தைராய்டு

 🇨🇭#தைராய்டுக்கும்_பெண்கள்_கருப்பம் #அடைவதுக்கும்……❗❗


🇨🇭#என்ன_சம்பந்தம்……❓❓


🇨🇭#_என்ன_தொடர்பு…❓❓❓


✳ தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பமானால் குழந்தைக்கும் தைராய்டு வருமா❓


தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பியை பாதிக்கும் பிரச்சினை ஆகும். இந்த தைராய்டு சுரப்பி நமது கழுத்து பகுதியில் பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து இருக்கும். இந்த சுரப்பி தான் நமது உடலுக்கு தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த தைராய்டு சுரப்பை பொருத்து இதை இரண்டு வகைப்

படுத்துகின்றனர். 


↙#ஹைப்பர்_தைராய்டிசம்↘


இந்த வகையில் தைராய்டு ஹார்மோன் அதிகளவில் சுரந்து உடலின் ஓட்டுமொத்த செயல்பாட்டை யும் துரிதப்படுத்தி விடும். இதனால் உடலுறுப்புகளை பாதிப்படையச் செய்து விடும். 


கருவுறுதல் இந்த தைராய்டு ஹார்மோன் பெண்களின் கருவுறுதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 


எனவே கர்ப்ப காலத்தில் சரியான அளவில் தைராய்டு ஹார்மோனை பராமரிப்பது மிகவும் முக்கியம். 


இது உங்களுக்கும்

உங்கள் கரு வளர்ச்சிக்கும் நல்லது. 


தைராய்டு மற்றும் கர்ப்ப காலம் கருவில் வளரும் #குழந்தையின்

#வளர்ச்சிக்கு இந்த ஹார்மோன் பயன்படுகிறது. 


குழந்தையின் #மூளை மற்றும் #நரம்பு_மண்டலம் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. 


முதல் 2-3 மாதங்கள் வரை குழந்தையின் வளர்ச்சி தைராய்டு ஹார்மோனை சார்ந்தே இருக்கும். 


18-20 வாரம் வரை இந்த தைராய்டு ஹார்மோன் நஞ்சுக்கொடி வழியாக தாயிடமிருந்து குழந்தைக்கு செல்லும். 


12 வாரத்தில் இது செயல்பட தொடங்கி விடும். 


18-20 வாரத்தில் கருவிற்கு தேவையான தைராய்டு ஹார்மோன் முழுவதும் சுரக்கப்படும். 


🈵  பெண்களின் கருவுறுதலுக்கு இரண்டு முக்கிய ஹார்மோன் காரணமாகிறது.❓❗


👉1, க்யூமேன் குரோனிக் கோனாடோட்ரோபின் 


👉2, ஈஸ்ட்ரோஜன், 


இந்த இரண்டு ஹார்மோன் தான் இரத்தத்தில் இருக்கும் தைராய்டு ஹார்மோன். 


எனவே இந்த இரண்டு ஹார்மோன் அளவும் சம அளவில் இருப்பது ஆரோக்கியமான கருவுறுதலுக்கு உதவும். எனவே தான் கருவுற்ற நேரத்தில் தைராய்டு ஹார்மோன் அளவை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகச்சை அளிக்கின்றனர். 


↖#ஹைப்போ__தைராய்டிசம்↗


முதல் மாதத்தில் இருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை இந்த தைராய்டு ஹார்மோன் தான் கொடுக்கிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் இது தடைபட ஆரம்பித்து விடும். இதனால் இதன் மூலம் வளர்ச்சி அடைகின்ற குழந்தைகள் 

#மன_வளர்ச்சி

#குன்றிய நிலையில் இருக்கும். உடல் நிலை கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 


எனவே தாயின் தைராய்டு ஹார்மோன்  அளவு குழந்தைக்கு

மிகவும் முக்கியம். 


⭕#அறிகுறிகள்……❓❓❓


👉#ஹைப்போதைராய்டிசம் #இருந்தால்………


⏩சோர்வு, 


⏩உடல் எடை அதிகரித்தல், 


⏩மலச்சிக்கல், 


⏩கவனக் குறைவு, 


⏩தசை பிடிப்பு, 


⏩குளிரான உணர்வு 


போன்றவை ஏற்படும். ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் கருவுறுதல்  கருவுற்ற காலத்தில் உங்கள் தைராய்டு ஹார்மோனை அளவை பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். 


அப்படி ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. 


கர்ப்ப காலத்தில் இரண்டாம் பருவத்தில் ஆன்டி தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ப்ரோபைல்தையோரோசில் என்ற சிகச்சையை மேற்கொள்ளலாம். 


🔴#முன்னெச்சரிக்கை……❓


கருவுறுதலுக்கு முன்பாகவும் சரி கருவுற்ற பின்னரும் சரியான முறையில் தைராய்டு ஹார்மோனை பரிசோதித்து வருவது ஆரோக்கியமான குழந்தை பிறப்பை கொடுக்கும். 


கருவுற்ற காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டால் குழந்தை பிறப்பு பாதிப்படையும் என்பதை மறவாதீர்கள். 


💢#_அறிகுறிகள்……❓❓❓


👉மலச்சிக்கல், 


👉வாந்தி, 


👉எடை இழப்பு, 


👉சோர்வு, 


👉பயம், 


👉தூக்கம் 


போன்றவை ஏற்படும். கர்ப்ப காலம் முழுவதும் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். 


மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும். 


♦ க்ரோனிக் லிம்போசைடிக் 

தைராய்ட்ஸ் 


#நோயெதிர்ப்பு மண்டலம் தைராய்டு சுரப்பியை தாக்கி பாதிப்பை உண்டாக்கினால் அது க்ரோனிக் லிம்போசைடிக் தைராய்ட்ஸ் என்றழைக்கப்படுகிறது. 

#கருச்சிதைவு ஏற்படவும் இது வழி செய்கிறது. 


🔰#மகப்பேறு………


தைராய்டு அழற்சி மகப்பேறு ஏற்பட்ட பிறகு ஏற்படும் தைராய்டு அழற்சி 20 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இது கர்ப்ப கால 

#நீரிழிவு_நோய் மாதிரி ரெம்ப அரிதாக ஏற்படுகிறது. 


சேமிக்கப்பட்ட தைராய்டு ஹார்மோன் தைராய்டு சுரப்பியிலிருந்து வெளியேறுவதால் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த தைராய்டு சுரப்பி அதிகமாக வெளியேறி இரத்தத்தில் கலக்கும் போது ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. 


உங்கள் மகப்பேறு கால ஒரு வருடத்திற்கு பிறகு இது ஏற்படலாம். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்களின் தைராய்டு அளவு மிகவும் முக்கியம். 


♉#முக்கிய_குறிப்பு❓


சரியான தைராய்டு பராமரிப்பு தான் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமானது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி