்து நடுக்கம், நரம்பு இசிவு, அனைத்து மூட்டுகளில் கடுப்பு இருக்கும். பகல் முழுவதும் தாக்கம்கொண்டு வெயில் தணிய படிப்படியாகக் குறையும். காலை, மீண்டும் தொடங்கும்.
♦2. சந்திர வாதம்
இந்த வாதம் உடலில் தாக்கம் இருக்கும் போது உடல் குளிர்ந்து நடுக்கம் உண்டாகும். பொதுவாக இரவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
♦3. சீத வாதம்
குதம் (ஆசனவாய்) வலி கண்டு உடலில் உள்ள எலும்புகள், மூட்டுகளில் குடைச்சல், வீக்கம், உண்டாகும்.
♦4. தொந்த வாதம்
இதன் தாக்கம் என்ன வென்றால் நரம்புகள் இசிவு, மலம் கழிக்க சிரமம், ஆசனவாயில் வலி இருக்கும்.
♦5. அவ்வாகு வாதம்
இதன் தாக்கம் உடல் வீங்கும். வீங்கிய இடங்களில் தொடும் உணர்வு அற்ற நிலையில் இருக்கும். மரத்துப்போகும்.
♦6. சிரோ வாதம்
இதன் குணம் என்னவென்றால் தலை எந்த நேரமும் கனமாகவே இருக்கும். குனியும் போது, நிமிரும் போதும் முகம் இசிவு காணும்.
♦7. அனுதப வாதம்
இதன் குணம் என்ன வென்றால், வாய் பேச்சில் குளறுபடியும், சில நேரத்தில் பேசமுடியாத நிலையும், வாயில் பனி துளிபோல் அடிக்கடி கொப்பளித்தும் இருக்கும்.
♦8. தம்ப வாதம்
சிறுநீர் சரியான முறையில் இறங்காமல் தடைபட்டு, குடைச்சல், எரிச்சல் போன்ற உபாதைகள் இருக்கும்.
♦9. அட்டலிகை வாதம்
இதன் தாக்கம் என்னவென்றால் அடிவயிறு ஊதி கனத்து இருக்கும். உடல் முழுவதும் நடுக்கம் உண்டாகும்.
♦10. ஆனாக வாதம்
அறிவை மந்தம் ஆக்கும், உடல் சுறுசுறுப்பை கெடுத்து விடும்.
♦11. பீலிகை வாதம்
உடல் எல்லாம் சிறிது பெரிதான கொப்பளங்களாக உண்டாகி, அழகற்ற கரடுமுரடான உடலை தரும்.
♦12. அர்த்திக வாதம்
நாவை இயக்க விடாமல், பேச முடியாமல், காது கேட்க விடாமல் புலன்களின் சக்தியை இழக்க வைக்கும்.
♦13. விந்து வாதம்
இதன் தாக்கம் என்ன வென்றால், அறிவை அழித்து மந்தமாக இருக்க வைக்கும். உடல் நடுக்கம், வாயில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும்.
♦14. ஊர்தம்ப வாதம்
மார்பு அடைப்பு ஏற்படும். உள்ளிருந்து வாய்வின் அழுத்தம் மேல் நோக்கி எழும்பி மூச்சு திணறல் ஏற்படும்.
♦15. சுத்த வாதம்
வயிறு பொருமல், வயிற்று கடுப்பு, மலம், ஜலம் இரண்டும் வெளியேற சிரமம், மேலும் மேலும் குறைந்து கொண்டே வரும்.
♦16. செவிட்டு வாதம்
புறக்காரணம் ஏதுமின்றி தானாகக் காது வலி உண்டாகி, காது கேட்காமல் நாளடைவில் செவிடாக மாறிவிடும்.
இருகாதிலும் இரத்தங் கட்டி அதிரும்.
♦17. கன்டக வாதம்
இந்த வாதம் கண்டவர்களின் உடலை தூக்கி போடுவதுபோல் உடல் நடுக்கம் ஏற்படும். பல்லை கிட்டிக்கொள்ளும்.
♦18. மூட்டு வாதம்
உடலில் உள்ள சந்துகளில் அழுக்கு உண்டாகி மூட்டுகள் கரகரக்கும், இயங்கும் மூட்டுகள் அனைத்தும் நாளடைவில் இயங்காமல் போய் விடும்.
♦19. குத்து வாதம்
உள்ளங்காலில் மட்டும் குத்தல், குடைச்சல், வலி ஏற்படும்.
♦20. இடுப்பு வாதம்
இடுப்புளங்கு கடுத்துக் குனிய,நிமிர விடாது இருக்கும்.
♦21. சந்து வாதம்
கை, கால்கள் மூட்டு சந்துகளில் குத்தல் குடைச்சல், வலி கடுப்பு உண்டாகும்.
♦22. கெண்டை வாதம்
நிற்கும்போதோ நடக்கும்போதோ திடீரென்று காலின் கெண்டைச் சதையில் ஏதோ கனமான பொருளை மாட்டி விட்டது போல அசைவற்ற நிலைக்குக் கொண்டு வந்து உடலை முன்னால் தள்ளி கீழே விழ வைக்கும்.
♦23. சதி வாதம்
திடீரென்று புறங்கழுத்தில் பலத்த அடி தாக்கியதுபோல் தாக்கம் கொண்டு தரையில் தள்ளி நிலைகுலைந்து விழ வைக்கும்.
♦24. முழங்கால் வாதம்
வீக்கம் உண்டாகி முழங்கால் கனம் கண்டு ஓயாத வலி நிலையில் கடுப்புடன் நடக்க முடியாமல் தாக்கம் இருக்கும்.
♦25. தொம்பை வாதம்
இதன் தாக்கம் என்ன வென்றால் தொடை பகுதி மட்டும் குடைச்சல், கடுப்பு இருந்து கொண்டே இருக்கும்.
♦26. ஊசி வாதம்
புட்டப்பகுதியில் உள்ள எலும்புகள் வலி, குடைச்சல் காணும். ஓரிடத்தில் அமர இயலாத படிக்கு வின்னென்ற வலி தொடர்ந்து இருக்கும்.
♦27. மண்டை வாதம்
தலை முழுவதும் உள்ள நரம்புகளில் வீக்கம் வலி, இசிவு போன்ற உபாதைகள் இருக்கும்.
♦28. கோரை வாதம்
இந்த வாதம் கொண்டால் இடுப்பில் எந்த நேரமும் கடுப்பும், வலியும் இருந்து கொண்டே இருக்கும்.
♦29. அடி வாதம்
உடலில் சர்க்கரை சத்தை உயர்த்தி, உடலை மெலிய வைத்து உடலில் குத்தல், வலி கானும்.
♦30. குடல் வாதம்
குடல் புரண்டு, குமுறல் ஏற்பட்டு வாயுவின் ஓட்டத்தால் வயிற்றினுள் பெருத்த சப்தம் ஏற்படுத்தும். பசி எடுக்காது.
♦31. உருத்த வாதம்
மார்பில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட திணறல் உண்டாகும்.
♦32. அசையா வாதம்
உடம்பு கனத்து நரம்புகள் இழுத்துக் கொள்ளும். எவ்வேலையும் செய்ய இயலாத அளவிற்கு வலி உண்டாகும்.
♦33. முக வாதம்
முகம் முழுவதும் விடாத கடுப்பு, முகம், தாடை கோணல் ஏற்பட்டு கண்கள் எந்நேரமும் சிவந்து காணப்படும்.
♦34. நேத்திர வாதம்
இதன் தாக்கம் என்னவென்றால் மண்டை முழுவதும் வலியும், கண்கள் எந்த நேரமும் சிவந்தே காணப்படும்.
♦35. கன்ன வாதம்
கன்னத்தில் காதோரம் வீக்கம் உண்டாகி பின் கட்டியாக மாறி உடைந்து காதின் வழியாக சீழ் வரும். சுள்ளென்ற வலி ஏற்படும்.
♦36. சர்வாங்க வாதம்
உடல்முழுவதும் வலி உண்டாகி நடையை முடக்கி, காலப்போக்கில் படுக்கையில் கிடத்தும்.
♦37. சக்தி வாதம்
வயிற்றில் எந்நேரமும் பொருமல் ஏற்பட்டு, வாந்தி ஏற்படும். உடல் திறனிழக்கும்.
♦38. பிரசண்ட வாதம்
இந்த வாதம் கொண்ட உடம்பு மரம் போல் நிமிர்ந்து வளையாமல் இருந்து உடல் முழுவதும் வலி ஏற்படும்,
♦39. நீர்கண்ட வாதம்
புறங்காலும், முதுகும், எரிச்சலுடன் வலியும், உண்டாகும். மிகுவியர்வை உண்டாகும்.
♦40. மாறு வாதம்
இத்தாக்கம் கண்ட உடலின் கை கால்கள் எதிர்த்திசையில் மறுபக்கமாக இழுத்துக் கொள்ளும்.
♦41. சன்னி வாதம்
முகத்தில் வியர்வை காணும். உடல் முழுவதும் கடுப்பு, வலியும், மயிர் கூச்சமும் உண்டாகும்.
♦42. மகோதர வாதம்
இந்த வாதம் கண்ட உடல், எந்நாளும் மேல் மூச்சு வாங்கிக்கொண்டே இருக்கும். வயிறு பெருக்கும்.
♦43. சக்கர வாதம்
இதன் தாக்கம் என்னவென்றால், நடக்கும் போது மட்டும் தலைசுற்றல் ஏற்படும்.
♦44. சூத்திர வாதம்
ஆசனவாயில் வலி நமைச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும். கிருமிகளும் உண்டாகும்.
♦45. ரத்த வாதம்
ஆசனவாயில் குழாய் போன்ற மலவாய் குடல் வெளியே தள்ளி விடும், அதன் மூலம் இரத்தப்பெருக்கு, வலி உண்டாகும்
♦46. முயலக வாதம்
இது தாக்கம் கொண்ட உடம்பு திடீரென நீரையோ, நெருப்பையோ பார்த்தவுடன் உடலை தூக்கி போடுவது போல் உண்டாகி உடனே வலிப்பு ஏற்பட்டு விடும்.
♦47.கூனிய வாதம்
உடம்பு கடுப்பு, வலி கண்டு தூக்கம் என்பதே வராது.
♦48. தனுர் வாதம்
அடிக்கடி தேகத்தை வில்போல் வளைத்து வியர்த்து நாக்குப் பல்கிட்டி மேல்மூச்சு காணும். உடல் வலிப்பு ஏற்படுவது போல் உணர்வுகளை தரும். சில நொடிகள் மூளை செயல்படாத நிலையில் இருந்து பின் இயங்கும். உடல் அந்நிலையில் வளையும்.
♦49. உள் வாதம்
உடல் உறுப்புகளில் வளைவு உண்டாகி எந்நேரமும் அதிக வலி இருந்துகொண்டே இருக்கும்.
♦50. கண்ட வாதம்
இதன் தாக்கம் என்ன வென்றால், எப்போதும் இனம்புரியாத ஒரு மனச்சோர்வு ஏற்பட்டு, அழுகை குணத்திலே மனம் இருக்கும். முகம் களை இழக்கும்.
♦51. குண்டல வாதம்
வயிற்றை கட்டியது போல் இழுத்து பிடிக்கும். வயிறு முழுவதும் வலி உண்டாகி கொண்டே இருக்கும்.
♦52. கேசரி வாதம்
உடலில் உள்ள தோல் யானைத்தோல் போல் தடித்து, தினவு ஏற்படும்.
♦53. எம வாதம்
உடல் முழுவதும் இறப்பதே மேல் எனும் அளவிற்கு வீக்கம், வலி இருக்கும்.
♦54. சூலை வாதம்
வயிற்றில் இருபுற சதை இறுகும். வலி உண்டாகும். நரம்புகள் இசிவு காணும். நாவில் சுவை தன்மை குறைந்து விடும்.
♦55. சூட்டு வாதம்
உடலில் மேக நோய் உருவாகி நீர்தாரையில் நீர் கசிவு ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
♦56. மலட்டு வாதம்
ஆணுக்கு உயிர் அணு குறையும், பெண்ணெனில் கருப்பையில் கரு தங்காமல், கலைந்து கொண்டே இருக்கும்.
♦57. சுரோணித வாதம்
இவ்வாதம், பெண் உடம்பில் மட்டுமே தாக்கம் கொள்ளும். அதாவது மாதவிடாய் தொடக்கத்தில் இருந்தே, தாங்கமுடியாத வலி உண்டாகும்.
♦58. கிராணிகீர்த்தி வாதம்
இந்த வாதம் கண்ட உடல், எந்நாளும் பேதியாகும். நீர்ச்சத்து குறையும். உடல் வறண்ட சருமமாக இருக்கும்.
♦59. கேச வாதம்
உடல் எங்கும், உள்ள மயிர்க்கால்களைப் பிடித்து இழுத்தது போல தடிப்பு, வலி ஏற்படும்.
♦60. நடுக்கு வாதம்
உடல் முழுவதும் நடுக்கம் உண்டாகும், இதயபடபடப்பு உண்டாகும்.
♦61. குலை வாதம்
உடம்பின் உள் அளவு குறுங்குவதால், உடல் உள்ளே அனைத்து உறுப்புகள் வலி உபாதைகள் தரும்.
♦62. அற்ப வாதம்
உண்ட உணவு செரிக்காத நிலையில் தொப்புளை சுற்றி வலி உண்டாகும். சில நாட்கள் நீடிக்கும்.
♦63. மார்பக வாதம்
மார்பகம் முழுவதும் உருண்டை வடிவத்தில் வீக்கம் உண்டாகி சீழ்பிடித்து புண்ணாகும். வேதனை அளவுகடந்தாற்போல இருக்கும்.
♦64. அத்திவாதம்
இதன் தாக்கம் என்ன வென்றால் நாக்கு சுவை தன்மையை இழந்து விடும்.
♦65. வஞ்சி வாதம்
உடல் சோர்வடைந்த உறக்கம் அதிகமாக ஏற்படும்.
♦66. விடை வாதம்
இதன் தாக்கம் என்ன வென்றால், மலம் வெளியேறுவது நாட்கணக்கில் நின்றுவிடும். பெருங்குடல் இறுகும். எழுந்து உட்கார முடியாது.
♦67. உலர்ந்த வாதம்
உடலில் தோல்கள் வறட்சி கண்டு உடலெங்கும் அதிக வலி, எரிச்சல் உண்டாகும். உடல் மயிர்க்கால்கள் வெதும்பி சுருளும்.
♦68. மர வாதம்
உடல் மெலிந்து, உணர்வற்ற நிலையி்ல் சிரங்கு, குஷ்டம், போன்ற உபாதைகள் தேடி வரும்.
♦69. நடுக்கர வாதம்
வயிற்றினுள் நடுவில் ஒரு முழு வாழைக்காயை நிறுத்தி வைத்ததுபோல் உணர்வுடன் இறுகிப்போய் இருக்கும். சொல்லமுடியாத வலி ஏற்படும்.
♦70. புற வாதம்
திடஉணவு உட்கொள்ள முடியாது. வயிற்றை புரட்டுவது போல் வலி உண்டாகும்.
♦71. முடக்கு வாதம்
உடல் முழுவதும் வீக்கம் கண்டு, விரல், கால், கை வளைந்து, படுக்கையில் கிடத்திவிடும்.
♦72. புடை வாதம்
உடலில் ஆங்காங்கே புடைத்து கட்டியாக வீங்கி, பின் புண்ணாகி நெடுநாள் ஆறாமல் ஆறும்.
♦73. கடை வாதம்
உடல் நடுக்கம், வீக்கம், இதில் ஏதாவதொன்று ஏற்பட்டு அற்பமான வலி உண்டாகும். வாதங்களில் கடைசி வாதம்.
♦74, துடிவாதம்
தேகத்தில் பல இடங்களில் துடித்து அடங்கும்
♦75, சாவான் கால்நடுக்கும் வாதம்
தேகம் வெதுப்பி உளைந்து கிறுகிறுத்துநடுங்கும்
♦76, அண்டவாதம்
ஒருபீஜம் வீங்கி வலித்து மேல்நோக்கி ஏறும்
♦77, ஓடுவாதம்
தேகம் மெலிந்து உளைந்து பல இடங்களும் ஓடிக்குத்திபலங் குறைந்து நாவும் பல்லும் வரளும்.
♦78, தோள்வாதம்
தோள் வீங்கி கண்டம் பிடறி வலித்துக் கடுக்கும்.
♦79, பக்கவாதம்
ஒருபுறத்தில் கையும் காலும்வணங்காதிருக்கும்.
♦80, அசீரணவாதம்
தூர நடக்க கூடாமலும்,உண்ட அசனஞ் செமியாமலும்,ஏப்பம் பரியும்.
Comments
Post a Comment