கல்யாண முருங்கை

 கல்யாண முருங்கை மிக பழமை வாய்ந்த மரம். 


முன் காலத்தில் வீடுகளில் வளர்க்க பட்டன. மருத்துவ குணம் கொண்ட மரம், சிலர் அழகுக்காகவும் வளர்க்கின்றனர். இது பெரிய மரமாகவும் வளரும். மழை காலங்களில் இதனை குச்சிகளை வெட்டி நட்டால் எளிதாக துளிர்த்துவிடும்.


கல்யாண முருங்கை வறட்சி தாங்கி வளரும் மரங்களில் ஒன்று. தண்ணீர் தேவை அதிகம் தேவைப்படாத மர வகை, இதனால் சில இடங்களில் சாலை ஓரங்களில் காணலாம்.


இளவேனிற்காலத்தில் கல்யாண முருங்கையில் பூக்கள் தோன்றும். கவர்ச்சியான சிகப்பு நிற மலர்கள் தோன்றும். பறவைகள் தங்குவதற்கு விரும்பும் மரங்களில் இதுவும் ஒன்று. இதன் இலைகள் முயல்களுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது. சில இடங்களில் சில நேரங்களில் பட்டு புழுக்களுக்கு கூட இதன் இலைகளை உணவாக பயன்படுத்துகின்றனர். 


கல்யாண முருங்கை இலையை இளம் கன்றுக்குட்டிகளுக்கு கொடுப்பதால் குடல் புழு பிரச்சனை நீங்கி திடமாக வளர ஆரம்பிக்கும். முயல் வளர்ப்போர், இதன் இலைகளை முயலுக்கு உணவாக கொடுத்தால் குடல் புழுக்கள் தானாகவே வெளியேறும்.


கல்யாண முருங்கை மரம் எளிதான எடையுடன் அதே சமயம் உறுதியாகவும் இருப்பதால், அக்காலங்களில் கடலில் கட்டுமரம் மாக பயன்படுத்தினர். அக்காலத்தில் பெண்கள் அணியும் ஹீல்ஸ் செருப்புகள் செய்ய இந்த மரத்தை அதிகமாக பயன்படுத்தினர்.


கல்யாண முருங்கை இலைகள் பெண்கள் கர்பப்பை சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. கருத்தரிப்பில் முக்கியமான பங்கு அளிக்கின்றன. இவைகள்தான் இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயர் வரக்காரணம்.


கல்யாண முருங்கையின் மருத்துவ குணத்திற்காக ஒவ்வொருவரும் தங்களது வீட்டிலும் தோட்டத்திலும் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய பாரம்பரியம் மிக்க மரமாகும்.


நன்றி ; தங்கராஜ்.


*********************************


கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண முருங்கை. பெண்களுக்கு பெண்தன்மையை அளிக்கும் ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் மிக சிறப்பான கீரை. ஏனேனில் அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் இவர்களை அண்டாது. அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த கல்யாண முருங்கை.


நன்றி ; ராமகிருஷ்ண விஸ்வநாதன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி