காது இரைச்சல்

 🇨🇭#காதில்_ஓயாத_இரைச்சல்……


🇨🇭#காது_மந்தம்_எதனால் 

#வருகிறது❓❓❓❓


💢 காதில் கேட்கும் முழக்கத்துக்கு #Tinnitus என்று பெயர். வெளியில் சத்தம் இல்லாதபோது காதின் உட்புறத்தில், இது கேட்கும். இது மென்மையாகவோ, ஓசை அதிகமுள்ளதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். 


 சிலருக்கு இரவு நேரம் மட்டும் இரைச்சல் கேட்கலாம். இரவு நேரத்தில் புறச் சூழல் அமைதியாக உள்ளதால் இதை தெளிவாக உணருவார்கள்.


சில நேரம் காதுக்குள் காற்று அடைத்தது போன்றும், தண்ணீர் காதில் அடைத்தது போன்று மந்தமாக இருக்கும், காதில் முழக்கம், செவித் திறன் குறைவு, தலை சுற்று, வாந்தி போன்றவை காணப்படலாம். சிலருக்கு ஒரு சில நிமிடங்களே இருக்கும், மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் கூட தொடர்ந்து இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.


⭕#காரணம்_என்ன❓


* செவி அழற்சியின் காரணமாகவும், செவியில் மெழுகு அடைவதாலும் அதிக ஓசையுடைய ஒலிகளைக் கேட்பதால், Meniere's Disease என்று சொல்லக்கூடிய உள்செவிப் பிரச்சினை காரணமாகவும் ஏற்படும்.


* மது அருந்துதல், அதிகக் காபி / டீ குடித்தல், வேதியல் மாத்திரைகள் சாப்பிடுதல் காரணமாக ஏற்படலாம்.


* செவித் திறன் குறைவாக இருப்பவர்கள் இரத்தஅழுத்தம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். மூளையை ஸ்கேன் எடுத்துக் கட்டிகள் உள்ளனவா என்றும், இரத்தநாளக் கட்டிகள் உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும். 


* மன அதிர்வு, மன அழுத்தம், ஓவ்வாமை பிரச்சினைகள் போன்ற காரணங்களால் காதில் ஓயாத இரைச்சல், காது மந்தம் ஆகியவை ஏற்படலாம். 


🇨🇭#இதற்கு_மருந்து_செய்யும்_முறை❓


💊 தூதுவேளை இலைகளை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் இடித்து 30 சொட்டு சாறு எடுக்க வேண்டும். நல்லெண்ணெய் செக்கு எண்ணெய் 30 மில்லி, முதலில்  நல்லெண்ணையை சூடு படுத்தி அதில் முப்பது சொட்டுகள் தூதுவேளை இலை சாறு ஊற்றி சிறு தீயில் காய்ச்சி பொரிந்து சல சலப்பு சத்தம் அடங்கி விட்டபின் 

தைலமாக்கி இறக்கி வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும். முறுக விட்டு விடக் கூடாது. 


💊#பயன்படாடு……❓


நோய் உள்ள காதில் இரவு படுக்கப் போகும் முன்னர் மூன்று சொட்டுகள் தூதுவேளைத் தைலத்தை விட்டு ஒரு பஞ்சு வைத்துக் கொண்டு இரவில் தூங்கி விடலாம். காலையில் எழுந்து பஞ்சை எடுத்து விட்டு காதை பருத்தி துணியால் துடைத்து விட வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வர பத்தில் இருந்து முப்பது நாட்களுக்குள் காது இரைச்சல் மற்றும் காது மந்தமாக இருப்பவர்களுக்கு காது கேட்க ஆரம்பித்து விடும். 


🇨🇭#கை_மருந்துகள்❓


💊* தூதுவளை கீரையை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் குடிக்கலாம். தூதுவளை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை ஒரு ஸ்பூன் அளவு  வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.


💊* தும்பைப்பூ, சுக்கு, காயம் ஆகியவற்றைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.


💊* கடுகை நன்கு அரைத்து, அதைக் காதுக்குப் பின்னால் பற்று போட்டு வைக்கலாம்.


💊* பூண்டின் தோலை உரித்துத் தலைப் பக்கம் கிள்ளிவிட்டுக் காதில் வைக்கலாம், காதினுள் நுழையாத வண்ணம் பெரிய பூண்டாக தேர்வு செய்யவும்.


💊* தேனுடன் துளசிச் சாற்றைக் கலந்து குடிக்கலாம்.


💊* அரிசித் தவிடு எடுத்து ஒரு கைக்குட்டையளவு துணியில் கட்டி ஓடு (உடைந்த ஒட்டை) அடுப்பில் போட்டுச் சுட்டு அதைத் தவிட்டுடன் வைத்துக் கட்ட வேண்டும். ஓட்டில் உள்ள சூடு தவிடு கைகுட்டையை தாண்டி தெரியும் அந்த சூடு பொறுக்கும் அளவில் காதைச் சுற்றி ஒத்தடம் கொடுக்கப் பலன் கிடைக்கும்.


💊* வெள்ளைப் பூண்டு, மிளகு இரண்டையும் இடித்துத் துணியில் வைத்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். ஒரு துளி காதில் விட, முதலில் எரியும் பின் குளிர்ந்துவிடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி