கொள்ளு உருண்டை குழம்பு

 🇨🇭#கொள்ளு_உருண்டைக் 

#கார_குழம்பு❗❓❓❓


💊 பெண்களின் வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன், 


💊மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். 


💊பிரசவ அழுக்கை வெளியேற்றும்.


🔰#தேவையானவை❓


கொள்ளு – 200 கிராம்


கா. மிளகாய் – 6


க. உளுந்து – 4 டீஸ்பூன்


து. பருப்பு – 4 டீஸ்பூன்


புளி – நெல்லிக்காய் அளவு


சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்


உப்பு – தேவைக்கேற்ப


எண்ணெய் – தேவைக்கேற்ப


🔰#செய்முறை❓🔰


கொள்ளு, க.உளுந்து, து.பருப்பு சேர்த்து ஊற வைத்து, உப்பு, கா.மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.


 அரைத்த விழுதை வாணலியில் சூடான எண்ணையுடன் போட்டு கிளறி எடுக்கவும். 


அதை சிறு சிறு உருண்டையாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும்.


 கொதித்து பச்சை வாசனை போனதும் சாம்பார் பவுடர், உருண்டைகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 


5 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி