கருப்பட்டி களி

 கிராமங்களில் பூப்பெய்திய பெண்களுக்கும் பிள்ளைபெற்றெடுத்த தாய்மார்களுக்கும் கொடுக்கக்கூடிய #நிகரற்ற_கைமருந்து. *பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு, பானாட்டு" போன்ற சிறப்பு பெயர்களை பெற்ற #பனங்கருப்பட்டி_களி"

#தேவையானவை

ஓமம் - 50கிராம்,

சுக்கு - 50 கிராம்,

மிளகு 25 கிராம்

சுத்தமான தேன் 1/2 லிட்டர்,

பனங்கருப்பட்டி 1/2 கிலோ,

காய்ச்சிய பால் 200மிலி.

ஓமம், சுக்கு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து நீரில் ஊறவைத்து சக்கை நீக்கி மிளகுடன் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும், கருப்பட்டியை பாகு பதத்தில் காய்சி அரைத்த விழுதுடன் சேர்த்து நன்கு கிளறவும், வெந்ததும் அதனுடன் சுண்டைக் காட்சியை பால் சேர்த்து ஓரிரு முறை மீண்டும் கிளரவும், இறக்கி வைத்து தேன் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி பத்திரப்படுத்தவும். இதனை பூப்பெய்திய பெண்களுக்கும், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீண்டும் பெறுகிறார். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடலும் புதுப்பொலிவுடன் பளபளப்பாக கட்டுக்கோப்புடன் இருக்கும். இடுப்பு வலி, குறுக்கு வலி போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாகும். 

#மருத்துவபயன்கள் :

கருப்பட்டியில் அதிக அளவுக்கு இரும்பு சத்தும், கால்சியமும் உள்ளது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவு உள்ளதால் நீரழிவு நோயை கட்படுத்துகிறது.

கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்து உள்ளதால் உடலில் இரத்தத்தை சுத்திகரித்து உடம்பினை வலுவடைய செய்கிறது சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு அற்புத மருந்தாக செயல்பட்டு பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது. கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டு வர அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை சரிசெய்து உடம்பில் இன்சுலினை சுரக்கச்செய்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.குழந்தைகளுக்கு பாலுடன் கருப்பட்டியை சேர்த்து கொடுப்பதன் மூலம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது. பெண்களின் வெள்ளைப்படுதலை நிறுத்தி இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. பருவம் அடைந்த பெண்களுக்கும், இடுப்பு எலும்பு மற்றும் கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்கிறது. பாலுட்டும் தாய்மார்களுக்கும் கருப்பட்டி கருப்பு உளுந்து சேர்த்து களி கிளறி கொடுப்பதனால் இடுப்பு எலும்பு வலுபெறும்.சாப்பிட்ட பின்பு உணவு செரிமானத்துக்கு நல்ல பயனை அளிக்கிறது. மேலும் கருப்பட்டி பயன்படுத்தி கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என விதவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து செய்து அசத்தலாம். எனினும் நகரவாசிகளுக்கு பனங்கருப்பட்டியின் பலன் இன்று வரை தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது.


#தரமான_கருப்பட்டியை_கண்டறிவது_எளிது.

*1. தரமான கருப்பட்டி நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவை நிறைந்திருக்கும்.

தரமற்ற கருப்பட்டியில் மணமற்று சர்க்கரையின் இனிப்பு சுவையை மட்டுமே உணர முடியும்.

*2. தரமான கருப்பட்டி நீரில் கரைய நேரம் எடுத்துக் கொள்ளும். தரமற்ற கருப்பட்டி சிறிது நேரத்தில் தண்ணீரில் கரைந்துவிடும்.

*3. தரமான கருப்பட்டியின் உட்பகுதியில் கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும்.

*தரமற்ற கருப்பட்டி உட்புறமும்

பளபளப்பாக இருக்கும்.

*4. தரமான கருப்பட்டி பழமையானாலும் கடினத் தன்மை மாறாமல் இருக்கும்.

*ஆனால், தரமற்ற கருப்பட்டி, சில வாரங்களில் கடினத்தன்மை இழந்து இளக ஆரம்பித்துவிடும்.*

*5. பதநீருடன் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சுவதால் தரமான கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும்.

*தரமற்ற கருப்பட்டியில் புள்ளி வராது.

*6. தரமற்ற கருப்பட்டியின் மேற்பரப்பு பளபளப்புடன் மைதாமாவு போல, தொட்டால் கையில் ஒட்டும்.*

* தரமான கருப்பட்டி #பளபளப்புடன் இருக்காது.*

"பனைமரத்தை பாதுகாப்போம்,

பலன்கள் பல பெறுவோம்".

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி