கௌமாரம் - ஞான விளக்கம்
அன்பு சகோதரரே, கௌமாரம் என்பதன் விளக்கம் கூறுகிறோம் கேளுங்கள்.
"கௌ" என்பது கௌவிக்கொள்ளுதல் அதாவது இறுக பிடித்துக் கொள்ளுதல் என்பதாகும். மாரம் என்பது ஜோதி என்பதாகும்.
ஜோதி என்பது எண்ணெயிலிருந்து உண்டாகும்.
எண்ணெய் என்பது விதையிலிருந்து உண்டானது.
எள்ளில் எண்ணெய் போல் நமது சுக்கிலமாகிய விதையிலிருந்து நம்முடைய பிராணக்காற்றை ஊதிக்கட்ட உள்ளிலே ஜோதியை காணலாம்.
சுக்கிலமாகிய விதை குமாரக்கடவுள் என்று பொருள்படும்.
அதாவது ஜீவனாகிய சிவனில் உள்ள நெருப்பாகிய வெப்பத்தால் உண்டாவது சுக்கிலம்.
கந்து என்ற நெருப்பின் மூலம் உருவாவதால் 'கந்தன்'
கார்த்திகை என்ற கார் இருளாகிய மாயையாகிய உடலின் உணர்வினால் எற்படுவதால் "கார்த்திகேயன்".
"கு" என்ற ஜீவகாந்த சக்தியின் வடிவாய் "மாரன்" என்ற சுக்கில ஒளியாய் விதையாகிய பிரம்மம் எற்பட்டு பிறப்பில்லா விதை எனவே " குமரன்".
செந்தூர் என்ற சிரசில் குடிகொண்டதால் செந்தில் வேலன்.
உடலாகிய கோயிலில் பார்வதி என்ற மனத்தால் பணி என்ற வேலை செய்து பெற்ற பணமாகிய சுக்கிலமாகியபடியால் "வேலன்".
ஆக எம்பெருமானாகிய பிரம்மக்கடவுளாகிய சுக்கில பிரம்மத்தை கௌவிக் கொள்கின்ற தத்துவம் " கௌமாரம்"
இந்த விளக்கம் ஞானத்தால் விளையும்.
எம்பெருமான் சுப்ரமணியனுக்கு (விதையாகிய சுக்கிலம்) பிறப்பு, இறப்பு இல்லை.
எக்காலத்திலும் அண்டசராசரங்கள் எல்லா உயிர்களிலும் நிறைந்த பிரம்மம் "விதையாகிய சுக்கிலம்"
பிறப்பு என்பது இதனாலாகும்.
இறப்பை தவிர்க்க சுக்கிலத்தை போஷிக்கும், இரட்சிக்கும் வித்தையாகிய "சித்தவித்தை" கற்றுணர்ந்தால் இது புரியும்.
இல்லையெனில் "கௌமாரம்" என்றால் என்ன? என்று விளங்காமல் அதை படிக்கும் நிலை நிலவும்.
ஓம் உலகசாந்தி
இறைஉணர்வோன் சங்கர்
Comments
Post a Comment