தமிழின் சிறப்பு
தமிழில் அநாகரீகமாக பேச முடியுமா?
முடியாது.
1) தேவரடியாள் - மனம் என்ற பெண் உடலில் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அடியாளாக இருப்பதால் தேவரடியாள்.
2 ) கூத்தியாள் - சிவனாகிய தில்லை நடராசர் நம் உடலிலே கூத்தாடுவதால் நாம் இயங்குகிறோம். எம்பெருமான் நடராசனுடன் மனமென்ற பெண் ஆனந்தக் கூத்தாடுவதால் கூத்தியாள்.
நடராசன் - ஆனந்தக் கூத்தன்.(நடு நாடி)
சிவகாமி அம்மை - இடநாடி
பார்வதி - பிங்கள நாடி - வல நாடி.
3) மடையன் - தன்னுள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்ற ஜீவசக்தியாகிய வாயுவை மடைமாற்றம் செய்து தன்னுள்ளே சேமிக்கும் மடையை ஏற்படுத்தாதவன் "மடையன்"
4) முட்டாள் - பிரம்மரந்திரமாகிய புருவமையத்தை நடுநாடியை பிராணாயாமத்தால் முட்டாதவன் "முட்டாள்".
5) புரம்போக்கு - தன் ஜீவனாகிய வாயுவை ஜீவகாந்த ஆற்றலை புரத்தில் போக்கி மரணமடைபவன் - " புரம்போக்கு"
பன்ணாடை - தேங்காய் மட்டை அல்லது பனை மட்டையை வடிகட்ட உபயோகித்து அதிலுள்ள கெட்டவைகளை பன்ணாடையால் பிடித்து அகற்றுவர். வாழ்வில் தீயவைகளை மட்டுமே பற்றி வாழ்பவர்களுக்கு " பன்ணாடை" என்று பெயர்.
இதுபோல் எண்ணற்ற வார்த்தைகள் ஞானத்தை போதிக்க ஞானப்பாதையை அடையாதவர்களை திட்டும் போது அவைகள் சிறந்த பொருளை கொண்டுள்ள வார்த்தைகளாம்.
தமிழ் ஒருபோதும் தவத்தை வழுவாத மொழி. தமிழ் இந்த பூமியில் உள்ளவரை ஞானம் துலங்கும். தமிழ் மொழி அழிந்தால் உலகம் அழியும்.
தமிழனே விழித்துக்கொள்...
Comments
Post a Comment