மத்தக கல்வி
ஆதியும்,அந்தமும் இலா அருட் பொருஞ்சோதியாய் அவனவனில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை ஒலியாய் ஓம்காரமாய் செவிமடுத்து, ஒளியாய் ஜோதி சொரூபத்தை தரிசித்து மரணமிலா பெருவாழ்வை பெற்ற மகான்கள் வாழ்ந்த பூமியில், பொன்னும், பொருளும்,ஆட்சியும்,அதிகாரமும் மட்டுமே பிரதானம் என்ற மேற்கத்திய எச்சில் கல்வியை ஊடகங்களினால் மனதில் மூளைச்சலவையால் பதித்து அதன்படி நடக்கும் இப்பேதைகள் வாழ்வின் ஒவ்வொரு அசைவினிலும் இராகத்துவேசம் என்ற விருப்பு, வெறுப்பின் மூலம் இப்புவியை வாழத்தகுதியற்ற அணு ஆயுதகிடங்குகளாய் மாற்றிய அவலம் மாற மத்தகக் கல்வியாம் தவமும்,தானமும்,தர்மத.தையும் கற்று தன்னுள்ளே உறையும் ஏக இறைவனை தரிசிக்க கற்றுணர்வீர் சித்தவித்தையை...
நீவீர் கற்ற கல்வியாகும் ஈசனை புறத்தில் போக்கும் புறம்போக்கு கல்வியினால் நீர் அடைந்தது நோயும் மன உளைச்சலும் மட்டுமாகும்.
அன்பை உணர்ந்து , ஆனந்தத்தில் இலயித்து ஆண்டவனின் பெருங்கருணையான இந்த ஜீவனையும், ஜீவிதத்தையும் பெறற்கரிய பேராய் மாற்ற கற்றுணர்வீர் திருக்குறள், திருமந்திரம், திருப்புகழ், திருவாசகம், திருவருட்பா... தமிழால் கற்பீர்... தம்மை உணர்வீர்...
Comments
Post a Comment