கீழாநெல்லி சட்னி

 👌ஆயுசு நூறு தரும்

✋ஆரோக்கியமான வாழ்வு தரும் 

*🔥அடுப்பில்லா சமையல்*


 மஞ்சள்காமாலை குணமாக்கும்

ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு, 

மாதவிடாய்கோளாறுகள் நீக்கும்

👌👍🌿🌿☘️


 அற்புத ஆற்றல் நிறைந்த 

*கீழாநெல்லிசட்னி*

☘️🌿☘️🌿☘️🌿☘️🌿🥙


      கீழாநெல்லி கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலை,  முடக்குவாதம், மலச்சிக்கல், நாட்பட்ட நுரையீரல், சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


*தேவையானபொருட்கள்* :

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


கீழாநெல்லி கீரை - 1 கப்

நறுக்கிய கொத்தமல்லி தழை - 1கைபிடி

இயற்கை தயிர் - ½ கப் 

சின்னவெங்காயம் - 8 

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்  

உளுந்து பருப்பு - 2 ஸ்பூன் 

பொ. கடலை.     - 2 ஸ்பூன்

தே.துறுவல்.       - 2 ஸ்பூன்

மிளகுத்தூள் தேவைக்கு

கொடம் புளி கரைசல் - 1 ஸ்பூன்


*செய்முறை:🌱🍃*


 கீழாநெல்லி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை தோல் உரித்து,உளுந்து பருப்பு பொ.கடலை,தேங்காய் துறுவல்,  மிளகுதூள் போட்டுபின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கீழாநெல்லி கீரையையும்,கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, இயற்கை தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.


*ஆரோக்கியபலன்*:


 இதில் கல்லீரலை பலப்படுத்தும் ஆற்றல் மற்றும் சுகர் BPக்கு சிறந்த நிவாரணியாகும். இந்த சட்னியை வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.😋👍🙏


ருதம்பராயோகாமையம்

கோவை. 8610823072


தாவரஇயல்பெயர்: Phyllanthusniruri


*இதன்மறுபெயர்கள்*: இளஞ்சியம், அவகதவாய், கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி


*வளரும்இடங்கள்:*

இந்தக் கீழாநெல்லி இந்தியாவைச் சார்ந்த தாவரம் ஆகும். அரை மீட்டருக்கும் குறைவாகத் தான் இந்தச் செடி வளரும். அது மட்டும் அல்ல ஈரத்தன்மை உள்ள மண் தான் இதன் பிறப்பிடம்.


*பயன்தரும்பகுதிகள்*: முழுத்தாவரமும் அதாவது இலைகள், தண்டுத் தொகுதி மற்றும் வேர்கள் உட்பட அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.


*பொதுவானதகவல்கள்* : கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.


இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.


தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன் படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ( எங்களது இல்லத்திலும் எனது தாத்தா காமலைக்கு மருந்தாக கீழாநெல்லியுடன்

சிலமூலிகைகள் கலந்து பாரம்பரிய மாக தந்துள்ளார்கள் நானும் இம்முறையை பின்பற்றி கீழநெல்லியை காமாலை க்கு மருந்தாக தந்து வருகிறேன்.)


இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது மிக்க குளுமைத் தன்மை கொண்டதாகும். சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. விந்துவை அதிகமாக வளர்க்கும். கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட பறித்துத் தின்னலாம். ஆனால் லேசான கசப்பு இருக்கும்.


கீழாநெல்லியின் இதர மருத்துவப் பயன்கள்:


🌿வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.


🌿கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.


🌿நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம் இது கீழாநெல்லி தைலமாகும். இதனால் உச்சி குளிர்ந்து டென்ஷன் குறையும். அது மட்டும் அல்ல முடி நன்றாக வளரும்.


🌿மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.


🌿கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும்.


🌿நீர் சுருக்கு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் சீனாக் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து இருவேளைகள் என 1 வாரம் சாப்பிட்டால் உடனே சரியாகி விடும்.


🌿கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.


🌿பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும்.


🌿சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.


🌿கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப் பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.


🌿கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.


🌿 வாலிப வயோதிகம் நீங்க வேண்டுமானால் ஓரிதழ் தாமரையுடன் சம அளவாக கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


🌿மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.


🌿விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுகிறது.


🌿கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்… அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


🌿கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.


🌿கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்.


ருதம்பரா யோகாமையம் கோவை.


🙏பகிர்வோம்... மகிழ்வோம்😊...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி