வீடு ஒரு கல்விக்கூடம்

 உலகம் என்ற பல்கலைகழகத்தில் உறவுகள் என்ற பேராசிரியர்களால்  வாழ்க்கை எனும் பாடம் பயில்கிறேன். 

வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என உணர்ந்தேன். நிரந்தரம் எதுவென அறிந்தேன் அதுவே என்னுள் என்றும் எனைக்காக்கும் ஆத்மனென...என் உறவு,

சொந்தம்,பந்தம் என யாதுமாகி என்உடலில் நின்றவனே என் உடமை. என் உடலே அவன் உறையும் ஆலயம் என தெளிந்து உடலைப்பேணி உயிரைக்காக்கும் பொருட்டு தேட வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் கற்று சித்தவித்தை பெற்று உள்சுவாசமாம் பிராணாயாமத்தை அனுஷ்டிக்க அடையலாம் இறைவனின் பாதத்தை என சித்தவித்தை பயிற்சி தொடர்கிறது. 

வாழ்வும் நல்வண்ணம் மலர்கிறது... 

மனமென்னும் மாயையே உலகை படைக்கிறது, உலகை பேணுகிறது, உலகை அழிக்கிறது ஈசனென்ற ஆத்மனின் உயிராற்றல என்ற சக்தியினால்... 

ஆவதும் மனதாலே அழிவதும் மனதாலே... நல்ல ஞான மனம் முக்தி மோட்சத்தை அருளும், சகுனி மனம் அழிவென்ற மாரணத்தை திணிக்கும். மரணமா? மோட்சமா? என்ற கல்வியை உலகில் பலகலைகழகத்தில் கற்றுணர்ந்த பாடம் தெளிவுதரும். 


ஆசை கொண்டு அழிந்தோர் கோடி,கோடி, ஆணவ,அதிகாரத்தால் மாண்டோர் கோடி,கோடி... 

மகானாக உயர்ந்தோர் சில நூறு... 

தெரிந்து தெளிந்து வாழ்வோம் 

உள்மெய் அறிந்து உய்வோம்.

 ஆத்ம வணக்கம். 

ஓம் உலக சாந்தி! ஓம் உலக சாந்தி! ஓம் உலக சாந்தி!

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி