சித்த வைத்தியம்
சித்தவைத்தியம் = சித்தம் + வைத்தியம்.
சித்தத்தை சிரசில் வைத்து இயம்புவது.
ஆம் "சத்" என்ற ஜீவனை மனதில் நிறைத்து "நிஷ்டை" என்ற மனம் இயங்கா நிலையை வைத்து இயம்பும் நிலையை எய்தினால் , புருவமையத்தில் "சத்" சித்தாகும்.
அவ்வாறு நிலையாய் நீடித்திருந்தால் அதுவே மாமருந்தாம் அமிர்தமாம்.
இவ்வமிர்தத்தை சாதகன் அருந்த உடல் பிணி தீரும்.
பசிப்பிணி அகலும். தீவினைப்பதிவுகள் விலகும்.
பூரணமாம் சமாதி கைகூடும்.
பிறவிப்பிணி அகலும்.
இதுவே சித்தவைத்தியம் செய்யும் சேவை.
உணர்வோம், மரணத்தை வென்று மரணமிலா பெருவாழ்வை அடைவோம்.
Comments
Post a Comment