மூலம்
மூல நோய் வருவதற்கான காரணமும்
வந்த நோய் தீருவதற்கான வைத்தியமும்
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால்
எப்போதும் உடலில் வெப்பம் அதிகரித்து இருந்தால் எளிதாக மூல நோய் வந்துவிடும்
வயிற்றுப் பொருமல் மற்றும் அடிக்கடி தலை வலி ஏற்பட்டாலும் வாயில் துர்நாற்றம் வந்து விட்டாலும் வியர்வையில் அதிக நாற்றம் வீசினாலும் மூல நோய் வருவதற்கான அறிகுறிகளாகும்
பசி உணர்ச்சி இல்லாமல் இருந்தால் ஆட்டுப்புழுக்கை போல் இறுகி வறட்சியாக மலம் வெளியானால்
வரமூலம் வந்து விட்டது என புரிந்து கொள்ள வேண்டும்
மூலநோயை உடலில் ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்
அதிகாலை எழுந்ததும் சுடவைத்து ஆறிய இதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை முந்நூறு மில்லிக்கு குறையாமல் குடித்துவந்தால் மலஜலம் எளிதாக கழியும்
உடலின் வெப்பம் நீங்கும் மலச்சிக்கல் விலகி மூல நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு எளிய வழிமுறை இதுவாகும்
மூல நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் காலையில் குடிக்கும் வெந்நீருடன் இரண்டு கிராம் கடுக்காய் பொடியை கலந்து குடித்து வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் மூல நோய் வெகு எளிதாக குணமாகும்
வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் எந்த வயதிலும் மூல நோய் வராது இது உறுதி
தினம்தோறும் மதிய உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து கொண்டால் மூல நோய் வருவதைத் தடுத்து கொள்ளலாம்
தினந்தோறும் பப்பாளி பழம் வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒரு பழ வகைகளை உட்கொள்வதன் மூலமும் மூல நோய் வருவதைத் தடுத்து கொள்ளலாம்
மூல நோய் வந்து விட்டால் அதற்கான மூலிகை வைத்தியங்களில் சில
நாயுருவி இலையை மைபோல் அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து இதை நல்லெண்ணெயில் குழைத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்
நாயுருவி இலையை இடித்து பத்து மில்லி சாறு பிழிந்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இதை தினந்தோறும் காலை வேளையில் குடித்து வந்தால் பத்தே நாட்களில் மூல நோயின் தீவிரம் முழுமையாக குறையும்
பிரண்டையின் இளம் கொழுந்தை நெய்யில் வதக்கி இதை நன்றாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மற்றும் வரமூலம் போன்ற அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகி விடும்
கோவை தண்டை இடித்து சாறு பிழிந்து இதில் பத்து மில்லி எடுத்து ஆட்டுப்பாலில் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் மூலச்சூடு தணியும் மூல நோய் விலகும்
கற்றாழையின் சோற்றை எடுத்து ஏழுதரம் கழுவி இதில் ஒரு கைப்பிடி எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற உஷ்ணம் தனியும் இதன் மூலம்
மூல நோயும் முழுமையாக குணமாகும்
துத்தி இலையுடன் பாசிப்பயிறு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் துருவல் சிறிது சேர்த்து இதை பொரியலாக செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் அடியோடு விலகும்
குப்பைமேனிக் கீரையை பொரியல் செய்து சாப்பிடாலும் அல்லது இதை சூப்பாக செய்து பருகி வந்தாலும் எந்த வயதிலும் மூல நோய் வரவே வராது
மூலம் பவுத்திரம் முற்றிய நிலையில் இருந்தால் அதற்கான மூலிகை வைத்தியம்
அரிசித் திப்பிலி ஐம்பது கிராம் ஆனைதிப்பிலி ஐம்பது கிராம் குப்பைமேனி நூறு கிராம் இவைகளை அளவுகளின் முறைப்படி இடித்து பொடி செய்து இதை ஒன்றாகக் கலந்து இதில் ஐந்து எடுத்து பசு நெய்யில் குழைத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து விதமான மூல நோய்களும் முழுமையாக விலகிவிடும்
சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு இதை நன்றாக மை போல அரைத்து பசும் வெண்ணெயில் குழைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர மூலக்கடுப்பு மூலத்தில் ஏற்படும் வீக்கம் அரிப்பு மற்றும் தினவு போன்ற மூலத்தால் ஏற்படுகின்ற அனைத்து தொந்தரவுகள் நீங்கும்
துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோயின் தீவிரம் பத்தே நாட்களில் முழுமையாக விலகிவிடும்
ஒரு முக்கிய குறிப்பு
மூல நோய்க்கு மூலிகை மருத்துவத்தை கையாளும் பொழுது உப்பு புளி காரத்தை கட்டாயமாக உணவில் குறைத்துக் கொண்டு பால் மோர் தயிர் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உணவில் சேர்த்து கொண்டால் மூலநோய் எளிதாக குணமாகும்
வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
சித்தர்களின் சீடன்
Comments
Post a Comment