கோடைகால கசாயம்

 கோடைக் கசாயம் 

கோடைக்காலம் வந்தாலே கோடையினால் ஏற்படும் உடல் சூடு, வறட்சி, வியர்வை. வேர்க்குரு. ஒற்றைத்தலைவலி. தோல் நோய்கள், பசி இன்மை, செரிமானம் இன்மை, அதிசாரம் என்ற வயிற்றுப் போக்கு, 

சிறுநீர் கழிக்கும்போது, மலம் கழிக்கும்போது, ஏன் மூச்சு விடும்போதும் கூட எரிச்சலோடு இருக்கும் சூழல், போன்ற பல பிரச்சினைகள் நம்மை தாக்குகின்றன. 

கோடைக் கசாயம் என்ற கோடைக்கால மூலிகை தேநீர் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை 

நெருஞ்சில் முள் ............  இரண்டு கிராம் 

அரிசி திப்பிலி ............  இரண்டு கிராம்

தனியா ............  இரண்டு கிராம்

வில்வ வேர் பட்டை அல்லது மரப் பட்டை ............  இரண்டு கிராம்

ஓமம் ............  இரண்டு கிராம்

வட்டத்திருப்பி ............  இரண்டு கிராம்


ஆகிய ஆறு பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவின் படி எடுத்து

 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு 

சிறு தீயில் நன்கு காய்ச்சி 

நூறு மில்லி கசாயமாக சுருக்கி 

இறக்கி 

வடி கட்டி 

ஒரு வேளை மருந்தாக குடித்து வர வேண்டும் 


கோடைக் காலம் முழுவதும் நாள்தோறும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகள் குடித்து வர உடல் சூடு குறைந்து குளிர்ச்சி அடையும் 

இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகை தேநீராகக் குடித்து வர உடல் குளுமை அடையும் 

கோடைக் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி உடல் வறட்சி அடைய ஆரம்பிக்கும் 

சிறுநீர் வெளியேறுவது அளவில் குறைந்து சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகமாகும் 

உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகமாகும்போது விதம் விதமான நோய்களை தோற்றுவிக்கும் 

கோடைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எரிச்சல் அதிகமாகும் 

கோடைக்காலத்தில் பெண்களுக்கு வெள்ளை படுதல் அதிகமாகி பிறப்பு உறுப்பில் அரிப்பை ஏற்படுத்தும் 

மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புகள் உடல் சூட்டினால் ஏற்படும் அரிப்புகள் உடல் சூடு சம்பந்தப் பட்ட சூதக வாய்வு வலிகள் 

அனைத்தும் இந்தக் கசாயத்தைக் குடித்து வர 

படிப்படியாகக் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும் 

யூரினரி இன்பெக்சன் என்ற சிறுநீரகத் தொற்று வராமல் தடுக்கும் 

குறிப்பாக 

ஆசன வாயில் ஏற்படும் வெடிப்புகளையும் எரிச்சலையும் அரிப்பு போன்றவற்றையும் நீக்கும் அழகான அருமருந்து இது 

இது  ஒரு மருந்து அல்ல 

இதை உணவு அல்லது மூலிகை தேநீராகப் பயன்படுத்தி கோடைக்காலத்தில் ஏற்படும் எல்லாவிதமான தாபங்களையும் சோர்வுகளையும் வேதனைகளையும் நீக்கி உடலை குளிர செய்து நலமுடன் வாழலாம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி